மாநில செய்திகள்

அமைச்சர் ராஜேந்திர பாலாஜி சொத்துக்குவிப்பு வழக்கு: ஐகோர்ட்டு நீதிபதிகள் மாறுபட்ட தீர்ப்பு 3-வது நீதிபதி விசாரணைக்கு பரிந்துரை + "||" + Minister Rajendra Balaji's embezzlement case: ICC judges recommend different verdict to 3rd judge hearing

அமைச்சர் ராஜேந்திர பாலாஜி சொத்துக்குவிப்பு வழக்கு: ஐகோர்ட்டு நீதிபதிகள் மாறுபட்ட தீர்ப்பு 3-வது நீதிபதி விசாரணைக்கு பரிந்துரை

அமைச்சர் ராஜேந்திர பாலாஜி சொத்துக்குவிப்பு வழக்கு: ஐகோர்ட்டு நீதிபதிகள் மாறுபட்ட தீர்ப்பு 3-வது நீதிபதி விசாரணைக்கு பரிந்துரை
அமைச்சர் ராஜேந்திர பாலாஜி மீதான சொத்துக்குவிப்பு வழக்கை விசாரித்த ஐகோர்ட்டு நீதிபதிகள் வெவ்வேறு தீர்ப்பை அளித்துள்ளதால், இந்த வழக்கு 3-வது நீதிபதி விசாரணைக்கு பரிந்துரைக்கப்பட்டு உள்ளது.
மதுரை, 

தமிழக பால்வளத்துறை அமைச்சராக கே.டி.ராஜேந்திர பாலாஜி உள்ளார். இவர் கடந்த 2011-ம் ஆண்டு முதல் 2013-ம் ஆண்டு வரையிலான காலக்கட்டத்தில் தனது அமைச்சர் பதவியை தவறாக பயன்படுத்தி, வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்துள்ளதாகவும், அவர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரியும் மதுரை தல்லாகுளத்தை சேர்ந்த மகேந்திரன் என்பவர் கடந்த 2014-ம் ஆண்டு மதுரை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார்.

அந்த மனுவில், “ரூ.7 கோடி அளவுக்கு முறைகேடாக சொத்து சேர்த்துள்ள அமைச்சர் ராஜேந்திர பாலாஜி மீது லஞ்ச ஒழிப்புத் துறையில் புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை” என குற்றம் சாட்டி இருந்தார்.

இந்த வழக்கை ஏற்கனவே விசாரித்த ஐகோர்ட்டு, கடந்த 1996-ம் ஆண்டு திருத்தங்கல் பேரூராட்சி துணை தலைவராக ராஜேந்திரபாலாஜி பதவி வகித்தது முதல் அவருடைய சொத்து விவரங்கள் குறித்து விசாரணை நடத்தி அறிக்கை தாக்கல் செய்யும்படி லஞ்ச ஒழிப்புத்துறை போலீஸ் சூப்பிரண்டுக்கு உத்தரவிட்டது.

மாறுபட்ட தீர்ப்பு

இந்த வழக்கி்ல் நீதிபதிகள் சத்தியநாராயணன், ஹேமலதா ஆகியோர் நேற்று தீர்ப்பளித்தனர்.

நீதிபதி சத்தியநாராயணன் தனது தீர்ப்பில், “ராஜேந்திர பாலாஜி மீதான குற்றச்சாட்டு குறித்து லஞ்ச ஒழிப்பு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரிக்க வேண்டும்” என்று கூறியுள்ளார்.

மற்றொரு நீதிபதியான ஹேமலதா தனது தீர்ப்பில், “ராஜேந்திர பாலாஜி மீதான குற்றச்சாட்டிற்கு முகாந்திரம் இல்லை” என்று கூறியுள்ளார்.

இந்த வழக்கை விசாரித்த 2 நீதிபதிகள் மாறுபட்ட தீர்ப்பு அளித்துள்ளனர்.

3-வது நீதிபதி

எனவே இந்த வழக்கை 3-வது நீதிபதி விசாரிக்க உத்தரவிடுமாறு சென்னை ஐகோர்ட்டு தலைமை நீதிபதிக்கு பரிந்துரைக்கப்பட்டு உள்ளது.

தொடர்புடைய செய்திகள்

1. தேர்தல் முடிந்த பிறகும் வாக்காளர்களுக்கு பணப்பட்டுவாடா செய்த 2 பேர் மீது வழக்கு
தேர்தல் முடிந்த பிறகும் வாக்காளர்களுக்கு பணப்பட்டுவாடா செய்த 2 பேர் மீது வழக்கு.
2. காஞ்சீபுரத்தில் லோக் அதாலத் மூலம் ஒரே நாளில் 252 வழக்குகளில் முடிவு; தீர்வுத்தொகையாக ரூ.13 கோடி வழங்கப்பட்டது
காஞ்சீபுரத்தில் நடந்த (லோக் அதாலத்) எனும் மக்கள் நீதிமன்றத்தின் மூலம் ஒரே நாளில் 252 வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்டு, தீர்வுத்தொகையாக ரூ.13 கோடி வழங்கப்பட்டது.
3. சாத்தான்குளம் இரட்டைக்கொலை வழக்கு விசாரணைக்கு தடை விதிக்க முடியாது சப்-இன்ஸ்பெக்டர் கோரிக்கையை ஏற்க மதுரை ஐகோர்ட்டு மறுப்பு
சாத்தான்குளம் இரட்டை கொலை வழக்கு விசாரணைக்கு தடை விதிக்க வேண்டும் என்ற சப்-இன்ஸ்பெக்டரின் கோரிக்கையை மதுரை ஐகோர்ட்டு ஏற்க மறுத்துவிட்டது.
4. ஓய்வுபெற்ற நீதிபதி மார்க்கண்டேய கட்ஜூ மீது கோர்ட்டு அவமதிப்பு வழக்குக்கு அனுமதி கோரி கடிதம்
ஓய்வுபெற்ற நீதிபதி மார்க்கண்டேய கட்ஜூ மீது கோர்ட்டு அவமதிப்பு வழக்குத் தொடர அனுமதி கோரி சொலிசிட்டர் ஜெனரலுக்கு கடிதம் எழுதப்பட்டுள்ளது.
5. ஓட்டலில் அதிரடி சோதனை: ரூ.18 லட்சம் பறிமுதல்; 8 பேர் கைது அ.தி.மு.க. வேட்பாளர் மீது வழக்கு
காட்பாடியில் ஓட்டலில் கலெக்டர் நடத்திய அதிரடி சோதனையில் ரூ.18 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டது. இந்த சம்பவம் தொடர்பாக 8 பேரை போலீசார் கைது செய்தனர். காட்பாடி தொகுதி அ.தி.மு.க. வேட்பாளர் வி.ராமு மீதும் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.