மாநில செய்திகள்

சிறப்பு டி.ஜி.பி.யாக இருந்த ராஜேஷ் தாஸ் மீதான பாலியல் புகார் சி.பி.சி.ஐ.டி.க்கு மாற்றம் + "||" + Sexual harassment complaint against Special DGP Rajesh Das, has been transferred to the CBCID

சிறப்பு டி.ஜி.பி.யாக இருந்த ராஜேஷ் தாஸ் மீதான பாலியல் புகார் சி.பி.சி.ஐ.டி.க்கு மாற்றம்

சிறப்பு டி.ஜி.பி.யாக இருந்த ராஜேஷ் தாஸ் மீதான பாலியல் புகார் சி.பி.சி.ஐ.டி.க்கு மாற்றம்
சிறப்பு டி.ஜி.பி.யாக இருந்த ராஜேஷ் தாஸ் மீதான பாலியல் புகாரை சி.பி.சி.ஐ.டி.க்கு மாற்றி டி.ஜி.பி. திரிபாதி உத்தரவிட்டுள்ளார்.
சென்னை,

பாதுகாப்பு பணியின்போது, சிறப்பு டி.ஜி.பி. ராஜேஷ் தாஸ் தன்னிடம் தவறாக நடக்க முயன்றதாக, பெண் ஐ.பி.எஸ். அதிகாரி ஒருவர் உள்துறைச் செயலாளர், சட்டம் ஒழுங்கு டி.ஜி.பி. திரிபாதி ஆகியோரிடம் புகார் அளித்திருந்தார். இதையடுத்து டி.ஜி.பி. ராஜேஷ் தாஸ் தமிழக அரசால் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றப்பட்டார்.  

இதைத் தொடர்ந்து, சிறப்பு டி.ஜி.பி. ராஜேஷ் தாஸ் மீதான புகாரை விசாரிக்க, கூடுதல் தலைமைச் செயலாளர் ஜெயஸ்ரீ ரகுநந்தன் தலைமையில் 6 பேர் கொண்ட குழு ஒன்றை தமிழக அரசு அமைத்துள்ளது. இந்த விசாரணைக் குழுவில், சீமா அகர்வால் ஐ.பி.எஸ்., அ.அருண் ஐ.பி.எஸ்., ப.சாமுண்டீஸ்வரி ஐ.பி.எஸ்., வி.கே.ரமேஷ் பாபு, லொரேட்டா ஜோனா ஆகிய அதிகாரிகள் இடம்பெற்றுள்ளனர். 

இதற்கிடையில், பாலியல் குற்றச்சாட்டுக்கு உள்ளான சிறப்பு டி.ஜி.பி. ராஜேஷ் தாஸை காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றி தமிழக அரசு உத்தரவு பிறப்பித்தது. இந்நிலையில் பெண் ஐ.பி.எஸ். அதிகாரி அளித்த புகாரை விசாரிக்குமாறு சி.பி.சி.ஐ.டி.க்கு தமிழக சட்டம் ஒழுங்கு டி.ஜி.பி. திரிபாதி அனுப்பியுள்ளார். இதையடுத்து இந்த புகாரைப் பெற்ற சி.பி.சி.ஐ.டி. போலீசார், இது தொடர்பான விசாரணயை துவக்கியுள்ளனர். 

தொடர்புடைய செய்திகள்

1. சிறப்பு டி.ஜி.பி. மீதான பாலியல் புகார் வழக்கு - விசாரணை அறிக்கை தாக்கல் செய்ய காவல்துறைக்கு நீதிமன்றம் உத்தரவு
சிறப்பு டி.ஜி.பி. மீது பெண் எஸ்.பி. அளித்த பாலியல் புகார் வழக்கு தொடர்பாக விசாரணை அறிக்கையை தாக்கல் செய்ய காவல்துறைக்கு உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.