மாநில செய்திகள்

இந்தியாவில் இருந்து காங்கிரஸ் கட்சி காணாமல் போகும் - காரைக்கால் பாஜக பிரசார பொதுக்கூட்டத்தில் அமித்ஷா + "||" + Congress party to disappear from India - Amit Shah at BJP campaign rally in Karaikal

இந்தியாவில் இருந்து காங்கிரஸ் கட்சி காணாமல் போகும் - காரைக்கால் பாஜக பிரசார பொதுக்கூட்டத்தில் அமித்ஷா

இந்தியாவில் இருந்து காங்கிரஸ் கட்சி காணாமல் போகும் - காரைக்கால் பாஜக பிரசார பொதுக்கூட்டத்தில் அமித்ஷா
இந்தியாவில் இருந்து காங்கிரஸ் கட்சி காணாமல் போகும் என்று காரைக்கால் பாஜக பிரசார பொதுக்கூட்டத்தில் அமித்ஷா தெரிவித்துள்ளார்.
புதுச்சேரி,

தமிழகம் வந்துள்ள மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, இன்று காரைக்கால் பாஜக பிரசார பொதுக்கூட்டத்தில் பங்கேற்று பேசினார். 

அப்போது பேசிய அவர், “காங்கிரசில் குடும்ப ஆட்சியே நடைபெறுகிறது. புதுச்சேரியில் காங்கிரஸ் ஆட்சி தானாகவே கவிழ்ந்து விட்டது. பொய் சொல்பவர் விருது கொடுக்க வேண்டுமானால் அது நாராயணசாமிக்குத்தான் தர வேண்டும். புதுச்சேரி மட்டுமல்ல ஒட்டுமொத்த இந்தியாவிலும் காங்கிரஸ் கட்சி காணாமல் போகும். வரும் தேர்தலில் புதுச்சேரியில் பாஜக தலைமையிலான ஆட்சி அமையும். புதுச்சேரி இளைஞர்களில் 75% வேலையற்றவர்கள், நீங்கள் தேசிய ஜனநாயக கூட்டணி அரசாங்கத்திற்கு வாக்களித்தால், நாங்கள் வேலையின்மை விகிதத்தை 40% க்கும் குறைப்போம்

புதுச்சேரியில் ஊழலை வளர்க்கும் வேலையை மட்டுமே நாராயணசாமி செய்தார். மக்கள் நலத்திட்டங்களை நிறைவேற்றாமல் இருந்ததற்கு நாராயணசாமிதான் காரணம். புதுச்சேரிக்கு மத்திய அரசு கொடுத்த பணத்தை காங்கிரஸ் தலைமையிடம் கொண்டு சேர்த்தார் நாராயணசாமி. வரும் தேர்தலில் பாஜக கூட்டணிக்கு வாக்களித்தால் புதுச்சேரி மாநிலம் வளர்ச்சி அடையும். காங்கிரசில் தகுதிக்கு இடமில்லை என்பதால் புதுச்சேரியில் மட்டுமல்ல, நாடு முழுவதும் பல காங்கிரஸ் நிர்வாகிகள் பாஜகவில் வந்து சேருகிறார்கள். 

சில நாட்களுக்கு முன்பு, ராகுல் காந்தி ஏன் மீன்வளத்துறை இல்லை என்று கேட்டிருந்தார். மீன்வளத் துறை 2 ஆண்டுகளாக (2019 முதல்) உள்ளது என்பதை அறியாத ஒரு தலைவரை அவர்கள் விரும்புகிறார்களா என்பதை நான் மக்களிடமிருந்து தெரிந்து கொள்ள விரும்புகிறேன்” என்று தெரிவித்தார்.

தொடர்புடைய செய்திகள்

1. இந்தியாவில் தடுப்பூசி திருவிழாவில் 1.28 கோடி பேருக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது
இந்தியாவில் தடுப்பூசி திருவிழாவில் 1.28 கோடி பேருக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
2. இந்தியாவில் இதுவரை இல்லாத கொரோனா பாதிப்பின் புதிய உச்சம் 24 மணி நேரத்தில் 2 லட்சத்தை தாண்டியது
இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 2,00,739 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
3. இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 1,61,736 பேருக்கு கொரோனா தொற்று உறுதி
இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 1,61,736 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது
4. இந்தியாவில் கொரோனா தொற்று அதிகரிக்க 2 முக்கிய காரணங்கள் - ‘எய்ம்ஸ்’ இயக்குனர் கருத்து
கொரோனா விதிமுறைகளை பின்பற்றாததும், உருமாறிய கொரோனாவும்தான் இந்தியாவில் தொற்று அதிகரிக்க முக்கிய காரணங்கள் என்று ‘எய்ம்ஸ்’ இயக்குனர் கூறியுள்ளார்.
5. கொரோனா பரவல் அதிகரிப்பால் உள்நாட்டு விமானங்களில் புதிய கட்டுப்பாடு
இந்தியாவில் கொரோனா பரவல் மீண்டும் அதிகரித்துள்ளது. இதனால், பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.