மாநில செய்திகள்

துப்பாக்கி வைத்திருப்போர் போலீஸ் நிலையங்களில் ஒப்படைக்க வேண்டும் சட்டசபை தேர்தலையொட்டி அதிரடி உத்தரவு + "||" + Orders for action in the run-up to assembly elections must be handed over to police stations by gun owners

துப்பாக்கி வைத்திருப்போர் போலீஸ் நிலையங்களில் ஒப்படைக்க வேண்டும் சட்டசபை தேர்தலையொட்டி அதிரடி உத்தரவு

துப்பாக்கி வைத்திருப்போர் போலீஸ் நிலையங்களில் ஒப்படைக்க வேண்டும் சட்டசபை தேர்தலையொட்டி அதிரடி உத்தரவு
சட்டசபை தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், லைசென்சுடன் துப்பாக்கி வைத்திருப்போர் அவற்றை அருகில் உள்ள போலீஸ் நிலையங்களில் ஒப்படைக்க உத்தரவிடப்பட்டுள்ளது. மேலும் போலீசார் விடுமுறை எடுக்கவும் தடை விதி க்கப்பட்டுள்ளது.
சென்னை, 

தமிழக சட்டசபை தேர்தல் ஏப்ரல் 6-ந் தேதி நடைபெற உள்ளது. அரசியல் கட்சிகள் கூட்டணி பேச்சுவார்த்தையை தொடங்கி விட்டன. தேர்தல் வேலைகள் சூடுபிடிக்க தொடங்கி விட்டன. பாதுகாப்பு நடவடிக்கைகளும் தீவிரப்ப டுத்தப்பட்டுள்ளது. இதனால் தேர்தலையொட்டி எடுக்கப்படும் வழக்கமான பாதுகாப்பு முன் எச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. அதன்படி, உரிய லைசென்ஸ் பெற்று தங்களது சொந்த பாதுகாப்புக்காக துப்பாக்கி வைத்திருப்போர், அந்த துப்பாக்கிகளை அருகில் உள்ள போலீஸ் நிலையங்களில் ஒப்படைக்க உத்தரவிடப்பட்டுள்ளது. தேர்தல் முடிந்தவுடன் உரியவர்கள் தங்களது துப்பாக்கிகளை திரும்ப பெற்றுக்கொள்ளலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

சென்னையில் 2,700 பேர்

இதில் சென்னையை பொறுத்தவரை 2,700 பேர் லைசென்ஸ் துப்பாக்கிகள் வைத்துள்ளனர். அவர்களில் சுமார் 600 பேர் தங்களது துப்பாக்கிகளை அருகில் உள்ள போலீஸ் நிலையங்களில் ஒப்படைத்து விட்டனர்.

மற்றவர்களிடம் இருந்தும் துப்பாக்கிகளை பெறும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக போலீஸ் உயர் அதிகாரிகள் தெரிவித்தனர்.

விடுமுறைக்கு தடை

இதற்கிடையே தேர்தல் பாதுகாப்பு பணிக்காக தமிழகத்தின் ஒட்டு மொத்த போலீஸ் படையையும் களத்தில் இறக்க திட்டமிடப்பட்டுள்ளது. அதனால் போலீஸ் துறையில் பணியாற்றுபவர்கள் தேர்தல் முடியும் வரை விடுமுறை எடுக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. நீண்ட விடுமுறையில் சென்றவர்களை மீண்டும் பணியில் சேரவும் உத்தரவிடப்பட்டுள்ளது.

இறப்பு போன்ற தவிர்க்க முடியாத நிகழ்வுகளுக்கு மட்டுமே விடுமுறை எடுத்துக்கொள்ள விதிவிலக்கு அளிக்கப்பட்டுள்ளது.


தொடர்புடைய செய்திகள்

1. ரேஷன் கடைகளில் ஞாயிற்றுக்கிழமையிலும் கொரோனா நிவாரணத்தொகை வழங்கப்படும் தமிழக அரசு உத்தரவு
ரேஷன் கடைகளில் ஞாயிற்றுக்கிழமையிலும் கொரோனா நிவாரணத்தொகை வழங்கப்படும் தமிழக அரசு உத்தரவு.
2. சிறு, குறு, நடுத்தர நிறுவனங்களுக்கு பதிவு கட்டணம் விலக்கு: ஆட்டோ, கார்களுக்கு சாலைவரி செலுத்த கால அவகாசம் மு.க.ஸ்டாலின் உத்தரவு
சிறு, குறு, நடுத்தர நிறுவனங்கள் வங்கிக்கடன் பெற முத்திரைத்தாள் பதிவு கட்டணம் விலக்கு அளிக்கப்படுகிறது என்றும், ஆட்டோ, கார்களுக்கு சாலை வரி செலுத்த 3 மாத காலஅவகாசம் அளிப்பதாகவும் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவு பிறப்பித்துள்ளார்.
3. தொலைபேசி எண்கள் அறிவிப்பு: தங்குதடையின்றி ஆவின் பால் கிடைக்க நடவடிக்கை தமிழக அரசு உத்தரவு
தொலைபேசி எண்கள் அறிவிப்பு: தங்குதடையின்றி ஆவின் பால் கிடைக்க நடவடிக்கை தமிழக அரசு உத்தரவு.
4. மேற்கு வங்காளத்தில் பா.ஜ.க. எம்.எல்.ஏ.க்களுக்கு மத்திய படை பாதுகாப்பு; உள்துறை அமைச்சகம் உத்தரவு
மேற்கு வங்காள சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெற்ற 77 பா.ஜ.க. எம்.எல்.ஏ.க்களுக்கு அச்சுறுத்தல் இருப்பதாக மத்திய உள்துறை அமைச்சகத்திடம் பாதுகாப்பு அமைப்புகள் அறிக்கை வழங்கியுள்ளன.
5. மாணவர்கள் கூறிய முறைகேடு புகார்: அண்ணா பல்கலைக்கழக செமஸ்டர் தேர்வுகள் மீண்டும் நடத்தப்படும் மு.க.ஸ்டாலின் உத்தரவு
மாணவர்கள் கூறிய முறைகேடு புகாரை தொடர்ந்து, அண்ணா பல்கலைக்கழக செமஸ்டர் தேர்வுகள் மீண்டும் நடத்தப்படும் என்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவு பிறப்பித்துள்ளார்.