மாநில செய்திகள்

மக்கள் நீதி மய்யம் கூட்டணியில் சமத்துவ மக்கள் கட்சி போட்டியிடும் 40 தொகுதிகள் இன்று வேட்பாளர் பட்டியல் வெளியாகிறது + "||" + The list of candidates for the 40 constituencies contested by the Equality People's Party in the People's Justice Center alliance is released today

மக்கள் நீதி மய்யம் கூட்டணியில் சமத்துவ மக்கள் கட்சி போட்டியிடும் 40 தொகுதிகள் இன்று வேட்பாளர் பட்டியல் வெளியாகிறது

மக்கள் நீதி மய்யம் கூட்டணியில் சமத்துவ மக்கள் கட்சி போட்டியிடும் 40 தொகுதிகள் இன்று வேட்பாளர் பட்டியல் வெளியாகிறது
மக்கள் நீதி மய்யம் கூட்டணியில் இடம் பெற்றுள்ள சமத்துவ மக்கள் கட்சி போட்டியிடும் 40 தொகுதிகளை அக்கட்சியின் தலைவர் ஆர்.சரத்குமார் அறிவித்தார். இன்று (சனிக்கிழமை) வேட்பாளர் பட்டியல் வெளியிடப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.
சென்னை, 

மக்கள் நீதி மய்யம் கூட்டணியில் சமத்துவ மக்கள் கட்சிக்கு 40 தொகுதிகள் ஒதுக்கப்பட்டு உள்ளன. அந்த 40 தொகுதிகளை அக்கட்சியின் தலைவர் ஆர்.சரத்குமார் நேற்று சென்னையில் வெளியிட்டார்.

அதன் விவரம் வருமாறு:-

1.துறைமுகம் 2.உத்திரமேரூர் 3. அரக்கோணம் (தனி) 4.சோளிங்கர் 5.ஆற்காடு 6.வாணியம்பாடி 7.ஆம்பூர் 8.ஜோலார்பேட்டை 9.போளூர் 10.உளுந்தூர்பேட்டை 11.ரிஷிவந்தியம் 12. ஆத்தூர் (தனி) 13. சங்ககிரி 14. திருச்செங்கோடு 15. அந்தியூர் 16. கிருஷ்ணராயபுரம் (தனி) 17. லால்குடி 18. கடலூர் 19.சிதம்பரம் 20.சீர்காழி (தனி)

21.திருத்துறைப்பூண்டி (தனி) 22.சிவகங்கை 23.மதுரை தெற்கு 24.பெரியகுளம் (தனி) 25. ராஜபாளையம் 26. விருதுநகர் 27.விளாத்திகுளம் 28.தூத்துக்குடி 29.திருச்செந்தூர் 30. ஒட்டப்பிடாரம் (தனி) 31. வாசுதேவநல்லூர் (தனி) 32.தென்காசி 33.ஆலங்குளம் 34. நெல்லை 35. அம்பாசமுத்திரம் 36,நாங்குநேரி 37.ராதாபுரம் 38.பத்மநாபபுரம் 39.விளவங்கோடு 40.கிள்ளியூர்.

இன்று வேட்பாளர் பட்டியல்

பின்னர் சரத்குமார் நிருபர்களிடம் கூறும்போது, நாளை (அதாவது இன்று) வேட்பாளர்கள் பட்டியலை வெளியிட உள்ளோம். அதன்பின்பு வேட்பாளர் அறிமுக கூட்டம் நடைபெறும் என்றார்.

பேட்டியின்போது கட்சியின் முதன்மை துணை பொதுச்செயலாளர் ராதிகா சரத்குமார் உடன் இருந்தார்.

தொடர்புடைய செய்திகள்

1. நடிகர் அஜித்தின் வலிமை பட முதல் பார்வை வீடியோ வெளியீடு
நடிகர் அஜித் நடிப்பில் வெளிவர உள்ள வலிமை படத்தின் முதல் பார்வை வீடியோ வெளியிடப்பட்டு உள்ளது.
2. 9 மாவட்ட ஊரக உள்ளாட்சி தேர்தல்: அ.தி.மு.க. வேட்பாளர்கள் பட்டியல் வெளியீடு
9 மாவட்டங்களில் நடைபெற இருக்கும் ஊரக உள்ளாட்சி தேர்தலில் அ.தி.மு.க. சார்பில் போட்டியிடும் வேட்பாளர்கள் பட்டியலை கட்சியின் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் வெளியிட்டுள்ளனர்.
3. ‘நீட்’ தேர்வு பாதிப்பை ஆய்வு செய்த ஏ.கே.ராஜன் குழு அறிக்கை வெளியீடு
‘நீட்‘ தேர்வால் ஏற்படும் பாதிப்புகளை ஆய்வு செய்த ஏ.கே.ராஜன் குழுவின் அறிக்கை வெளியாகியுள்ளது. அதில் மருத்துவத்துறையில் தமிழகம் பின்தங்கி விடும் என எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.
4. உள்ளாட்சி தேர்தல்: காஞ்சீபுரம், செங்கல்பட்டு தி.மு.க. வேட்பாளர் பட்டியல் வெளியீடு
ஊரக உள்ளாட்சி தேர்தலில் போட்டியிடும் காஞ்சீபுரம் மற்றும் செங்கல்பட்டு தி.மு.க. வேட்பாளர்களின் முதல் கட்ட பட்டியல் வெளியிடப்பட்டு உள்ளது.
5. அரசு வேலைக்கான வயது உச்சவரம்பு 32 ஆக உயர்வு அரசாணை வெளியீடு
அரசு வேலைக்கான வயது உச்சவரம்பு 32 ஆக உயர்வு அரசாணை வெளியீடு.