மத்திய அரசின் போலி பரிந்துரை கடிதம் விவகாரம் 'மூலிகை பெட்ரோல்' ராமர் பிள்ளைக்கு சி.பி.சி.ஐ.டி. போலீசார் சம்மன்


மத்திய அரசின் போலி பரிந்துரை கடிதம் விவகாரம் மூலிகை பெட்ரோல் ராமர் பிள்ளைக்கு சி.பி.சி.ஐ.டி. போலீசார் சம்மன்
x
தினத்தந்தி 1 March 2021 2:30 AM GMT (Updated: 1 March 2021 2:30 AM GMT)

மத்திய அரசின் போலி பரிந்துரை கடிதம் விவகாரம் 'மூலிகை பெட்ரோல்' ராமர் பிள்ளைக்கு சி.பி.சி.ஐ.டி. போலீசார் சம்மன் இன்று விசாரணைக்கு ஆஜராக உத்தரவு.

சென்னை, 

பிரதமர், கவர்னர் அலுவலகங்கள் பெயரில் போலியாக அரசு ஆவணங்களை உருவாக்கி மோசடியில் ஈடுபட்ட பெங்களூரைச் சேர்ந்த மகாதேவய்யா, அங்கித், ஓம் ஆகிய 3 பேர் கும்பலை கர்நாடக சி.பி.சி.ஐ.டி. போலீசார் சமீபத்தில் கைது செய்தனர்.

அவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில், தமிழ்நாட்டை சேர்ந்த ராமர் பிள்ளையின் மூலிகை பெட்ரோலை அங்கீகரிக்க வேண்டும் என்று பிரதமர் அலுவலக பெயரில் போலி பரிந்துரை கடிதம் தயாரித்து, பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சி அமைப்புக்கு அனுப்பப்பட்டது தெரியவந்தது.

இதையடுத்து ராமர் பிள்ளை இந்த மோசடி கும்பல் வலையில் சிக்கி ஏமாந்தாரா? அல்லது மூலிகை பெட்ரோலை அங்கீகாரம் பெற மோசடி கும்பலிடம் சேர்ந்து முறைகேட்டில் ஈடுபட்டாரா? என்ற கேள்வி எழுந்தது. எனவே இந்த விவகாரத்தில் உண்மை நிலையை கண்டறிய ராமர் பிள்ளையிடம் விசாரணை நடத்த தமிழக சி.பி.சி.ஐ.டி. போலீசார் திட்டமிட்டனர். அந்த வகையில் ராமர் பிள்ளைக்கு சி.பி.சி.ஐ.டி. போலீசார் சம்மன் அனுப்பினர். அதில், அவரை சென்னை எழும்பூரில் உள்ள சி.பி.சி.ஐ.டி. அலுவலகத்தில் மார்ச் 1-ந் தேதி (இன்று) நேரில் விசாரணைக்கு ஆஜராகும்படி கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

Next Story