மாநில செய்திகள்

சென்னை-கோவை, மதுரை-எழும்பூர், தாம்பரம்-நாகர்கோவில் இடையே சிறப்பு ரெயில்கள் தெற்கு ரெயில்வே அறிவிப்பு + "||" + Southern Railway announces special trains between Chennai-Coimbatore, Madurai-Egmore and Tambaram-Nagercoil

சென்னை-கோவை, மதுரை-எழும்பூர், தாம்பரம்-நாகர்கோவில் இடையே சிறப்பு ரெயில்கள் தெற்கு ரெயில்வே அறிவிப்பு

சென்னை-கோவை, மதுரை-எழும்பூர், தாம்பரம்-நாகர்கோவில் இடையே சிறப்பு ரெயில்கள் தெற்கு ரெயில்வே அறிவிப்பு
சென்னை-கோவை, மதுரை-எழும்பூர், தாம்பரம்-நாகர்கோவில் இடையே முன்பதிவு சிறப்பு ரெயில்கள் இயக்க ரெயில்வே வாரியம் அனுமதி அளித்துள்ளது.
சென்னை, 

இது குறித்து தெற்கு ரெயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:-

* சென்னை எம்.ஜி.ஆர். சென்டிரல்-ஹஸரத் நிசாமுதீன் (வண்டி எண்: 06151) இடையே இயக்கப்படும் சிறப்பு ரெயில் ஏப்ரல் மாதம் 10-ந்தேதி முதல் சனிக்கிழமைகளில் காலை 6.05 மணிக்கு சென்டிரலில் இருந்து புறப்படும். மறுமார்க்கமாக ஹஸரத் நிசாமுதீன்-எம்.ஜி.ஆர். சென்டிரல் (06152) இடையே இயக்கப்படும் சிறப்பு ரெயில் ஏப்ரல் மாதம் 12-ந்தேதி முதல் திங்கட்கிழமைகளில் மதியம் 3.35 மணிக்கு ஹஸரத் நிசாமுதீனில் இருந்து இயக்கப்படும்.

* எம்.ஜி.ஆர். சென்டிரல்- கோவை (06029) இடையே இயக்கப்படும் சதாப்தி சிறப்பு ரெயில் ஏப்ரல் மாதம் 10-ந்தேதி முதல் செவ்வாய்க்கிழமை தவிர்த்து வாரத்தில் 6 நாட்கள் காலை 7.10 மணிக்கு சென்டிரலில் இருந்து புறப்படும். மறுமார்க்கமாக கோவை-எம்.ஜி.ஆர். சென்டிரல் (06030) இடையே இயக்கப்படும் சதாப்தி சிறப்பு ரெயில் ஏப்ரல் மாதம் 10-ந்தேதி முதல் செவ்வாய்க்கிழமை தவிர்த்து வாரத்தில் 6 நாட்கள் மதியம் 3.05 மணிக்கு கோவையில் இருந்து இயக்கப்படும்.

மதுரை-சென்னை எழும்பூர்

* மதுரை-ஹஸரத் நிசாமுதீன் (06155) இடையே இயக்கப்படும் வாராந்திர சிறப்பு ரெயில் ஏப்ரல் மாதம் 20-ந்தேதி முதல் செவ்வாய், ஞாயிற்றுக்கிழமைகளில் நள்ளிரவு 12.50 மணிக்கு மதுரையில் இருந்து இயக்கப்படும். மறுமார்க்கமாக ஹஸரத் நிசாமுதீன்- மதுரை (06156) இடையே இயக்கப்படும் வாராந்திர சிறப்பு ரெயில் ஏப்ரல் மாதம் 22-ந்தேதி முதல் செவ்வாய், வியாழக்கிழமைகளில் அதிகாலை 5.20 மணிக்கு ஹஸரத் நிசாமுதீனில் இருந்து புறப்படும்.

* மதுரை-சென்னை எழும்பூர் (06158) இடையே இயக்கப்படும் வாராந்திர சிறப்பு ரெயில் ஏப்ரல் மாதம் 17-ந்தேதி முதல் வியாழன், சனிக்கிழமைகளில் இரவு 8.50 மணிக்கு மதுரையில் இருந்து புறப்படும். மறுமார்க்கமாக சென்னை எழும்பூர்-மதுரை (06157) இடையே இயக்கப்படும் வாராந்திர சிறப்பு ரெயில் ஏப்ரல் மாதம் 18-ந்தேதி முதல் வெள்ளி, ஞாயிற்றுக்கிழமைகளில் காலை 8.10 மணிக்கு எழும்பூரில் இருந்து புறப்படும்.

