இலங்கை பற்றிய தீர்மானத்தில் இந்தியா புறக்கணிப்பு: “தமிழர்களுக்கு பா.ஜ.க. அரசு செய்த மாபெரும் துரோகம்”


இலங்கை பற்றிய தீர்மானத்தில் இந்தியா புறக்கணிப்பு: “தமிழர்களுக்கு பா.ஜ.க. அரசு செய்த மாபெரும் துரோகம்”
x
தினத்தந்தி 24 March 2021 8:39 PM GMT (Updated: 24 March 2021 8:39 PM GMT)

இலங்கை பற்றிய தீர்மானத்தில் இந்தியா புறக்கணிப்பு: “தமிழர்களுக்கு பா.ஜ.க. அரசு செய்த மாபெரும் துரோகம்” ப.சிதம்பரம் ‘டுவிட்டர்' பதிவு.

சென்னை, 

முன்னாள் மத்திய மந்திரி ப.சிதம்பரம் தன்னுடைய ‘டுவிட்டர்' பதிவில் கூறி இருப்பதாவது:-

ஐ.நா. மனித உரிமைகள் அமைப்பின் இலங்கை பற்றிய தீர்மானத்தை ஆதரித்து வாக்களிக்காமல் இந்தியா புறக்கணித்திருக்கிறது. இது தமிழர்களுக்கும் தமிழர் உணர்வுகளுக்கும் பா.ஜ.க. அரசு செய்த மாபெரும் துரோகம், மாபாதக செயல். இச்செயல் ஒன்றே போதும், அ.தி.மு.க. - பா.ஜ.க. கூட்டணியை எதிர்த்து ஒருமனதாக தமிழக வாக்காளர்கள் அனைவரும் வாக்களிக்க வேண்டும். பச்சை துரோகத்திற்கு தகுந்த தண்டனையை தமிழ்நாடு தர வேண்டும்.

வெளியறவுத் துறை மந்திரி ஜெய்சங்கர், அரசின் வற்புறுத்தலால் ஐ.நா. மனித உரிமை அமைப்பின் தீர்மானத்தை புறக்கணித்தார் என்றால், தமிழர்களின் உணர்வுகளை மதித்து அவர் பதவி விலக வேண்டும்.

இவ்வாறு அதில் அவர் பதிவிட்டுள்ளார்.

Next Story