மாநில செய்திகள்

மோடியை விட பெரிய எதிரிகளையெல்லாம் மக்கள் தோற்கடித்துள்ளார்கள்: ராகுல் காந்தி + "||" + "Have Defeated Much Bigger Enemy Than This": Rahul Gandhi's Dig At PM

மோடியை விட பெரிய எதிரிகளையெல்லாம் மக்கள் தோற்கடித்துள்ளார்கள்: ராகுல் காந்தி

மோடியை விட  பெரிய எதிரிகளையெல்லாம் மக்கள் தோற்கடித்துள்ளார்கள்: ராகுல் காந்தி
மோடியை விட பெரிய எதிரிகளையெல்லாம் மக்கள் தோற்கடித்துள்ளார்கள் என்று காங்கிரஸ் எம்.பி ராகுல் காந்தி விமர்சித்துள்ளார்.
நெல்லை,

தமிழக சட்டமன்ற தேர்தலையொட்டி அகில இந்திய காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி தமிழகத்தில் பிரசாரம் மேற்கொண்டு வருகிறார். அவர் 3-வது கட்ட பிரசாரத்தை தூத்துக்குடி மாவட்டத்தில் நேற்றுதொடங்கினார். 2-வது நாளாக நெல்லை, தென்காசி மாவட்டங்களில் ராகுல்காந்தி இன்று பிரசாரம் செய்தார். 

 நெல்லையில் உள்ள புனித சேவியர் கல்லூரியில் கல்லூரி பேராசிரியர்களுடன் காங்கிரஸ் எம்.பி.ராகுல் காந்தி கலந்துரையாடினார். அப்போது ஒருவர் ராகுல் காந்தியிடம், " நீங்கள் ஆட்சியைப் பிடித்து உங்கள் நல்ல திட்டங்களைச் செயல்படுத்தக் காத்திருப்பதைவிட, அந்தத் திட்டங்களை மோடி அரசால் நிறைவேற்றவைக்கலாமே" எனக் கேட்டார்.

 அதற்கு பதில் அளித்த ராகுல் காந்தி,  ” நிச்சயமாக மக்களின் சக்திவாய்ந்த, மதிப்பு மிக்க ஆதரவால் மோடியை நிச்சயமாக தோற்கடிப்போம். கனவுகளைப் பெரிதாகக் காண வேண்டும்.அதில் சில கனவுகள் நடக்காமல்கூட போகும். நாம் வலிமைமிக்க(மோடி) எதிரியுடன் போரிட்டு வருகிறோம்.

ஆங்கிலேயர் எனும் மிகப்பெரிய எதிரியை நாம் வீழ்த்திவிட்டோம். மோடியை விட ஆங்கிலேயர்கள் மிக வலிமை மிக்கவர்கள் அவர்களையே மக்கள் தோற்கடித்துவிட்டார்கள். இப்போது இந்த புதிய எதிரி வந்துள்ளார். ஆங்கிலேயர்களை அனுப்பிய அதே வழியில் மக்கள் நரேந்திர மோடியை நாக்பூருக்கு(ஆர்எஸ்எஸ் தலைமையிடம்) அனுப்புவார்கள்” என்றார். 

தொடர்புடைய செய்திகள்

1. மகாராஷ்டிரா தீ விபத்தில் பலியானோர் குடும்பங்களுக்கு தலா ரூ.2 லட்சம் -பிரதமர் மோடி
மராட்டிய மாநிலத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் பலியானவர்களின் குடும்பத்தினருக்கு தலா ரூ.2 லட்சம் நிவாரணம் வழங்க பிரதமர் மோடி உத்தரவிட்டுள்ளார்.
2. மத்திய அரசே ‘இந்த செய்தி உங்களுக்குத்தான்’ - ராகுல் காந்தி டுவிட்
மத்திய அரசை இந்த செய்தி உங்களுக்கு தான் என காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தி தனது டுவிட்டரில் பதிவு செய்து உள்ளார்.
3. தடுப்பூசியின் விலை நிர்ணயத்தில் வேறுபாடு - ராகுல் காந்தி
கொரோனா வைரஸ் நோய்த் தொற்றுக்கான தடுப்பூசியின் விலை நிர்ணயத்தில் வேறுபாடு இருப்பதை காங்கிரஸ் ராகுல் காந்தி சாடியுள்ளார்.
4. 18 வயதுக்கு மேற்பட்டோருக்கு தடுப்பூசி: பிரதமர் மோடிக்கு உத்தவ் தாக்கரே நன்றி
மத்திய அரசு நேற்று 18 வயதுக்கு அதிகமானவர்களுக்கு தடுப்பூசி செலுத்த அனுமதியை வழங்கி உள்ளது.
5. கொரோனா புதிய அலை விரைவாக பரவும் பகுதிகளில் கட்டுப்படுத்தும் முயற்சிகளை முடுக்கி விட வேண்டும்; பிரதமர் மோடி
கொரோனாவின் புதிய அலை விரைவாக பரவி வரும் நகர பகுதிகளில் கட்டுப்படுத்தும் முயற்சிகளை முடுக்கி விடும்படி பிரதமர் மோடி கேட்டு கொண்டார்.