மாநில செய்திகள்

"டிடிவி தினகரன் ஆர்.கே.நகரில் இருந்து ஓடிவரக் காரணம் என்ன?" - அமைச்சர் கடம்பூர் ராஜூ கேள்வி + "||" + What is the reason behind TTV Dhinakaran running away from RK Nagar? Question by Minister Kadampur Raju

"டிடிவி தினகரன் ஆர்.கே.நகரில் இருந்து ஓடிவரக் காரணம் என்ன?" - அமைச்சர் கடம்பூர் ராஜூ கேள்வி

"டிடிவி தினகரன் ஆர்.கே.நகரில் இருந்து ஓடிவரக் காரணம் என்ன?" - அமைச்சர் கடம்பூர் ராஜூ கேள்வி
டிடிவி தினகரன் ஆர்.கே.நகரில் இருந்து ஓடிவரக் காரணம் என்ன என்று அமைச்சர் கடம்பூர் ராஜூ கேள்வி எழுப்பியுள்ளார்.
கோவில்பட்டி,

தமிழக சட்ட சபைக்கு ஏப்ரல் 6-ந் தேதி தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் தேர்தல்களம் விறுவிறுப்பாகி வருகிறது. தேர்தல் களத்தில் அ.தி.மு.க., தி.மு.க., கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம், டி.டி.வி.தினகரனின் அ.ம.மு.க. கூட்டணி கட்சிகள் மற்றும் சீமானின் நாம் தமிழர் கட்சி என்று 5 முனை போட்டி நிலவுவதால், தமிழக தேர்தல் களம் சூடுபிடிக்க தொடங்கி உள்ளது.

இந்த நிலையில், தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி சட்டமன்ற தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிடும் அமைச்சர் கடம்பூர் ராஜூ கழுகுமலை பகுதியில் நேற்று வீடு வீடாக சென்று வாக்கு சேகரித்தார்.

அதன் பின்னர் செய்தியாளர்கள் சந்திப்பில் அமைச்சர் கடம்பூர் ராஜூ கூறியதாவது:-

திமுக தலைவர் ஸ்டாலின் ராக்கெட்டில் வந்தால் கூட மக்கள் ஏற்றுக்கொள்ளமாட்டார்கள். சட்டமன்றத்திற்கு மூன்று முறை தான் டிடிவி தினகரன் வருகை தந்திருக்கிறார். "ஆர்.கே.நகரில் இருந்து டிடிவி தினகரன் ஓடிவரக் காரணம் என்ன?. என்று அமைச்சர் கேள்வி எழுப்பியுள்ளார். மேலும் அமமுக பொதுச்செயலாளர் தினகரனுக்கு சட்டமன்ற தேர்தலில் டெபாசிட் கூட கிடைக்காது.

இவ்வாறு அவர் கூறினார்.

தொடர்புடைய செய்திகள்

1. தமிழகத்தில் இருந்து வெளிமாநிலங்களுக்கு ஆக்சிஜன் ஏற்றுமதி - மத்திய அரசின் செயலுக்கு டி.டி.வி. தினகரன் கண்டனம்
தமிழக அரசை கலந்து ஆலோசிக்காமல் வெளிமாநிலங்களுக்கு ஆக்சிஜன் ஏற்றுமதி செய்யும் மத்திய அரசின் செயலுக்கு டி.டி.வி. தினகரன் கண்டனம் தெரிவித்துள்ளார்.
2. அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் முதல்கட்ட வேட்பாளர்கள் பட்டியல் வெளியீடு
தமிழக சட்டமன்ற தேர்தலுக்கான 15 வேட்பாளர்கள் கொண்ட முதல் பட்டியலை அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் வெளியிட்டுள்ளார்.
3. பட்ஜெட்டில் பெட்ரோல், டீசல் மீதான வரியை குறைக்காதது ஏமாற்றம் அளிக்கிறது - டிடிவி தினகரன்
பட்ஜெட்டில் பெட்ரோல், டீசல் மீதான வரியை குறைக்காதது ஏமாற்றம் அளிக்கிறது என்று டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.
4. எங்களை மீறி அரசியலில் யாரும் எதுவும் செய்துவிட முடியாது- டிடிவி தினகரன்
எடப்பாடி பழனிசாமியின் நான்கு ஆண்டு கால ஆட்சிக்கு மக்கள் தேர்தலில் பதில் அளிப்பார்கள். தங்களை மீறி அரசியலில் யாரும் எதுவும் செய்துவிட முடியாது என டிடிவி தினகரன் கூறினார்.
5. வீரன் வேல் வீசியது மதகரி மீது. சிறுநரி மீதல்ல, தெரிகிறதா? பேரறிஞர் அண்ணாவின் வரியை மேற்கொள் காட்டி டிடிவி தினகரன் டுவீட்
சசிகலா வருகையால் ஆட்சி, அதிகாரத்தில் உள்ளவர்கள் ஏன் பயப்படுகின்றனர் என தெரியவில்லை டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.