மாநில செய்திகள்

தனியார் மருத்துவமனையில் கொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்ட கமல்ஹாசன் + "||" + Kamal Haasan vaccinated against corona at a private hospital

தனியார் மருத்துவமனையில் கொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்ட கமல்ஹாசன்

தனியார் மருத்துவமனையில் கொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்ட கமல்ஹாசன்
சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் கொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்டார் நடிகர் கமல்ஹாசன்.
சென்னை

நாடு முழுவதும் 60 வயதுக்கு மேற்பட்டோருக்கு கொரோனா தடுப்பூசி போடும் பணி தொடங்கியுள்ள நிலையில் முதல் நாளில் மட்டும் 1.25 லட்சம் பேர் ஊசி போட்டுக்கொண்டுள்ளனர்.

மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் வெளியிட்ட புள்ளிவிவரப்படி முதல் நாளில் 60 வயதுக்கு மேற்பட்ட ஒரு லட்சத்து 28 ஆயிரத்து 630 பேருக்கும், 45 வயதுக்கு மேற்பட்டு இணை நோயுள்ள 18 ஆயிரத்து 850 பேருக்கும் தடுப்பூசி போடப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

மேலும் நாட்டில் மருத்துவர்கள் உள்ளிட்ட முன் களப்பணியாளர்களுடன் சேர்த்து இதுவரை ஒட்டுமொத்தமாக கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்டவர்கள் எண்ணிக்கை ஒரு கோடியே 47 லட்சத்தை கடந்துள்ளது. இதன்படி 2-வது கட்ட தடுப்பூசி திட்டத்தின் முதல் நாளில் டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் பிரதமர் மோடி கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்டார். 

அவரைத்தொடர்ந்து  துணை ஜனாதிபதி வெங்கய்யா நாயுடு, உள்துறை மந்திரி அமித் ஷா, வெளியுறவுத் துறை மந்திரி ஜெய் சங்கர், மத்திய சுகாதாரத்துறை அமைச்சர்  ஒடிசா முதல்-மந்திரி நவீன் பட்நாயக், பீகார் முதல்-மந்திரி நிதிஷ் குமார், தேசியவாத காங்கிரஸ் கட்சி தலைவர் சரத் பவார் உள்ளிட்டோரும் முதல் நாளில் தடுப்பூசி போட்டுக்கொண்டனர். 

இன்று சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் நடிகரும் , மக்கள் நீதி மய்ய தலைவருமான கமல்ஹாசன் கொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்டார் .

தொடர்புடைய செய்திகள்

1. பஹ்ரைன்: கொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்டவர்களுக்கு மட்டுமே மசூதிகளில் அனுமதி
பஹ்ரைனில் கொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்டவர்கள் மட்டுமே மசூதிகளில் அனுமதிக்கப்படுவார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
2. ஏப்.14 முதல் 16 வரை தமிழகத்தில் கொரோனா தடுப்பூசி திருவிழா அனுசரிக்கப்படும்
ஏப்.14 முதல் 16 வரை தமிழகத்தில் கொரோனா தடுப்பூசி திருவிழா அனுசரிக்கப்படும் என தமிழக அரசு அறிவித்து உள்ளது.
3. மராட்டியத்தில் கொரோனா தடுப்பூசிக்கு பற்றாக்குறை ஒரே நாளில் 100-க்கும் மேற்பட்ட முகாம்கள் மூடப்பட்டன
மராட்டிய மாநிலத்தில் கொரோனா தடுப்பூசி பற்றாக்குறை காரணமாக 100-க்கும் மேற்பட்ட தடுப்பூசி முகாம்கள் மூடப்பட்டுள்ளதாக அந்த மாநில சுகாதாரத்துறை மந்திரி தெரிவித்தார்.
4. பிளஸ் - 2 வகுப்புக்கான செய்முறைத் தேர்வுக்கான 23 வழிகாட்டு நெறிமுறைகள்
கொரோனா தடுப்பு கட்டுப்பாடுகளுடன் பிளஸ் - 2 வகுப்புக்கான செய்முறைத் தேர்வுக்கான 23 வழிகாட்டு நெறிமுறைகள் வெளியிடப்பட்டுள்ளன.
5. நீலகிரி மாவட்டத்தில் அனைத்து சுற்றுலாத் தலங்களும் வழக்கம் போல் செயல்படும் - மாவட்ட நிர்வாகம்
நீலகிரி மாவட்டத்தில் அனைத்து சுற்றுலாத் தலங்களும் வழக்கம் போல் செயல்படும் என மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது.