மாநில செய்திகள்

அ.தி.மு.க. கூட்டணியில் பா.ஜ.க.வுக்கு 20 தொகுதிகள் + "||" + In ADMK alliance 20 constituencies for BJP

அ.தி.மு.க. கூட்டணியில் பா.ஜ.க.வுக்கு 20 தொகுதிகள்

அ.தி.மு.க. கூட்டணியில் பா.ஜ.க.வுக்கு 20 தொகுதிகள்
தமிழக சட்டமன்ற தேர்தலில், அ.தி.மு.க. கூட்டணியில் பா.ஜ.க.வுக்கு 20 சட்டமன்ற தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளது. மேலும் கன்னியாகுமரி நாடாளுமன்ற தொகுதியிலும் பா.ஜ.க.வே போட்டியிடுகிறது.
பா.ஜ.க.வுக்கு 20 தொகுதிகள்

இதுகுறித்து அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளரும், துணை முதல்-அமைச்சருமான ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளரும், முதல்-அமைச்சருமான எடப்பாடி பழனிசாமி மற்றும் பா.ஜ.க. தேசிய பொதுச்செயலாளர் சி.டி.ரவி, தமிழக பா.ஜ.க. மாநில தலைவர் எல். முருகன் ஆகியோர் கையழுத்திட்ட 2021 சட்டமன்ற பொதுத்தேர்தல் உடன்படிக்கையில் கூறியிருப்பதாவது:-

6.4.2021 அன்று நடைபெற உள்ள தமிழக சட்டமன்ற பொதுத்தேர்தலில், அ.தி.மு.க.-பா.ஜ.க.வும் கூட்டணி அமைத்து, தமிழ்நாட்டில் தேர்தலை சந்திப்பது என முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

அ.தி.மு.க.-பா.ஜ.க இடையே ஏற்பட்ட ஒப்பந்தப்படி, அ.தி.மு.க. தலைமையிலான கூட்டணியில் பா.ஜ.க.வுக்கு தமிழ்நாட்டில் 20 சட்டமன்ற தொகுதிகள் ஒதுக்கப்படும் என்று தீர்மானிக்கப்பட்டுள்ளது. இந்த தேர்தல் உடன்படிக்கை நேற்று நள்ளிரவில் வெளியிடப்பட்டது.

கன்னியாகுமரி நாடாளுமன்ற தொகுதி
அதேபோல், 6-ந்தேதி அன்று இடைத்தேர்தல் நடைபெற உள்ள கன்னியாகுமரி நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிடும் பா.ஜ.க. வேட்பாளருக்கு அ.தி.மு.க. தனது முழு ஆதரவை அளிக்கும் என்றும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

மேற்கண்டவாறு அந்த தேர்தல் உடன்படிக்கையில் கூறப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

1. மகாகவி சுப்ரமணிய பாரதியாருக்கு 150 அடியில் சிலை; புதுச்சேரி பா.ஜ.க தேர்தல் அறிக்கை
புதுச்சேரியில் மகாகவி சுப்ரமணிய பாரதியாருக்கு 150 அடியில் சிலை நிறுவப்படும் என புதுச்சேரி பா.ஜக தேர்தல் அறிக்கையில் கூறப்ப்ட்டு உள்ளது;
2. அ.தி.மு.க. கூட்டணி வெற்றிபெற்றால் மேலும் பல திட்டங்கள் நிறைவேற்றப்படும்; பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் பேச்சு
அ.தி.மு.க. கூட்டணி வெற்றிபெற்றால் மேலும் பல திட்டங்கள் நிறைவேற்றப்படும் என்று பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் கூறினார்.
3. ‘மக்களிடையே பிளவை ஏற்படுத்த பா.ஜ.க. வெறுப்புணர்வை ஊக்குவிக்கிறது’ - ராகுல் காந்தி
பா.ஜ.க., மக்களிடையே பிளவுகளை ஏற்படுத்த வெறுப்புணர்வை ஊக்குவிக்கிறது என்று காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி குற்றம் சாட்டியுள்ளார்.
4. அ.தி.மு.க. கூட்டணியில் த.மா.கா.வுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்ட 6 தொகுதிகள் அறிவிப்பு
அ.தி.மு.க. கூட்டணியில் த.மா.கா.வுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்ட 6 தொகுதிகளின் பட்டியலை ஜி.கே.வாசன் வெளியிட்டார்.
5. அ.தி.மு.க. கூட்டணி கட்சிகளுடன் குளறுபடி இல்லை; அமைச்சர் ஜெயக்குமார் பேட்டி
ராயபுரம் தொகுதியில் தேர்தல் பிரசார பணிகளை தொடங்கிய அமைச்சர் ஜெயக்குமார், அ.தி.மு.க. தலைமையிலான கூட்டணியில் எந்தவித குளறுபடியும் இல்லை என்றார்.