பணி இடத்தில் பாலியல் தொல்லையை தடுக்க மத்திய அரசின் சட்டத்தை முறையாக பின்பற்ற வேண்டும்


பணி இடத்தில் பாலியல் தொல்லையை தடுக்க மத்திய அரசின் சட்டத்தை முறையாக பின்பற்ற வேண்டும்
x
தினத்தந்தி 4 March 2021 1:01 AM GMT (Updated: 4 March 2021 1:01 AM GMT)

பணி இடத்தில் பாலியல் தொல்லையை தடுக்க மத்திய அரசின் சட்டத்தை முறையாக பின்பற்ற வேண்டும் மனித உரிமை ஆணையம் உத்தரவு.

சென்னை, 

விருதுநகர் பொதுப்பணித்துறையில் வைப்பாறு வடிநில கோட்டத்தில் உதவி நிர்வாக என்ஜினீயராக பணியாற்றி வந்த பெண்ணுக்கு, அதே துறையில் பணியாற்றி வந்த அதிகாரிகள் சிலர் பாலியல் தொந்தரவு கொடுத்து வந்துள்ளனர். இதுகுறித்து அந்த பெண் அதிகாரி, 2016-ம் ஆண்டு புகார் அளித்துள்ளார். ஆனால், எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லையாம். இதுகுறித்து அந்த பெண் அதிகாரியின் தந்தை, மாநில மனித உரிமை ஆணையத்தில் புகார் அளித்தார்.

இந்த புகாரை விசாரித்த ஆணையத்தின் உறுப்பினர் சித்தரஞ்சன் மோகன்தாஸ், ‘இந்த விவகாரத்தில் பெண் அதிகாரிக்கு எதிரான அதிகாரிகளின் நடத்தை மற்றும் அணுகுமுறைக்கு ஆணையம் தனது கடுமையான கண்டனத்தை தெரிவிக்கிறது. அதேவேளையில் ஆணையம் கடும் அதிருப்தியையும் பதிவு செய்கிறது. பணியிடத்தில் பெண்கள் பாலியல் ரீதியாக துன்புறுத்தப்படுவதை தடுக்க கடந்த 2013-ம் ஆண்டு சுப்ரீம் கோர்ட்டு வழிகாட்டுதல்படி புதிய சட்டம் மத்திய அரசால் கொண்டுவரப்பட்டது. இந்த சட்டம் உத்வேகத்துடன் முறையாக பின்பற்றப்பட வேண்டும். இதன் மூலம் பாதிக்கப்பட்ட பெண்களின் பங்களிப்பு அதிக அளவில் நாட்டுக்கு கிடைத்திடும் வகையில் நீதி கிடைக்க செய்ய வேண்டும்' என்று உத்தரவிட்டார்.

Next Story