கொரோனா இல்லை என்ற எண்ணம் யாருக்கும் வரக்கூடாது சென்னை உள்பட 6 மாவட்டங்களில் தொற்று குறையவில்லை + "||" + No one should think that there is no corona. Infection has not abated in 6 districts including Chennai
கொரோனா இல்லை என்ற எண்ணம் யாருக்கும் வரக்கூடாது சென்னை உள்பட 6 மாவட்டங்களில் தொற்று குறையவில்லை
கொரோனா இல்லை என்ற எண்ணம் யாருக்கும் வரக்கூடாது சென்னை உள்பட 6 மாவட்டங்களில் தொற்று குறையவில்லை சுகாதாரத்துறை செயலாளர் தகவல்.
சென்னை,
கொரோனா பாதிப்பு மீண்டும் அதிகரிப்பது குறித்து மத்திய குழு ஆய்வு செய்து வருகிறது. அதன்படி சென்னை வந்த மத்திய குழுவினர் நேற்று ஓமந்தூரார் அரசு பல்நோக்கு மருத்துவமனையில் ஆய்வு மேற்கொண்ட போது, கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் மற்றும் சிகிச்சை அளிக்கும் முறைகள் குறித்து மத்திய குழுவினருக்கு சுகாதாரத்துறை செயலாளர் டாக்டர் ஜெ.ராதாகிருஷ்ணன் எடுத்துரைத்தார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-
கொரோனா தடுப்பூசியை பொருத்தவரை முதியோர்கள், இணை நோய் உள்ளவர்களுக்கு தடுப்பூசி போடுவதில் நல்ல வரவேற்பு உள்ளது.
சென்னை மாநகராட்சியை பொருத்தவரை 39 ஆயிரம் தெருக்களில், ஆயிரம் தெருக்களில் தான் தொடர்ந்து, 5 முதல் 6 பேருக்கு பாதிப்பு இருந்து வருகிறது. அதேபோல் திருவள்ளூர், காஞ்சீபுரம், செங்கல்பட்டு, கோவை, திருப்பூரிலும் தொற்று குறையாமல், தொடர்ந்து பாதிப்பு இருந்து வருகிறது.
கொரோனா தொற்று இல்லை என்ற எண்ணம் யாருக்கும் வேண்டாம். இவ்வாறு அவர் கூறினார்.
திருவள்ளூரில் உள்ள மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில் நோய் தடுப்பு மருந்து துறை சார்பில் கொரோனா தொற்று பரவல் தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கை திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் தலைமையில் ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது.