மாநில செய்திகள்

7 வயது சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை: புதுமாப்பிள்ளைக்கு 10 ஆண்டு ஜெயில் போக்சோ சிறப்பு கோர்ட்டு தீர்ப்பு + "||" + 7-year-old girl sexually abused: Pudumappillai sentenced to 10 years in jail

7 வயது சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை: புதுமாப்பிள்ளைக்கு 10 ஆண்டு ஜெயில் போக்சோ சிறப்பு கோர்ட்டு தீர்ப்பு

7 வயது சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை: புதுமாப்பிள்ளைக்கு 10 ஆண்டு ஜெயில் போக்சோ சிறப்பு கோர்ட்டு தீர்ப்பு
7 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த புதுமாப்பிள்ளைக்கு 10 ஆண்டுகள் ஜெயில் தண்டனை விதித்து போக்சோ சிறப்பு கோர்ட்டு தீர்ப்பளித்துள்ளது.
வேலூர், 

திருப்பத்தூர் மாவட்டம் நாட்டறம்பள்ளி அருகே உள்ள புதுப்பேட்டை பகுதி பக்கிரிமடம் கிராமத்தைச் சேர்ந்தவர் விக்னேஷ் (வயது 25). இவர், 2018-ம் ஆண்டு ஆகஸ்டு மாதம் 27-ந்தேதி விளையாடிக்கொண்டிருந்த ஒரு சிறுமியை கடத்தி சென்று பாலியல் வன்கொடுமை செய்தார். மேலும் இதை யாரிடமும் சொல்லக்கூடாது என எச்சரித்து, கொலை மிரட்டலும் விடுத்தார்.

ஆனால் சிறுமியின் நடவடிக்கையில் சந்தேகமடைந்த பெற்றோர் அவளிடம் கேட்டபோது, தனக்கு நேர்ந்த கொடுமையை தெரிவித்தாள். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

10 ஆண்டுகள் ஜெயில்

இந்த வழக்கு வேலூர் சத்துவாச்சாரி ஒருங்கிணைந்த கோர்ட்டில் உள்ள போக்சோ சிறப்பு நீதிமன்றத்தில் நடந்து வந்தது. நேற்று வழக்கை விசாரித்த நீதிபதி செல்வம் தீர்ப்பு கூறினார். அதில் விக்னேசுக்கு 10 ஆண்டுகள் ஜெயில் தண்டனையும், ரூ.12 ஆயிரம் அபராதமும் விதித்து உத்தரவிட்டார்.

வழக்கு நடந்து வந்த காலக்கட்டத்தில் விக்னேஷ் வேறு ஒரு பெண்ணை காதலித்தார். அந்த பெண்ணை அவர் ஒருசில நாட்களுக்கு முன்பு தான் திருமணம் செய்ததாக, போலீசார் தெரிவித்தனர். 

தொடர்புடைய செய்திகள்

1. மகளை பலாத்காரம் செய்த தந்தைக்கு 60 ஆண்டு சிறை ஈரோடு மகளிர் கோர்ட்டு அதிரடி தீர்ப்பு
நண்பர்களுடன் சேர்ந்து பெற்ற மகளையே கூட்டு பாலியல் பலாத்காரம் செய்த தந்தைக்கு 60 ஆண்டு சிறை தண்டனையும், அவரது நண்பர்களுக்கு 40 ஆண்டு ஜெயில் தண்டனையும் விதித்து ஈரோடு மகளிர் கோர்ட்டு அதிரடி தீர்ப்பு கூறியது.
2. மக்களின் தீர்ப்பை ஏற்றுக்கொள்கிறோம்.. வாக்களித்த மக்களுக்கு நன்றி - கமல்ஹாசன்
மக்களின் தீர்ப்பை ஏற்றுக்கொள்வதாகவும், வாக்களித்த மக்களுக்கு நன்றி என்றும் மநீம தலைவர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.
3. பட்டா வழங்க லஞ்சம்: நில அளவை துணை ஆய்வாளருக்கு 2 ஆண்டு சிறை
பட்டா வழங்க லஞ்சம்: நில அளவை துணை ஆய்வாளருக்கு 2 ஆண்டு சிறை சென்னை சிறப்பு கோர்ட்டு தீர்ப்பு.
4. 7 வயது சிறுமி பாலியல் கொடுமை செய்து கொலை: கோவை வாலிபருக்கு தூக்கு தண்டனை ஆயுளாக குறைப்பு ஐகோர்ட்டு தீர்ப்பு
7 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்த வழக்கில், கோவை வாலிபருக்கு விதிக்கப்பட்ட தூக்கு தண்டனையை ஆயுள் தண்டனையாக குறைத்து சென்னை ஐகோர்ட்டு தீர்ப்பு அளித்துள்ளது.
5. சிறுமிக்கு பாலியல் தொந்தரவு: வாலிபருக்கு ஆயுள் தண்டனை சென்னை சிறப்பு கோர்ட்டு தீர்ப்பு
சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த வாலிபருக்கு ஆயுள் தண்டனை விதித்து சென்னை சிறப்பு கோர்ட்டு தீர்ப்பு கூறி உள்ளது.