மாநில செய்திகள்

அ.தி.மு.க. கூட்டணி கதவு தே.மு.தி.க.வுக்கு திறக்கப்படுமா? பிரேமலதாவின் ‘திடீர்' விருப்ப மனு தாக்கலால் பரபரப்பு + "||" + A. DMK Will the door of alliance be opened to the DMK? Premalatha's 'sudden' petition

அ.தி.மு.க. கூட்டணி கதவு தே.மு.தி.க.வுக்கு திறக்கப்படுமா? பிரேமலதாவின் ‘திடீர்' விருப்ப மனு தாக்கலால் பரபரப்பு

அ.தி.மு.க. கூட்டணி கதவு தே.மு.தி.க.வுக்கு திறக்கப்படுமா? பிரேமலதாவின் ‘திடீர்' விருப்ப மனு தாக்கலால் பரபரப்பு
சுதீசின் ஆக்ரோஷமான பேச்சு மற்றும் பிரேமலதாவின் திடீர் விருப்ப மனு தாக்கல் ஆகியவை காரணமாக அ.தி.மு.க. கூட்டணி கதவு தே.மு.தி.க.வுக்கு திறக்கப்படுமா? என்ற எதிர்பார்ப்பு அரசியல் களத்தில் மேலோங்கி இருக்கிறது.
சென்னை, 

அ.தி.மு.க. கூட்டணியில் நீடித்து வரும் நிலையில், கூட்டணிக்கு எங்களை அழைக்கவில்லை' என்று தே.மு.தி.க. பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் வருத்தம் கொண்டிருந்தார். இதையடுத்து தே.மு.தி.க.வை, அ.தி.மு.க. பேச்சுவார்த்தைக்கு அழைத்தது. இதில் பா.ம.க.வுக்கு தந்தது போல இடங்களை (23 தொகுதிகள்) தே.மு.தி.க. கேட்டது. இதற்கு அ.தி.மு.க. உடன்படவில்லை.

இதனால் அந்த பேச்சுவார்த்தையில் சமரசம் ஏற்படவில்லை. 2-ம் கட்டமாக ஏற்பாடு செய்திருந்த பேச்சுவார்த்தை கூட்டத்தை தே.மு.தி.க. புறக்கணித்தது. 3-ம் கட்டமாக நடந்த பேச்சுவார்த்தையிலும் உடன்பாடு எட்டப்படவில்லை.

குறைந்தது 20 தொகுதிகள் வரை கேட்டும் தே.மு.தி.க.வின் கோரிக்கையை அ.தி.மு.க. ஏற்க தயங்கியது. இதனால் அ.தி.மு.க.-தே.மு.தி.க. இடையே தொகுதி பங்கீடு உறுதி செய்வதில் தொடர்ந்து இழுபறி நீடிக்கிறது.

‘அ.தி.மு.க.தான் கெஞ்சுகிறது’

ஏற்கனவே தி.மு.க.வுடன், தே.மு.தி.க. மறைமுக பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருகிறது என்று கூறப்படும் நிலையில், தே.மு.தி.க. துணை செயலாளர் எல்.கே.சுதீசின் ஆக்ரோஷமான பேச்சு அரசியல் களத்தை பரபரப்புக்குள்ளாக்கி இருக்கிறது. திருவண்ணாமலை மாவட்டம் ஆரணியில் நேற்று முன்தினம் நடந்த தே.மு.தி.க. நிர்வாகிகள் கூட்டத்தில் பேசிய அவர், ‘‘கூட்டணிக்காக நாம் கெஞ்சி கிடக்கவில்லை. அ.தி.மு.க.தான் கூட்டணிக்காக நம்மிடம் கெஞ்சுகிறது. 2011-ம் ஆண்டில் நாம் கைகோர்க்கவில்லை என்றால் அ.தி.மு.க. நிலை படுமோசமாகியிருக்கும்'', என்று காரசாரமாக பேசியிருக்கிறார்.

இது அ.தி.மு.க.வில் சலசலப்பை ஏற்படுத்தியிருக்கிறது. ஆனாலும் தே.மு.தி.க.வை கைவிட அ.தி.மு.க. நினைக்கவில்லை என்றுதான் கூறப்படுகிறது. தே.மு.தி.க. கேட்கும் தொகுதிகள் மிகுதியாக இருப்பதாலேயே அ.தி.மு.க. தயங்கி வருகிறது. அதேவேளை தி.மு.க.-காங்கிரஸ் கூட்டணியின் முடிவுக்காக தே.மு.தி.க. ஆர்வமாக இருக்கிறது என்றும் கூறப்படுகிறது.

