மாநில செய்திகள்

சென்னையில் உள்துறை அமைச்சர் அமித்ஷாவுடன் முதலமைச்சர் பழனிசாமி, துணை முதலமைச்சர் பன்னீர்செல்வம் சந்திப்பு + "||" + Chief Minister Palanisamy and Deputy Chief Minister Panneer Selvam meet Home Minister Amit Shah in Chennai

சென்னையில் உள்துறை அமைச்சர் அமித்ஷாவுடன் முதலமைச்சர் பழனிசாமி, துணை முதலமைச்சர் பன்னீர்செல்வம் சந்திப்பு

சென்னையில் உள்துறை அமைச்சர் அமித்ஷாவுடன் முதலமைச்சர் பழனிசாமி, துணை முதலமைச்சர் பன்னீர்செல்வம் சந்திப்பு
சென்னையில் உள்துறை அமைச்சர் அமித்ஷாவுடன் முதலமைச்சர் பழனிசாமி, துணை முதலமைச்சர் பன்னீர்செல்வம் உள்ளிட்டோர் சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்தினர்.
சென்னை,

சென்னை கிண்டி நட்சத்திர ஹோட்டலில் உள்துறை அமைச்சர் அமித்ஷாவுடன் முதலமைச்சர் பழனிசாமி, துணை முதலமைச்சர் பன்னீர்செல்வம் ஆகியோர் சந்தித்து ஆலோசனை நடத்தினர். இதில் அதிமுக - பாஜக தொகுதி பங்கீடு குறித்து பேச்சுவார்த்தை நடத்தியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும் அதிமுக கூட்டணியில் பாஜகவுக்கு ஒதுக்கப்படும் தொகுதிகள் குறித்து ஆலோசிக்கப்பட்டதாக என தகவல் வெளியாகியுள்ளது.

21 தொகுதிகளை அதிமுக ஒதுக்க திட்டமிட்டிருப்பதாகவும், ஆனால் பாஜக தரப்பில் 30க்கும் அதிகமான தொகுதிகள் கேட்கப்படுவதாக தகவல் வெளியாகியுள்ளது.

அதிமுக கூட்டணியில் தொகுதிப் பங்கீடு தொடர்பாக நடைபெற்ற பேச்சுவார்த்தையில் தமிழக பாஜக தேர்தல் பொறுப்பாளர்கள் இணை அமைச்சர் கிசான் ரெட்டி, சி.டி. ரவி மற்றும் முன்னாள் அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன், தமிழக பாஜக தலைவர் எல்.முருகன் ஆகியோரும் கலந்து கொண்டனர்.

அதேபோல அதிமுக சார்பில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி மற்றும் தமிழக துணை முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் ஆகியோருடன் தேனி நாடாளுமன்ற உறுப்பினர் ரவீந்திரநாத்தும் பேச்சுவார்த்தையில் பங்கேற்றனர்.

தொடர்புடைய செய்திகள்

1. சென்னையில் கோயம்பேடு, அண்ணாநகர் உள்ளிட்ட இடங்களில் மிதமான மழை
சென்னையில் கோயம்பேடு, அண்ணாநகர் உள்ளிட்ட இடங்களில் மிதமான மழை பெய்தது.
2. சென்னையில் முக கவசம் அணியாதவர்களிடம் கடந்த 3 நாட்களில் 2 லட்சம் ரூபாய் அபராதம் வசூல்
சென்னையில் முக கவசம் அணியாதவர்களிடம் கடந்த 3 நாட்களில் 2 லட்சம் ரூபாய் அபராதம் வசூலிக்கப்பட்டதாக சென்னை மாநகர காவல்துறை தெரிவித்துள்ளது.
3. சென்னை காசிமேட்டில் காற்றில் பறந்த சமூக இடைவெளி!
தமிழகத்தில் கடந்த சில நாட்களாக கொரோனா தொற்று அதிகரித்து வருகிறது. கொரோனா பரவலை தடுக்க தமிழக சுகாதாரத்துறை சார்பில் பல்வேறு தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
4. சென்னையில் வீடு வீடாக காய்ச்சல் பரிசோதனை தொடங்கியது; 12 ஆயிரம் பணியாளர்கள் களத்தில் இறங்கினர்
சென்னையில் 12 ஆயிரம் பணியாளர்கள் மூலம் வீடு வீடாக காய்ச்சல் பரிசோதனை செய்யும் பணி தொடங்கியது.
5. சென்னையில் நாளை முதல் கூடுதலாக 400 பேருந்துகள் இயக்கப்படும் - மாநகர போக்குவரத்துக் கழகம்
பொதுமக்களின் கூட்ட நெரிசலை தடுக்க சென்னையில் நாளை முதல் கூடுதலாக 400 பேருந்துகள் இயக்கப்படும் என மாநகர போக்குவரத்துக் கழகம் அறிவித்துள்ளது.