சிறப்பு டிஜிபி ராஜேஷ் தாஸ் மீதான பாலியல் வழக்கு: தாமாக முன்வந்து விசாரணைக்கு எடுத்தது சென்னை உயர்நீதிமன்றம்


கோப்புப்படம்
x
கோப்புப்படம்
தினத்தந்தி 1 March 2021 6:13 AM GMT (Updated: 1 March 2021 6:13 AM GMT)

சிறப்பு டிஜிபி ராஜேஷ் தாஸ் மீதான பாலியல் வழக்கை சென்னை உயர்நீதிமன்றம் தாமாக முன்வந்து விசாரணைக்கு எடுத்துள்ளது.

சென்னை, 

சட்டம் ஒழுங்குப் பிரிவில் சிறப்பு டி.ஜி.பி. ராஜேஷ் தாஸ் மீது சுமத்தப்பட்ட பாலியல் துன்புறுத்தல் குற்றச்சாட்டு தொடர்பாக, குற்றப்பிரிவு மத்திய குற்றப் புலனாய்வுத் துறை வழக்குப் பதிவுசெய்துள்ளது. அவர் காத்திருப்போர் பட்டியலில் வைக்கப்பட்டுள்ளார்.

இந்நிலையில் சிறப்பு டிஜிபி ராஜேஷ் தாஸ் மீதான பாலியல் வழக்கை சென்னை உயர்நீதிமன்றம் தாமாக முன்வந்து விசாரணைக்கு எடுத்துள்ளது.

சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் இந்த விவகாரம் தொடர்பாக தானாக முன்வந்து வழக்கை எடுத்துள்ளார். காவல்துறை பெண் அதிகாரிக்கே இந்த நிலையா? என்று நீதிபதி கேள்வி எழுப்பினார். ராஜேஷ் தாஸ் மீதான வழக்கில் இன்று பிற்பகல் 2.15 மணியளவில் சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பிக்கிறது.

இதனையடுத்து பெண் ஐபிஎஸ் அதிகாரிக்கு முன்னாள் சிறப்பு டிஜிபி பாலியல் தொல்லை அளித்த விவகாரத்தில் விசாரணை அதிகாரியாக விழுப்புரம் மாவட்ட சிபிசிஐடி ஏடிஎஸ்பி கோமதி நியமனம் செய்யப்பட்டுள்ளார். முன்னதாக முன்னாள் சிறப்பு டிஜிபி ராஜேஷ் தாஸ் மீது 2 பிரிவுகளில் சிபிசிஐடி வழக்கு பதிவு செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Next Story