தேனி : தமிழ் மாநில காங்கிரஸ் போடி நகர தலைவர் அங்குவேல் வீட்டில் வருமான வரித்துறையினர் சோதனை


தேனி : தமிழ் மாநில காங்கிரஸ் போடி நகர தலைவர் அங்குவேல் வீட்டில் வருமான வரித்துறையினர் சோதனை
x
தினத்தந்தி 25 March 2021 8:50 AM GMT (Updated: 25 March 2021 8:50 AM GMT)

தேனி : தமிழ் மாநில காங்கிரஸ் போடி நகர தலைவர் அங்குவேல் வீட்டில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தி வருகிறது.

தேனி,

தமிழகத்தில் ஏப்ரல் 6-ம் தேதி ஒரே கட்டமாக சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. தேர்தலில் பதிவாகும் வாக்குகள் மே 2-ம் தேதி எண்ணப்பட்டு அன்றே முடிவுகள் அறிவிக்கப்படுகிறது. 

இதனிடையே தமிழக சட்டசபை தேர்தலை நேர்மையாக நடத்தவும், வாக்காளர்களுக்கு பணம், பரிசுப்பொருட்கள் மற்றும் மதுபானங்கள் கொடுப்பதை தடுக்கவும் தேர்தல் பறக்கும் படையினர் உள்ளூர் போலீசாருடன் சேர்ந்து தீவிரமாக கண்காணித்து வருகின்றனர்.

இந்நிலையில் தேனி மாவட்டம் போடிநாயக்கனூரில் தமாகா நகரத் தலைவர் அங்குவேல் வீட்டில் வருமான வரித்துறையினர் இன்று சோதனை நடத்தி வருகிறது. தேர்தல் பறக்கும் படையினர் சேர்ந்து வருமான வரித்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர். போடிநாயக்கனூரில் துணை முதல்வர் பன்னீர்செல்வம் போட்டியிடும் சூழ்நிலையில் அதிமுக கூட்டணி கட்சி நிர்வாகி வீட்டில் சோதனை நடைபெற்று வருகிறது.

Next Story