மாநில செய்திகள்

சட்டமன்ற தேர்தல் 2021: 21 தொகுதிகள் , பாமகவை தொடர்ந்து பாஜக தொகுதி பங்கீட்டை கச்சிதமாக முடித்த அதிமுக..! + "||" + BJP takes 60-constituency list to AIADMK, may get 21

சட்டமன்ற தேர்தல் 2021: 21 தொகுதிகள் , பாமகவை தொடர்ந்து பாஜக தொகுதி பங்கீட்டை கச்சிதமாக முடித்த அதிமுக..!

சட்டமன்ற தேர்தல் 2021: 21 தொகுதிகள் , பாமகவை தொடர்ந்து பாஜக தொகுதி பங்கீட்டை கச்சிதமாக முடித்த அதிமுக..!
அ.தி.மு.க-பா.ஜ.க. தொகுதி பங்கீடு தொடர்பாக மத்திய உள்துறை மந்திரி அமித்ஷாவை முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் சந்தித்து பேசினர்.
சென்னை,

தமிழகத்தில் ஏப்ரல் 6-ந் தேதி தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் பிரதான கட்சியான அ.தி.மு.க. தனது கூட்டணி கட்சிகளுடன் தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தையை தீவிரப்படுத்தியுள்ளது.

அ.தி.மு.க. கூட்டணியில் பா.ம.க., பா.ஜ.க., தே.மு.தி.க., த.மா.கா. ஆகிய கட்சிகள் இடம் பெற்றுள்ளன. இந்த கட்சிகளுடன் தொகுதி பங்கீடு தொடர்பாக மறைமுக பேச்சுவார்த்தை ஏற்கனவே தொடங்கி விட்ட நிலையில், அதிகாரபூர்வ பேச்சுவார்த்தையை நேற்று முன்தினம் முதல் அ.தி.மு.க. தொடங்கியது.

பா.ம.க.வுடன் நடத்தப்பட்ட பேச்சுவார்த்தையில் அந்த கட்சிக்கு 23 தொகுதிகள் ஒதுக்கப்பட்டன. இதைத்தொடர்ந்து தொகுதி பங்கீடு தொடர்பாக பா.ஜ.க., தே.மு.தி.க.வுடன் பேச்சுவார்த்தை தொடங்கியது. அ.தி.மு.க-பா.ஜ.க. தொகுதி பங்கீடு தொடர்பாக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோரை மத்திய மந்திரிகள் வி.கே.சிங், கி‌ஷன்ரெட்டி ஆகியோர் ஏற்கனவே சந்தித்து பேசிய நிலையில், மீண்டும் பா.ஜ.க. குழுவினர் நேற்று காலை சந்தித்து பேசினர்.

இதற்கிடையே, நேற்று இரவு காரைக்கால், விழுப்புரம் நிகழ்ச்சிகளை முடித்துக்கொண்டு சென்னை வந்த மத்திய உள்துறை மந்திரி அமித்ஷாவை கிண்டியில் உள்ள ஐ.டி.சி. சோழா நட்சத்திர ஓட்டலில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் சந்தித்து பேசினர்.

இந்த சந்திப்பின்போது பா.ஜ.க. தரப்பில் மத்திய மந்திரிகள் வி.கே.சிங், கி‌ஷன்ரெட்டி, பா.ஜ.க. பொதுச்செயலாளர் சி.டி.ரவி, மாநில தலைவர் எல்.முருகன், முன்னாள் மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன், அ.தி.மு.க. எம்.பி. ரவீந்திரநாத் ஆகியோர் உடன் இருந்தனர். அப்போது, அ.தி.மு.க-பா.ஜ.க. இடையே தொகுதி பங்கீடு குறித்து பேசப்பட்டது.

இந்த ஆலோசனையில் பா.ஜ.க. போட்டியிடும் தொகுதிகளின் எண்ணிக்கை உறுதி செய்யப்பட்டதாக கூறப்படுகிறது. கன்னியாகுமரி, கோவை, திருச்சி, வேலூர் மாவட்டங்களில் கணிசமான தொகுதிகளை அவர்கள் குறிப்பிட்டுள்ளதாக கூறப்படுகிறது. இன்று (திங்கட்கிழமை) பா.ஜ.க. போட்டியிடும் தொகுதிகளின் எண்ணிக்கை முடிவு ஆகலாம் என்று தெரிகிறது. பேச்சுவார்த்தை நேற்று நள்ளிரவு வரை நீடித்தது.

கடந்த தேர்தல்களில் ‘குறிப்பிடத்தக்க’ எண்ணிக்கையிலான வாக்குகளைப் பெற்ற 60 தொகுதிகளின் பட்டியலை பாஜக கொடுத்துள்ளது. பாட்டாளி மக்கள் கட்சியை  விட அதிகமான எண்ணிக்கையில் தொகுதி கேட்டு  பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது.

தேர்தலில் பாஜகவுக்கு 21 தொகுதிகள் ஒதுக்க அதிமுக திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதேபோல், கன்னியாகுமரி மக்களவை தொகுதியையும் பாஜகவுக்கு ஒதுக்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

1. தாய்மார்களை பற்றி அவதூறு பரப்பி வரும் தி.மு.க., காங்கிரஸ் கூட்டணிக்கு சரியான பாடம் கற்பிக்க வேண்டும்- மத்திய மந்திரி அமித் ஷா
பெண்கள், தாய்மார்களை பற்றி அவதூறு பரப்பி வரும் தி.மு.க., காங்கிரஸ் கூட்டணிக்கு சரியான பாடம் கற்பிக்க வேண்டும் என திருக்கோவிலூர் தொகுதி பிரசார கூட்டத்தில் மத்திய உள்துறை மந்திரி அமித் ஷா கூறினார்.
2. என்னை எப்போது வேண்டுமானாலும் சந்திக்கலாம்; ஸ்டாலின் வீட்டின் கேட்டை கூட தொட முடியாது -முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி
நான் உங்களில் ஒருவன், எப்போது வேண்டுமானால் என்னை சந்திக்கலாம். ஸ்டாலின் வீட்டின் கேட்டை கூட தொட முடியாது என முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி கூறினார்.
3. தமிழகம் முழுவதும் திமுக அலை அல்ல... சுனாமி வீசி வருகிறது...- மு.க.ஸ்டாலின் பேச்சு
தமிழகம் முழுவதும் திமுக அலை அல்ல... சுனாமி வீசி வருகிறது என மேட்டுப்பாளையம் கூட்டத்தில் தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் பேசினார்.
4. மக்களை சோம்பேறியாக்கும் அறிவிப்புகளை வெளியிடும் அரசியல் கட்சிகளை ஏன் தடை செய்யக்கூடாது?- ஐகோர்ட் மதுரை கிளை கேள்வி
மக்களை சோம்பேறியாக்கும் அறிவிப்புகளை வெளியிடும் அரசியல் கட்சிகளை ஏன் தடை செய்யக்கூடாது? தேர்தல் ஆணையத்திடம் கேள்வி எழுப்பி உள்ளது.
5. பா.ஜ.க. வேட்பாளருக்கு ஆதரவாக உத்தரபிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் கோவையில் பிரசாரம்
பா.ஜ.க. வேட்பாளருக்கு ஆதரவாக பிரச்சாரம் செய்ய உத்தரபிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் கோவை வந்தார். தொடர்ந்து புலியகுளம் விநாயகர் கோவிலில் சாமி கும்பிட்டார்.