மாநில செய்திகள்

தி.மு.க. தலைவர் ஸ்டாலின் பிறந்தநாள்; பெரியார் நினைவிடத்தில் மரியாதை + "||" + DMK President Stalin's birthday; Respect at the Periyar Memorial

தி.மு.க. தலைவர் ஸ்டாலின் பிறந்தநாள்; பெரியார் நினைவிடத்தில் மரியாதை

தி.மு.க. தலைவர் ஸ்டாலின் பிறந்தநாள்; பெரியார் நினைவிடத்தில் மரியாதை
தி.மு.க. தலைவர் ஸ்டாலின் தனது பிறந்தநாளை முன்னிட்டு, சென்னையில் உள்ள பெரியார் நினைவிடத்தில் மலர்தூவியும், மலர் வளையம் வைத்தும் மரியாதை செலுத்தினார்.
சென்னை,

தி.மு.க. தலைவர் ஸ்டாலின் தனது பிறந்தநாளை முன்னிட்டு, சென்னை வேப்பேரியில் உள்ள பெரியார் திடலில் அமைந்த பெரியார் நினைவிடத்தில் மலர்தூவியும், மலர் வளையம் வைத்தும் மரியாதை செலுத்தினார். அப்போது  திராவிடர் கழக தலைவர் வீரமணி மற்றும் தி.மு.க. கட்சி நிர்வாகிகள் உடன் இருந்தனர்.

முன்னதாக அங்கு வந்த ஸ்டாலினுக்கு, தி.மு.க. மகளிரணி சார்பில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.  ஸ்டாலினின் பிறந்த நாளையொட்டி நடிகர் ரஜினிகாந்த், முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் உள்ளிட்டோர் வாழ்த்து தெரிவித்தனர்.

நடிகர் ரஜினிகாந்த் தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு, ஸ்டாலினுக்கு வாழ்த்து தெரிவித்தார். புதுச்சேரி முன்னாள் முதல் அமைச்சர் நாராயணசாமி, ஸ்டாலினை நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்தார்.

முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங், மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன், மத்திய வெளியுறவுத்துறை மந்திரி ஜெய்சங்கர், நடிகர் சத்யராஜ் உள்ளிடோரும் தொலைபேசி வாயிலாக ஸ்டாலினை தொடர்பு கொண்டு பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்தனர்.

தொடர்புடைய செய்திகள்

1. தமிழ், மலையாள புத்தாண்டு தினம்: முதல் அமைச்சர் பழனிசாமி வாழ்த்து
தமிழ் மற்றும் மலையாள புத்தாண்டு தினங்களை முன்னிட்டு தமிழக முதல் அமைச்சர் பழனிசாமி தனது வாழ்த்துகளை தெரிவித்து உள்ளார்.
2. 10, 12ம் வகுப்பு தேர்வெழுதும் மாணவர்களுக்கு கேரள முதல் மந்திரி வாழ்த்து
கேரளாவில் 10 மற்றும் 12ம் வகுப்பு தேர்வெழுதும் மாணவர்களுக்கு முதல் மந்திரி பினராயி விஜயன் வாழ்த்து தெரிவித்து உள்ளார்.
3. தாதாசாகேப் பால்கே விருது: நடிகர் ரஜினிகாந்துக்கு, கவர்னர் வாழ்த்து
சினிமா துறையில் வாழ்நாள் சாதனை புரிந்தோருக்கு மத்திய அரசு வழங்கும் உயரிய விருதான தாதாசாகேப் பால்கே விருது நடிகர் ரஜினிகாந்துக்கு வழங்கப்படுவதாக மத்திய அரசு அறிவித்துள்ளது.
4. டோக்கியோ ஒலிம்பிக் போட்டிகள்: தகுதி பெற்ற இந்திய டேபிள் டென்னிஸ் வீரர்களுக்கு வாழ்த்து
இந்திய டேபிள் டென்னிஸ் வீரர்கள் சத்தியன் ஞானசேகரன் உள்ளிட்டோர் டோக்கியோ ஒலிம்பிக் போட்டிகளில் பங்கேற்க தகுதி பெற்றுள்ளனர்.
5. அமெரிக்காவின் 46வது ஜனாதிபதியாக பதவி ஏற்ற ஜோ பைடனுக்கு உலக தலைவர்கள் வாழ்த்து
அமெரிக்காவின் 46வது ஜனாதிபதியாக பதவி ஏற்று கொண்ட ஜோ பைடனுக்கு பிரதமர் மோடி உள்ளிட்ட உலக தலைவர்கள் பலரும் தங்களது வாழ்த்துகளை தெரிவித்துள்ளனர்.