தமிழகத்தில் 9,10, 11ம் வகுப்பு மாணவர்களுக்கு 22-ம் தேதி முதல் விடுமுறை அறிவிப்பு


தமிழகத்தில் 9,10, 11ம் வகுப்பு மாணவர்களுக்கு 22-ம் தேதி முதல் விடுமுறை அறிவிப்பு
x
தினத்தந்தி 20 March 2021 9:18 AM GMT (Updated: 20 March 2021 9:30 AM GMT)

தமிழகத்தில் 9,10, 11ம் வகுப்பு மாணவர்களுக்கு 22-ம் தேதி முதல் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

சென்னை,

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. தஞ்சை பள்ளியில் சுமார் 112 ற்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் தமிழகம் முழுவதும் தீவிர நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில் சென்னை தலைமைச்செயலகத்தில் தலைமைச்செயலாளர் தலைமையில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இந்த ஆலோசனை பின்  தமிழகத்தில் 9,10, 11ம் வகுப்பு மாணவர்களுக்கு 22-ம் தேதி முதல் மறு உத்தரவு வரும் வரை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. 

9 முதல் 11-ம் வகுப்புகளுக்கு தொடர்ந்து ஆன்லைன் வகுப்புகள் நடைபெறும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு மட்டும் பொதுத்தேர்வு காரணமாக வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி வகுப்புகள் நடைபெறும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

மற்ற வாரியங்களின் கீழ் இயங்கும் பள்ளிகளில் திட்டமிட்டபடி 10-ம் வகுப்பு பொதுத்தேர்வு நடைபெறும். 

பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களுக்கு பள்ளிகளில் சிறப்பு வகுப்புகள் நடத்தவும், விடுதிகள் இயங்கவும் அனுமதியளிக்கப்பட்டுள்ளது. 

கொரோனா பரவல் அதிகரித்து வருவதன் காரணமாக இந்த உத்தரவை தமிழக அரசின் தலைமைச் செயலாளர் பிறப்பித்துள்ளார்.

கொரோனா அதிகரித்து வருவதாலும், மாணவர்கள், பொற்றோர்கள் பாதிக்கப்படக் கூடாது என்பதாலும் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

Next Story