மாநில செய்திகள்

3 நாள் பயணமாக ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் இன்று சென்னை வருகை + "||" + President Ramnath Govind arrives in Chennai today on a three-day visit

3 நாள் பயணமாக ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் இன்று சென்னை வருகை

3 நாள் பயணமாக ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் இன்று சென்னை வருகை
ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த், 3 நாள் பயணமாக இன்று (செவ்வாய்க்கிழமை) சென்னை வருகிறார்.
ஆலந்தூர், 

ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த், 3 நாள் பயணமாக இன்று (செவ்வாய்க்கிழமை) மாலை டெல்லியில் இருந்து தனி விமானத்தில் சென்னை வருகிறாா். விமான நிலையத்தில் வரவேற்பை முடித்துக்கொண்டு காரில் சென்னை கவா்னா் மாளிகைக்கு சென்று தங்குகிறார்.

நாளை (புதன்கிழமை) காலை கவா்னா் மாளிகையில் இருந்து காரில் புறப்பட்டு சென்னை பழைய விமான நிலையம் வருகிறாா். அங்கிருந்து ஹெலிகாப்டரில் வேலூா் புறப்பட்டு செல்கிறாா். வேலூரில் உள்ள பொற்கோவிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்கிறார்.

அதன்பின்பு தனியாா் பல்கலைக்கழகத்தில் நடக்கும் விழாவில் கலந்து கொள்கிறாா். மாலையில் வேலூரில் இருந்து ஹெலிகாப்டரில் மீண்டும் சென்னை விமான நிலையம் வந்து, காரில் கவா்னா் மாளிகை சென்று தங்குகிறார்.

அண்ணா பல்கலைக்கழக விழா

நாளை மறுநாள் (வியாழக்கிழமை) சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் நடக்கும் விழாவில் கலந்து கொள்கிறார். அதன்பிறகு பிற்பகலில் சென்னையில் இருந்து தனி விமானத்தில் ஜனாதிபதி மீண்டும் டெல்லிக்கு புறப்பட்டு செல்கிறாா்.

ஜனாதிபதி வருகையையொட்டி சிறப்பு பாதுகாப்பு படை அதிகாரிகள் சென்னை வந்துள்ளனா். அவர்கள், சென்னை பழைய விமான நிலையத்தில் ஜனாதிபதியின் தனி விமானம் மற்றும் ஹெலிகாப்டா் வந்து இறங்கும் பகுதிகளில் செய்யப்பட்டுள்ள பாதுகாப்பு ஏற்பாடுகளை ஆய்வு செய்தனா்.

ஆலோசனை கூட்டம்

அதைத்தொடர்ந்து சென்னை பழைய விமான நிலையத்தில் ஜனாதிபதியின் 3 நாள் பயணத்தின்போது செய்ய வேண்டிய பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்த சிறப்பு ஆலோசனை கூட்டம் நடந்தது. இதில் ஜனாதிபதியின் பாதுகாப்புபடை உயா் அதிகாரிகள், சென்னை மாநகர போலீஸ் அதிகாரிகள், மத்திய தொழில் பாதுகாப்பு படை, விமான நிலைய அதிகாரிகள், முக்கிய பிரமுகா்களின் பாதுகாப்பு அதிகாரிகள் கலந்து கொண்டனா்.

ஜனாதிபதி வருகையையொட்டி சென்னை பழைய விமான நிலைய பகுதியில் பாதுகாப்புகள் அதிகரிக்கப்பட்டுள்ளன. வருகிற 11-ந் தேதி மாலை வரை இந்த பாதுகாப்பு ஏற்பாடுகள் தொடரும் என்று சென்னை விமான நிலைய அதிகாரிகள் தெரிவித்தனா்.

தொடர்புடைய செய்திகள்

1. ஜனாதிபதியுடன் குஜராத் முதல் மந்திரி சந்திப்பு
ஜனாதிபதி ராம்நாத் கோவிந்தை குஜராத் முதல் மந்திரி பூபேந்திர படேல் சந்தித்துப் பேசினார்.
2. ஆஸ்கர் பெர்னாண்டஸ் மரணம்: ஜனாதிபதி, மோடி உள்பட தலைவர்கள் இரங்கல்
ஆஸ்கர் பெர்னாண்டஸ் மறைவுக்கு ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த், பிரதமர் மோடி உள்பட தலைவா்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர். அவர் எளிமையான அரசியல்வாதி என புகழஞ்சலி சூட்டியுள்ளனர்.
3. மாணவர்கள் தற்கொலையை தடுக்க ‘நீட்’ மசோதாவுக்கு விரைவில் ஜனாதிபதி ஒப்புதல் பெற வேண்டும்
‘நீட்’ தேர்வில் இருந்து தமிழகத்துக்கு விலக்கு அளிக்க கோரி தமிழக சட்டசபையில் இன்று நிறைவேற்றப்படும் சட்ட மசோதாவுக்கு விரைவில் ஜனாதிபதி ஒப்புதல் பெற வேண்டும் என்று டாக்டர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.
4. தமிழக புதிய கவர்னராக ஆர்.என்.ரவி நியமனம் ஜனாதிபதி உத்தரவு
தமிழகத்தின் புதிய கவர்னராக ஆர்.என்.ரவியை நியமனம் செய்து ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் உத்தரவிட்டுள்ளார்.
5. மணிப்பூர் மாநில ஆளுநராக இல.கணேசன் நியமனம்
மணிப்பூர் மாநில ஆளுநராக பாஜக மூத்த தலைவர்களில் ஒருவரான இல.கணேசன் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.