மாநில செய்திகள்

ஆங்கிலேயர்களை வெளியேற்றியதை போல பாஜக ஆட்சியையும் அகற்ற முடியும் - ராகுல்காந்தி + "||" + Congress' Rahul Gandhi in Tenkasi

ஆங்கிலேயர்களை வெளியேற்றியதை போல பாஜக ஆட்சியையும் அகற்ற முடியும் - ராகுல்காந்தி

ஆங்கிலேயர்களை வெளியேற்றியதை போல பாஜக ஆட்சியையும் அகற்ற முடியும் - ராகுல்காந்தி
74 ஆண்டுகளுக்கு முன் ஆங்கிலேயர்களை வெளியேற்றியதை போல பாஜக ஆட்சியையும் அகற்ற முடியும் என்று ராகுல்காந்தி கூறினார்.
திருநெல்வேலி,

தமிழகத்தில் தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்டுள்ள ராகுல்காந்தி திருநெல்வேலி மாவட்டத்தில் அருகில் உள்ள ஆலங்குளம், பாவூர்சத்திரம், சுரண்டை, புளியங்குடி உள்ளிட்ட தென்காசி மாவட்டத்தின் பல்வேறு இடங்களில திறந்த வாகனத்தில் இருந்தவாறு பிரசாரம் செய்தார். அப்போது அவர் பேசுகையில்,

 74 ஆண்டுகளுக்கு முன் ஆங்கிலேயர்களை வெளியேற்றியதை குறிப்பிட்ட அவர், அதேபோன்று பாஜக ஆட்சியையும் அகற்ற முடியும் என தெரிவித்தார்.

மேலும் கல்வி, சுகாதாரத்தை பாகுபாடு இன்றி அனைத்து மக்களுக்கும் இலவசமாக வழங்க வேண்டும் என  வலியுறுத்தினார். சிறு மற்றும் குறுந் தொழில்களின் முதுகெலும்பை ஜிஎஸ்டி மற்றும் பணமதிப்பிழப்பு மூலம் முறித்து விட்டதாக குற்றம்சாட்டினார்.

பிரசாரத்தின் போது, கடைக்கு சென்று தேநீர் அருந்திய அவர், அங்கிருந்த சிறுமியுடன் சிறிது நேரம் உரையாடினார். பாவூர்சத்திரம் பகுதியில் ஆதரவு திரட்டிய ராகுல்காந்தி, காரில் இருந்து இறங்கி சாலையோர வியாபாரியிடம் இளநீர் வாங்கி அருந்தினார். அப்போது, அவரிடம் வருவாய், குடும்ப சூழல் மற்றும் குழந்தைகளின் கல்வி செலவு ஆகியவற்றை கேட்டறிந்தார்.

தொடர்புடைய செய்திகள்

1. தடுப்பூசி திருவிழா என்ற பெயரில் பாசாங்கு மட்டுமே நடக்கிறது; மத்திய அரசு மீது ராகுல் காந்தி குற்றச்சாட்டு
தடுப்பூசி திருவிழா என்ற பெயரில் பாசாங்கு மட்டுமே நடக்கிறது என மத்திய அரசு மீது ராகுல் காந்தி குற்றம் சாட்டினார்.
2. நாட்டின் நிறுவன கட்டமைப்பு ஒட்டுமொத்தமாக கைப்பற்றப்பட்டுள்ளது - பாஜக மீது ராகுல்காந்தி விமர்சனம்
நாட்டின் நிறுவன கட்டமைப்பு ஒட்டுமொத்தமாக கைப்பற்றப்பட்டுள்ளது என்று ராகுல்காந்தி தெரிவித்துள்ளார்.
3. ராகுல் காந்தி திருமணமாகாதவர், ஏன் எப்போதும் பெண்கள் படிக்கும் கல்லூரிக்குச் சென்று பேசுகிறார் - முன்னாள் எம்.பி. சர்ச்சை பேச்சு
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் முன்னாள் எம்.பி. ஜாய்ஸ் ஜார்ஜ், ராகுல் காந்தி ஏன் பெண்கள் பயிலும் கல்லூரிக்கே செல்கிறார் என்று சர்ச்சைக்குரிய வகையில் கேள்வி எழுப்பியுள்ளார்.
4. ‘அ.தி.மு.க.வின் முக கவசத்திற்கு பின்னால் பா.ஜனதா, ஆர்.எஸ்.எஸ். உள்ளது’ ராகுல்காந்தி குற்றச்சாட்டு
அ.தி.மு.க.வின் முக கவசத்திற்கு பின்னால் பா.ஜனதா, ஆர்.எஸ்.எஸ். உள்ளது என ராகுல்காந்தி கடுமையாக தாக்கி பேசினார்.
5. மோடி, அமித்ஷா காலடியில் ஆட்சியாளர்கள்: ‘மானமுள்ள தமிழர்கள் ஏற்க மாட்டார்கள்’ சென்னை பிரசாரத்தில் ராகுல்காந்தி ஆவேசம்
மோடி, அமித்ஷா காலடியில் ஆட்சியாளர்கள் கிடப்பதாகவும், இதை மானமுள்ள தமிழர்கள் ஏற்க மாட்டார்கள் என்றும் சென்னையில் நடந்த தேர்தல் பிரசார பொதுக்கூட்டத்தில் ராகுல்காந்தி ஆவேசமாக பேசினார்.