அண்ணா பல்கலைக்கழகத்தில் உயர் சாதியினருக்கான 10 சதவீத இடஒதுக்கீட்டை அமல்படுத்துவதா? கி.வீரமணி கண்டனம்


அண்ணா பல்கலைக்கழகத்தில் உயர் சாதியினருக்கான 10 சதவீத இடஒதுக்கீட்டை அமல்படுத்துவதா? கி.வீரமணி கண்டனம்
x
தினத்தந்தி 9 March 2021 8:49 PM GMT (Updated: 9 March 2021 8:49 PM GMT)

அண்ணா பல்கலைக்கழகத்தில் உயர் சாதியினருக்கான 10 சதவீத இடஒதுக்கீட்டை அமல்படுத்துவதா? கி.வீரமணி கண்டனம்.

சென்னை, 

திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

பொருளாதாரத்தில் நலிந்த உயர் சாதியினருக்கான 10 சதவீத இடஒதுக்கீட்டை ஆளும் அ.தி.மு.க. அரசு ஏற்காத நிலையில், அண்ணா பல்கலைக்கழகத்தில் அமல்படுத்தியது எப்படி? இதற்கு அ.தி.மு.க. அரசு துணை போகிறது என்றால், இதன் விளைவை தேர்தலில் அனுபவிக்க நேரிடும். சமூக நீதி சக்திகளும், முற்போக்குச் சிந்தனையாளர்களும், சட்ட அறிஞர்களும் எதிர்த்து குரல் கொடுக்க முன்வரட்டும்.

அண்ணா பல்கலைக்கழகத்தின் இந்த எம்.டெக் தேர்வில் 10 சதவீத முன்னேறிய சாதி இட ஒதுக்கீடுபடி மூன்று இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன என்பது அதிர்ச்சிக்குரிய ஒன்றாகும். இதற்குத் தமிழக அரசின் உயர்கல்வித் துறை அனுமதி அளித்திருக்க வேண்டும். இல்லையேல், தானடித்த மூப்பாகவே, தாங்களே இந்த 10 சதவீத உயர் சாதி இட ஒதுக்கீட்டை செயல்படுத்தும் முடிவை எடுத்திருக்க வேண்டும். இந்த இரண்டில் எது உண்மையானாலும் சட்டப்படி தவறான நிலைப்பாடு அல்லவா? இதற்கு பிறகு எல்லா பல்கலைக்கழகங்களிலும் இந்த போக்கு நுழைந்து விடும் ஆபத்து தானே வந்துவிடும்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Next Story