அடுத்தக்கட்ட நடவடிக்கை

இதற்கிடையில் சென்னை கோயம்பேட்டில் உள்ள தே.மு.தி.க. தலைமை அலுவலகத்தில் அக்கட்சி பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் விருப்ப மனு தாக்கல் செய்தார். ஆனால் அவர் தாக்கல் செய்த மனுவில் போட்டியிடக்கூடிய தொகுதி என்று எந்த தொகுதியின் பெயரும் குறிப்பிடவில்லை. இது பல்வேறு கேள்விகளையும் எழுப்பியிருக்கிறது.

தேர்தல் வேட்புமனுக்கான நாள் நெருங்கும் நிலையில் அ.தி.மு.க. கூட்டணியில் பா.ஜ.க., த.மா.கா.வுக்கு ஓரிரு நாளில் தொகுதி பங்கீடு இறுதி செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால் தே.மு.தி.க.வுக்கு, அ.தி.மு.க.வின் கூட்டணி கதவு திறக்கப்படுமா? என்பது கேள்விக்குறியாகவே நீடிக்கிறது. தே.மு.தி.க.வின் தன்னிச்சையான போக்கு கூட்டணி பேச்சுவார்த்தையில் தாக்கத்தை ஏற்படுத்தும் என்றும், தே.மு.தி.க.வின் அடுத்தக்கட்ட நடவடிக்கையை பொறுத்தே அ.தி.மு.க. கூட்டணியில் இடம்பிடிக்க வாய்ப்பு உண்டா, இல்லையா? என்பதை தீர்மானிக்க முடியும் என்றும் அரசியல் வல்லுனர்கள் கருத்து தெரிவிக்கிறார்கள். உரிய இடங்கள் கிடைக்கவில்லை என்றால் தனித்து போட்டியிடலாம் என்று ஏற்கனவே நிர்வாகிகள் கூட்டத்தில் பிரேமலதா சூளுரைத்து பேசியது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

1. கொரோனா தடுப்பு நடவடிக்கைக்கு வாக்குச்சாவடியில் சானிடைசர் வழங்க தி.மு.க.வினரை நிறுத்தியதால் பரபரப்பு
கொரோனா தடுப்பு நடவடிக்கைக்கு வாக்குச்சாவடியில் சானிடைசர் வழங்க தி.மு.க.வினரை நிறுத்தியதால் பரபரப்பு.
2. வாக்குப்பதிவு எந்திர பட்டனை அழுத்தினால் அனைத்து சின்னத்திலும் விளக்குகள் எரிந்ததால் பரபரப்பு
வாக்குப்பதிவு எந்திர பட்டனை அழுத்தினால் அனைத்து சின்னத்திலும் விளக்குகள் எரிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. இதனால் 1 மணி நேரம் வாக்குப்பதிவு நிறுத்திவைக்கப்பட்டது.
3. ஆலந்தூரில் ஒரே இடத்தில் பிரசாரம் தி.மு.க. வேட்பாளர் வாகனம் மீது தண்ணீர் பாட்டிலை வீசிய எஸ்.டி.பி.ஐ. கட்சியினரால் பரபரப்பு
ஆலந்தூரில் ஒரே இடத்தில் பிரசாரம் தி.மு.க. வேட்பாளர் வாகனம் மீது தண்ணீர் பாட்டிலை வீசிய எஸ்.டி.பி.ஐ. கட்சியினரால் பரபரப்பு.
4. திருவண்ணாமலை தொகுதியில் வேட்புமனு தாக்கல் செய்ய நிர்வாணமாக வந்த விவசாயிகளால் பரபரப்பு
தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கத்தின் சார்பில் திருவண்ணாமலை தொகுதியில் போட்டியிட வேட்பு மனு தாக்கல் செய்ய நிர்வாணமாக வந்த விவசாயிகளால் பரபரப்பு ஏற்பட்டது. அதை தொடர்ந்து மாநில தலைவர் அய்யாக்கண்ணு உள்பட 16 பேரை போலீசார் கைது செய்தனர்.
5. கேரளாவில் பா.ஜ.க., கம்யூனிஸ்டு ரகசிய கூட்டணி உம்மன் சாண்டி பரபரப்பு குற்றச்சாட்டு
கேரளாவில் காங்கிரஸ் அணிக்கு எதிராக பா.ஜ.க.- கம்யூனிஸ்டு கட்சிகள் அமைத்துள்ள ரகசிய கூட்டணி அம்பலமாகியுள்ளது என கேரள மாநில முன்னாள் முதல்-மந்திரியும், காங்கிரஸ் மூத்த தலைவருமான உம்மன் சாண்டி குற்றம்சாட்டினார்.

அதிகம் வாசிக்கப்பட்டவை