மாநில செய்திகள்

பராமரிப்பு பணி: குருவாயூர், நெல்லை, செங்கோட்டை ரெயில்கள் பகுதியாக ரத்து - தெற்கு ரெயில்வே அறிவிப்பு + "||" + Maintenance work: Guruvayur, Nellai, sengottai trains partially canceled - Southern Railway notice

பராமரிப்பு பணி: குருவாயூர், நெல்லை, செங்கோட்டை ரெயில்கள் பகுதியாக ரத்து - தெற்கு ரெயில்வே அறிவிப்பு

பராமரிப்பு பணி: குருவாயூர், நெல்லை, செங்கோட்டை ரெயில்கள் பகுதியாக ரத்து - தெற்கு ரெயில்வே அறிவிப்பு
பராமரிப்பு பணி காரணமாக குருவாயூர், நெல்லை, செங்கோட்டை ரெயில்கள் பகுதியாக ரத்து செய்யப்படுவதாக தெற்கு ரெயில்வே அறிவித்துள்ளது.
சென்னை, 

திருமங்கலம்-துலுக்கப்பட்டி இடையே பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் கீழ்க்கண்ட ரெயில்கள் பகுதியாகவும், முழுவதுமாகவும் ரத்து செய்யப்படுகிறது.

* சென்னை எழும்பூர்-நாகர்கோவில் (வண்டி எண்: 06063) இடையே இயக்கப்படும் சிறப்பு ரெயில் வருகிற 25-ந்தேதியும், நாகர்கோவில்-எழும்பூர் (06064) இடையே இயக்கப்படும் சிறப்பு ரெயில் வருகிற 26-ந்தேதியும், தாம்பரம்-நாகர்கோவில் (06065) இடையே இயக்கப்படும் சிறப்பு ரெயில் வருகிற 28, 29-ந்தேதிகளிலும், நாகர்கோவில்-தாம்பரம் (06066) இடையே இயக்கப்படும் சிறப்பு ரெயில் வருகிற 29, 30-ந்தேதிகளிலும் முழுவதுமாக ரத்துசெய்யப்படுகிறது.

* அதேபோல், குருவாயூர்-எழும்பூர் (06128) இடையே இயக்கப்படும் சிறப்பு ரெயில் வருகிற 20-ந்தேதி (இன்று) முதல் 29-ந்தேதி வரை நெல்லை-எழும்பூர் இடையே பகுதியாக ரத்து செய்யப்படுகிறது. மறுமார்க்கமாக எழும்பூர்-குருவாயூர் (06127) இடையே இயக்கப்படும் சிறப்பு ரெயில் வருகிற 21-ந்தேதி முதல் 30-ந்தேதி வரை எழும்பூர்-நெல்லை இடையே பகுதியாக ரத்துசெய்யப்படுகிறது.

* எழும்பூர்-நெல்லை (02631) இடையே இயக்கப்படும் சிறப்பு ரெயில் வருகிற 25-ந்தேதி முதல் 29-ந்தேதி வரை மதுரை-நெல்லை இடையிலும், நெல்லை-எழும்பூர் (02632) இடையே இயக்கப்படும் சிறப்பு ரெயில் வருகிற 26-ந்தேதி முதல் 30-ந்தேதி வரை நெல்லை-மதுரையிலும் பகுதியாக ரத்துசெய்யப்படுகிறது.

* எழும்பூர்-செங்கோட்டை (06181) இடையே இயக்கப்படும் சிறப்பு ரெயில் வருகிற 25-ந்தேதி முதல் 29-ந்தேதி வரை மானாமதுரை-செங்கோட்டை இடையிலும், செங்கோட்டை-எழும்பூர் (06182) இடையே இயக்கப்படும் சிறப்பு ரெயில் வருகிற 26-ந்தேதி முதல் 28-ந்தேதி வரை செங்கோட்டை-மானாமதுரை இடையிலும் பகுதியாக ரத்துசெய்யப்படுகிறது.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

1. நவீன எரிவாயு தகன மேடை பராமரிப்பு பணி
கள்ளக்குறிச்சியில் நவீன எரிவாயு தகன மேடை பராமரிப்பு பணியை கலெக்டர் ஸ்ரீதர் ஆய்வுசெய்தார்
2. நெல்லை அருகே பிளஸ்-2 மாணவி வெட்டிக்கொலை
நெல்லை அருகே பிளஸ்-2 மாணவி சரமாரியாக வெட்டிக் கொலை செய்யப்பட்டார். இந்த வெறிச்செயலில் ஈடுபட்ட அவரது அண்ணனை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.
3. தமிழகத்தில் 9 மாதம் பராமரிப்பு பணி நடைபெறவில்லை - அமைச்சர் செந்தில் பாலாஜி குற்றச்சாட்டு: முன்னாள் அமைச்சர் மறுப்பு
தமிழகத்தில் 9 மாதம் பராமரிப்பு பணி நடைபெறவில்லை என்ற மின்துறை அமைச்சர் செந்தில் பாலாஜியின் குற்றச்சாட்டை முன்னாள் அமைச்சர் தங்கமணி மறுத்துள்ளார்.
4. கொரோனா பரவல்: குருவாயூர், புனலூர் எக்ஸ்பிரஸ் ரெயில்கள் திருவனந்தபுரம் வரை இயக்கப்படும் - மதுரை கோட்ட ரெயில்வே தகவல்
கொரோனா பரவல் காரணமாக குருவாயூர், புனலூர் எக்ஸ்பிரஸ் ரெயில்கள் திருவனந்தபுரம் வரை இயக்கப்படும் என்று மதுரை கோட்ட ரெயில்வே தகவல் தெரிவித்துள்ளது.
5. வெப்பச்சலனம் காரணமாக குமரி, நெல்லையில் கனமழை பெய்யும் - வானிலை ஆய்வு மையம் தகவல்
வெப்பச்சலனம் காரணமாக குமரி, நெல்லையில் கனமழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.