கலைஞர் மேலுள்ள எதிர்பார்ப்பை சிறப்பாக நிறைவேற்றிவரும் நண்பர்: மு.க.ஸ்டாலினுக்கு கமல்ஹாசன் பிறந்தநாள் வாழ்த்து + "||" + Kamal Haasan wishes MK Stalin a happy birthday: Friend who fulfills the artist's best expectations
கலைஞர் மேலுள்ள எதிர்பார்ப்பை சிறப்பாக நிறைவேற்றிவரும் நண்பர்: மு.க.ஸ்டாலினுக்கு கமல்ஹாசன் பிறந்தநாள் வாழ்த்து
கலைஞர் மேலுள்ள எதிர்பார்ப்பை சிறப்பாக நிறைவேற்றிவரும் நண்பர் என்று மு.க.ஸ்டாலினுக்கு கமல்ஹாசன் பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
சென்னை,
திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் இன்று தனது 68வது பிறந்தநாளைக் கொண்டாடுகிறார். இதனையொட்டி அவர் இன்று காலை அண்ணா நினைவிடம், கருணாநிதி நினைவிடம் மற்றும் பெரியார் நினைவிடங்களில் மலரஞ்சலி செலுத்தினார். இதனைத்தொடர்ந்து மு.க.ஸ்டாலினுக்கு பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில் கலைஞர் மேலுள்ள எதிர்பார்ப்பை சிறப்பாக நிறைவேற்றிவரும் நண்பர் என்று மு.க.ஸ்டாலினுக்கு கமல்ஹாசன் பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் தனது டுவிட்டரில், “விருட்சத்தின் கீழ் தாவரங்கள் வெளிச்சம் பெறுவதரிது. விழுதாக இருந்தால் கூடுதல் சுமை. கலைஞர் எனும் மாபெரும் பிம்பத்தின் மேலுள்ள எதிர்பார்ப்பை மிகச் சிறப்பாக நிறைவேற்றிவரும் நண்பர் மு.க.ஸ்டாலின் அவர்களை, பிறந்த நாளில் வியந்து வாழ்த்துகிறேன்” என்று பதிவிட்டுள்ளார்.
இதனிடையே காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி டுவிட்டரிலும், விசிக தலைவர் தொல்.திருமாவளவன் நேரிலும் திமுக தலைவர் மு.க.ஸ்டாலினுக்கு வாழ்த்து தெரிவித்தனர்.
விருட்சத்தின் கீழ் தாவரங்கள் வெளிச்சம் பெறுவதரிது. விழுதாக இருந்தால் கூடுதல் சுமை. கலைஞர் எனும் மாபெரும் பிம்பத்தின் மேலுள்ள எதிர்பார்ப்பை மிகச் சிறப்பாக நிறைவேற்றிவரும் நண்பர் மு.க.ஸ்டாலின் அவர்களை, பிறந்த நாளில் வியந்து வாழ்த்துகிறேன்.