தொழில்துறையில் இந்தியாவிலேயே தமிழகம் முதன்மை மாநிலமாக திகழ்கிறது ராகுல் காந்தி


தொழில்துறையில் இந்தியாவிலேயே தமிழகம் முதன்மை மாநிலமாக திகழ்கிறது  ராகுல் காந்தி
x
தினத்தந்தி 1 March 2021 7:31 AM GMT (Updated: 1 March 2021 7:31 AM GMT)

தொழில்துறையில் இந்தியாவிலேயே தமிழகம் முதன்மை மாநிலமாக திகழ்வதாக காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி கூறினார்.

சென்னை

தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் வருகிற ஏப்ரல் மாதம் 6-ந்தேதி நடக்கிறது. இதையொட்டி அகில இந்திய காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி, தமிழகத்தில் தனது 3-வது கட்ட பிரசாரத்தை தென் மாவட்டங்களில் தொடங்கினார்.

இதன்படி காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி கன்னியாகுமரி மாவட்டத்தில் இன்று தேர்தல் பிரசாரம் மேற்கொண்டார்

கன்னியாகுமரி மாவட்டம் சர்ச் ரோடு பகுதியில் ராகுல் காந்தி தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டார். அப்போது பேசிய அவர், தமிழ் மொழி மற்றும் கலாச்சாரத்தை அடிமைபடுத்த நினைப்பவர்களுக்கு தக்க பதிலடி கொடுக்க வேண்டும் என்றும், தமிழகத்தின் பாரம்பரியம், தனித்தன்மையை பாதுகாக்க வேண்டியது தனது கடமை என்றும் திட்டவட்டமாக கூறினார்.

பின்னர், அகஸ்தீஸ்வரம் சென்ற ராகுல் காந்தி, மறைந்த எம்.பி. வசந்தகுமார் நினைவிடத்தில் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தியதோடு, வசந்தகுமாரின் மனைவி மற்றும் குடும்பத்தினரை ஆரத்தழுவி ஆறுதல் தெரிவித்தார்.

தொடர்ந்து பிரச்சாரத்திற்கு இடையே இளைப்பாறும் விதமாக அச்சன்குளத்தில் சாலையோர கடையில் ராகுல் காந்தி நொங்கு, சர்பத் அருந்தினார்.


Next Story