புதுச்சேரி-மங்களூர்

* கோவை-எம்.ஜி.ஆர் சென்டிரல் (02682) இடையே இயக்கப்படும் வாராந்திர சிறப்பு ரெயில் ஏப்ரல் மாதம் 16-ந்தேதி முதல் வெள்ளிக்கிழமைகளில் இரவு 11.30 மணிக்கு கோவை ரெயில் நிலையத்தில் இருந்து இயக்கப்படும். மறுமார்க்கமாக எம்.ஜி.ஆர் சென்டிரல்-கோவை (02681) இடையே இயக்கப்படும் வாராந்திர சிறப்பு ரெயில் ஏப்ரல் மாதம் 17-ந்தேதி முதல் சனிக்கிழமைகளில் இரவு 10.30 மணிக்கு சென்டிரல் ரெயில் நிலையத்தில் இருந்து இயக்கப்படும்.

* புதுச்சேரி-மங்களூரு (06855) இடையே இயக்கப்படும் வாராந்திர சிறப்பு ரெயில் ஏப்ரல் மாதம் 15-ந்தேதி முதல் வியாழக்கிழமைகளில் மாலை 4.45 மணிக்கு புதுச்சேரி ரெயில் நிலையத்தில் இருந்து இயக்கப்படும். மறுமார்க்கமாக மங்களூரு-புதுச்சேரி (06856) இடையே இயக்கப்படும் வாராந்திர சிறப்பு ரெயில் ஏப்ரல் மாதம் 16-ந்தேதி முதல் வெள்ளிக்கிழமைகளில் மாலை 4.35 மணிக்கு மங்களூரு ரெயில் நிலையத்தில் இருந்து இயக்கப்படும்.

அந்தியோதயா சிறப்பு ரெயில்

* புதுச்சேரி-கன்னியாகுமரி (06861) இடையே இயக்கப்படும் வாராந்திர சிறப்பு ரெயில் ஏப்ரல் மாதம் 11-ந்தேதி முதல் ஞாயிற்றுக்கிழமைகளில் மதியம் 12 மணிக்கு புதுச்சேரி ரெயில் நிலையத்தில் இருந்து இயக்கப்படும். மறுமார்க்கமாக கன்னியாகுமரி-புதுச்சேரி (06862) இடையே இயக்கப்படும் வாராந்திர சிறப்பு ரெயில் ஏப்ரல் மாதம் 12-ந்தேதி முதல் திங்கட்கிழமைகளில் மதியம் 1.50 மணிக்கு கன்னியாகுமரி ரெயில் நிலையத்தில் இருந்து இயக்கப்படும்.

* தாம்பரம்-நாகர்கோவில் (06191) இடையே இயக்கப்படும் அந்தியோதயா தினசரி சிறப்பு ரெயில் ஏப்ரல் மாதம் 26-ந்தேதி முதல் தாம்பரம் ரெயில் நிலையத்தில் இருந்து இரவு 11 மணிக்கு இயக்கப்படும். மறுமார்கமாக நாகர்கோவில்-தாம்பரம் (06192) இடையே இயக்கப்படும் அந்தியோதயா தினசரி சிறப்பு ரெயில் ஏப்ரல் மாதம் 27-ந்தேதி முதல் நாகர்கோவில் ரெயில் நிலையத்தில் இருந்து மதியம் 3.45 மணிக்கு இயக்கப்படும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

1. கொரோனாவால் வேலையிழப்பு: 25,000 தொழிலாளர்களுக்கு நடிகர் சல்மான் கான் நிதியுதவி
கொரோனாவால் வேலையிழந்த இந்தி திரையுலகை சேர்ந்த 25 ஆயிரம் தொழிலாளர்களுக்கு நடிகர் சல்மான் கான் நிதியுதவி அளிக்க இருக்கிறார்.
2. தே.மு.தி.க. மாவட்ட செயலாளர் நீக்கம் விஜயகாந்த் அறிவிப்பு
தே.மு.தி.க. மாவட்ட செயலாளர் நீக்கம் விஜயகாந்த் அறிவிப்பு.
3. ரெயில் பயணிகள் கொரோனா தொற்றில்லா சான்றிதழ் கொண்டு வருவது கட்டாயம்: மேற்கு வங்காள அரசு அறிவிப்பு
மேற்கு வங்காளத்திற்கு ரெயிலில் வரும் பயணிகள் தங்களுடன் கொரோனா தொற்றில்லா சான்றிதழ் கொண்டு வருவது கட்டாயம் என அரசு அறிவித்து உள்ளது.
4. உரிமைகளும், சலுகைகளும் கிடைக்கும்: பத்திரிகை, ஊடகங்களில் பணியாற்றுவோர் முன்களப் பணியாளர்கள் பட்டியலில் சேர்ப்பு மு.க.ஸ்டாலின் அறிவிப்பு
பத்திரிகை, காட்சி, ஒலி ஊடகங்களில் பணியாற்றுவோர் முன்களப் பணியாளர்கள் பட்டியலில் சேர்க்கப்படுவதாக மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
5. தேர்தல் நடந்து முடிந்த 5 மாநிலங்களில் இருந்து தேர்தல் நடத்தை விதிகள் நீக்கம்; தேர்தல் ஆணையம் அறிவிப்பு
தேர்தல் நடந்து முடிந்த மாநிலங்களில் இருந்து தேர்தல் நடத்தை விதிகளை தேர்தல் ஆணையம் நீக்கியுள்ளது.