மாநில செய்திகள்

தேர்தலுக்கு 5 நாட்களுக்கு முன்பே அனைவருக்கும் வாக்காளர் தகவல் சீட்டு வினியோகம் தலைமை தேர்தல் அதிகாரி உத்தரவு + "||" + Chief Electoral Officer orders distribution of ballot papers to all 5 days before the election

தேர்தலுக்கு 5 நாட்களுக்கு முன்பே அனைவருக்கும் வாக்காளர் தகவல் சீட்டு வினியோகம் தலைமை தேர்தல் அதிகாரி உத்தரவு

தேர்தலுக்கு 5 நாட்களுக்கு முன்பே அனைவருக்கும் வாக்காளர் தகவல் சீட்டு வினியோகம் தலைமை தேர்தல் அதிகாரி உத்தரவு
தேர்தலுக்கு 5 நாட்களுக்கு முன்பே அனைவருக்கும் புகைப்படம் இல்லாத வாக்காளர் தகவல் சீட்டுகளை வாக்காளர்களுக்கு வினியோகம் செய்ய வேண்டும் என்று மாவட்ட தேர்தல் அதிகாரிகளுக்கு தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகு உத்தரவிட்டுள்ளார்.
சென்னை, 

இதுகுறித்து தமிழக தலைமை தேர்தல் அதிஹாரி சத்யபிரத சாகு வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது:-

நடைபெறவுள்ள சட்டமன்ற பேரவை பொதுத்தேர்தலுக்கான வாக்காளர் தகவல் சீட்டை, புகைப்பட வாக்காளர் சீட்டிற்கு பதிலாக அனைத்து வாக்காளர்களுக்கும் வழங்க இந்திய தேர்தல் ஆணையம் முடிவு செய்துள்ளது.

5 நாட்களுக்கு முன்பு...

வாக்காளர் தகவல் சீட்டில் வாக்குச்சாவடி மையம், வாக்குப்பதிவு நாள் மற்றும் நேரம் ஆகிய விவரங்கள் இடம் பெற்றிருக்கும். இந்த வாக்காளர் தகவல் சீட்டில் வாக்காளர்களின் புகைப்படம் இடம் பெறாது.

வாக்குப்பதிவு நடைபெறும் நாளுக்கு 5 நாட்களுக்கு முன்பே அனைத்து வாக்காளர் தகவல் சீட்டையும் வினியோகிக்க அனைத்து மாவட்ட தேர்தல் அலுவலர்களும் அறிவுறுத்தப்பட்டு உள்ளனர்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

1. ஆக்சிஜன் பற்றாக்குறையால் ஒருவரும் உயிரிழக்க கூடாது: அதிகாரிகளுக்கு கெஜ்ரிவால் உத்தரவு
ஆக்சிஜன் பற்றாக்குறையால் ஒருவரும் உயிரிழக்க கூடாது என அதிகாரிகளுக்கு டெல்லி முதல் மந்திரி கெஜ்ரிவால் உத்தரவிட்டு உள்ளார்.
2. கொரோனா தொற்றால் ஏற்பட்ட சிரமங்களைக் குறைக்கும் வகையில் மக்களின் வாழ்வாதாரத்திற்கு உதவ முதல் தவணையாக ரூ.2 ஆயிரம் தமிழக அரசு உத்தரவு
கொரோனா தொற்றால் ஏற்பட்ட சிரமங்களைக் குறைத்து, வாழ்வாதாரத்திற்கு உதவும் விதமாக முதல் தவணையாக ரூ.2 ஆயிரம் நிவாரணத்தொகையை மக்களுக்கு வழங்குவதற்கான அரசாணையை தமிழக அரசு வெளியிட்டுள்ளது.
3. முதல்-அமைச்சரின் செயலாளராக 4 ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் நியமனம் தமிழக அரசு உத்தரவு
முதல்-அமைச்சரின் செயலாளராக 4 ஐ.ஏ.எஸ். அதிகாரிகளை நியமித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
4. தனியார் ஆஸ்பத்திரிகளில் கொரோனா நோயாளிகளுக்கு அரசு செலவில் சிகிச்சை முதல்-அமைச்சர் பதவி ஏற்றதும் மு.க.ஸ்டாலின் உத்தரவு
தனியார் ஆஸ்பத்திரிகளில் கொரோனா நோயாளிகளுக்கு அரசு செலவில் சிகிச்சை பெற வகை செய்து முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.
5. பீகாரில் பணிநேரத்தில் கொரோனா வார்டில் இல்லாத 17 டாக்டர்கள்; விளக்கம் அளிக்க உத்தரவு
பீகாரில் பணிநேரத்தில் கொரோனா சிகிச்சை வார்டில் இல்லாத 17 டாக்டர்களிடம் விளக்கம் கேட்டு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது.