எழும்பூர்-புதுச்சேரி, திருச்சி-கரூர் உள்பட 20 சிறப்பு ரெயில் சேவைக்கு அனுமதி


எழும்பூர்-புதுச்சேரி, திருச்சி-கரூர் உள்பட 20 சிறப்பு ரெயில் சேவைக்கு அனுமதி
x
தினத்தந்தி 10 March 2021 8:57 PM GMT (Updated: 10 March 2021 8:57 PM GMT)

எழும்பூர்-புதுச்சேரி, திருச்சி-கரூர் உள்பட 20 சிறப்பு ரெயில் சேவைக்கு அனுமதி எக்ஸ்பிரஸ் ரெயில் டிக்கெட் கட்டணத்துடன் பயணிக்கலாம்.

சென்னை, 

தெற்கு ரெயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:-

கீழ்க்கண்ட முன்பதிவில்லா பெட்டிகள் கொண்ட நீண்ட தூர மின்சார சிறப்பு பயணிகள் ரெயில்கள் (மெமு ரெயில்கள்) இயக்க ரெயில்வே வாரியம் அனுமதி அளித்துள்ளது. பயணிகள் இந்த ரெயில்களில் எக்ஸ்பிரஸ் ரெயில் டிக்கெட் கட்டணத்துடன் பயணிக்கலாம்.

* மேட்டுப்பாளையம்-கோவை (வண்டி எண்: 06009) இடையே காலை 8.20 மணிக்கும், கோவை-மேட்டுப்பாளையம் (06010) இடையே மாலை 5.55 மணிக்கும் வருகிற 15-ந்தேதி முதல் ஞாயிற்றுக்கிழமை தவிர்த்து வாரத்தின் 6 நாட்கள் இயக்கப்படும்.

* விருதாச்சலம்-சேலம் (06121) இடையே காலை 6 மணிக்கும், சேலம்-விருதாச்சலம் (06122) இடையே மாலை 6.55 மணிக்கும் வருகிற 15-ந்தேதி முதல் ஞாயிற்றுக்கிழமை தவிர்த்து வாரத்தின் 6 நாட்கள் இயக்கப்படும்.

* திருச்சி-கரூர் (06123) இடையே மாலை 6.10 மணிக்கும், கரூர்-திருச்சி (06124) இடையே காலை 7.20 மணிக்கும் வருகிற 15-ந்தேதி முதல் சிறப்பு ரெயில்கள் தினசரி இயக்கப்படும்.

* சென்னை எழும்பூர்-புதுச்சேரி (06025) இடையே சிறப்பு ரெயில் காலை 6.35 மணிக்கும், புதுச்சேரி-எழும்பூர் (06026) இடையே சிறப்பு ரெயில் மதியம் 3.35 மணிக்கும் வருகிற 22-ந்தேதி முதல் தினசரி இயக்கப்படும்.

* தாம்பரம்-விழுப்புரம் (06027) இடையே ஏப்ரல் மாதம் 1-ந்தேதியில் இருந்து மாலை 6 மணிக்கும், விழுப்புரம்-தாம்பரம் (06028) இடையே ஏப்ரல் மாதம் 2-ந்தேதியில் இருந்தும் காலை 5.20 மணிக்கு ஞாயிற்றுக்கிழமை தவிர்த்து வாரத்தின் 6 நாட்களும் இயக்கப்படும்.

* சோரனூர்-கண்ணூர் (06023) இடையே காலை 4.30 மணிக்கும், கண்ணூர்-சோரனூர் (06024) இடையே மாலை 5.20 மணிக்கும் வருகிற 16-ந்தேதி முதல் ஞாயிற்றுக்கிழமை தவித்து வாரத்தின் 6 நாட்களும் இயக்கப்படும்.

* திருச்சி-காரைக்குடி (06125) இடையே வருகிற 15-ந்தேதி முதல் மாலை 6.15 மணிக்கும், காரைக்குடி-திருச்சி (06126) இடையே வருகிற 16-ந்தேதி முதல் காலை 7 மணிக்கும், கொல்லம்-ஆலப்புழா (06014) இடையே வருகிற 15-ந்தேதி முதல் அதிகாலை 3.30 மணிக்கும், ஆலப்புழா-கொல்லம் (06013) இடையே வருகிற 17-ந்தேதி முதல் மாலை 5.20 மணிக்கும் தினசரி சிறப்பு ரெயில்கள் இயக்கப்படும்.

* ஆலப்புழா-எர்ணாகுளம் (06016) இடையே வருகிற 15-ந்தேதி முதல் காலை 7.25 மணிக்கும், எர்ணாகுளம்-ஆலப்பழா (06015) இடையே வருகிற 17-ந்தேதி முதல் மதியம் 3.40 மணிக்கும், எர்ணாகுளம்-சோரணூர் (06018) இடையே வருகிற 15-ந்தேதி முதல் மாலை 5.35 மணிக்கும், சோரணூர்-எர்ணாகுளம் (06017) இடையே வருகிற 17-ந்தேதி முதல் அதிகாலை 3.30 மணிக்கும் தினசரி ரெயில்கள் இயக்கப்படும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Next Story