அண்ணா மற்றும் கருணாநிதி நினைவிடங்களில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் மரியாதை


அண்ணா மற்றும் கருணாநிதி நினைவிடங்களில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் மரியாதை
x
தினத்தந்தி 1 March 2021 2:47 AM GMT (Updated: 1 March 2021 2:47 AM GMT)

தனது 68வது பிறந்தநாளையொட்டி அண்ணா மற்றும் கருணாநிதி நினைவிடங்களில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் மரியாதை செலுத்தினார்.

சென்னை, 

திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் இன்று தனது 68-வது பிறந்த நாளை கொண்டாடி வருகிறார். இதனைத்தொடர்ந்து அண்ணா மற்றும் கருணாநிதி நினைவிடங்களில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் மரியாதை செலுத்தினார். 

இதன்படி சென்னை மெரினா கடற்கரையில் உள்ள பேரறிஞர் அண்ணா நினைவிடத்தில் அவர் மலர்வளையம் வைத்து மரியாதை செலுத்தினார். அதை தொடர்ந்து, கலைஞர் கருணாநிதி நினைவிடத்தில் மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினார்.   



 


மு.க.ஸ்டாலினின் பிறந்தநாளையொட்டி இன்றைய தினம் கருணாநிதியின் நினைவிடம், பூக்களை கொண்டு அலங்கரிக்கப்பட்டுள்ளது. முதல்முறையாக முதலமைச்சர் வேட்பாளராக போட்டியிடும் மு.க.ஸ்டாலினின் இந்த பிறந்த நாள், முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது. இவரது பிறந்தநாளை தொண்டர்கள் மற்றும் நிர்வாகிகள் கொண்டாடி வருகின்றனர்.

Next Story