இன்றைய பெட்ரோல், டீசல் விலை நிலவரம்


இன்றைய பெட்ரோல், டீசல் விலை நிலவரம்
x
தினத்தந்தி 18 March 2021 1:24 AM GMT (Updated: 18 March 2021 1:24 AM GMT)

பெட்ரோல், டீசல் விலையில் தொடர்ந்து 19-வது நாளாக மாற்றம் எதுவும் இல்லை.

சென்னை,

சர்வதேச சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் விலைக்கேற்ப இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலையை நிர்ணையித்துக்கொள்ள எண்ணெய் நிறுவனங்களுக்கு மத்திய அரசு தரப்பில்  அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இதன்படி, தினமும்  எரிபொருள்  விலை நிலவரத்தை எண்ணெய் நிறுவனங்கள் வெளியிட்டு வருகின்றன. 

எண்ணெய் நிறுவனங்கள் இன்று வெளியிட்ட அறிவிப்பின் படி, ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.93.11க்கும், டீசல் ரூ.86.45க்கு விற்பனை செய்யப்படுகிறது. பெட்ரோல், டீசல் விலையில் 19-வது நாளாக  மாற்றமின்றி அதே விலையில் நீடித்து வருகிறது. 


Next Story