மாவட்ட செய்திகள்

அண்ணா பல்கலைக்கழக சிண்டிகேட் தீர்மானத்தை முன் தேதியிட்டு அமல்படுத்த முடியாது - சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு + "||" + Anna University Syndicate Resolution Should not be Implemented With Pre Dated Order Says Madras High Court

அண்ணா பல்கலைக்கழக சிண்டிகேட் தீர்மானத்தை முன் தேதியிட்டு அமல்படுத்த முடியாது - சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு

அண்ணா பல்கலைக்கழக சிண்டிகேட் தீர்மானத்தை முன் தேதியிட்டு அமல்படுத்த முடியாது - சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு
அண்ணா பல்கலைக்கழக சிண்டிகேட் தீர்மானத்தை முன் தேதியிட்டு அமல்படுத்த முடியாது என சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சென்னை,

அண்ணா பல்கலைக்கழக சிண்டிகேட் தீர்மானத்தை முன் தேதியிட்டு அமல்படுத்த முடியாது என சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் உதவி பேராசிரியராக இருப்பவர்களுக்கு இணை பேராசிரியர்களாகவும், இணை பேராசிரியர்களாக இருப்பவர்களுக்கு பேராசிரியர்களாகவும் பதவி உயர்வு வழங்குவது தொடர்பாக விண்ணப்பங்களை வரவேற்று 2017 ஆம் ஆண்டு அறிவிக்கை வெளியிடப்பட்டது. 

இந்த அறிவிக்கையின் அடிப்படையில் விண்ணப்பித்த பலருக்கும் நேர்முகத்தேர்வு நடத்தப்பட்டு தேர்வு நடைமுறைகள் நிறைவடைந்த நிலையில் 2018 ஆம் ஆண்டு ஒரு தீர்மானம் ஒன்றை அண்ணா பல்கலைக்கழக சிண்டிகேட் முடிவு செய்தது.

அந்த தீர்மானத்தின் இணைபேராசிரியர் பதவி உயர்வுக்காக விண்ணப்பக்கூடிய உதவி பேராசிரியர்களை பொறுத்தவரை அவர்கள் ஒரு முனைவர் படிப்பை மேற்கொள்ளக்கூடிய மாணவருக்கு மேற்பார்வையாளராக இருந்திருக்க வேண்டும் என்றும் அதேபோல பேராசிரியர்கள் பதவி உயர்வுக்கு விண்ணப்பக்க்கூடிய இணை பேராசிரியர்கள் ஒரு முனைவர் படிப்பு மாணவர் வெற்றிபெற வழிகாட்டியாக இருந்திருக்க வேண்டும் என்ற கூடுதல் தகுதியை நிர்ணயித்து அண்ணா பல்கலைகழக சிண்டிகேட் தீர்மானமாக நிறைவேற்றியுள்ளது. 

இதன் அடிப்படையில் தங்களுக்கு பதவி உயர்வு மறுக்கப்பட்டதாக கூறி அந்த பதவி உயர்வை மறுக்கும் வகையில் நிறைவேற்றப்பட்டுள்ள சிண்டிகேட் தீர்மானத்தை ரத்து செய்யக்கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்குத்தொடரப்பட்டது.

இந்த வழக்கில் ஏற்கனவே நடந்து முடிந்த தேர்வு முடிவுகளுக்கு இந்த புதிய தகுதியை நிர்ணயம் செய்திருக்கும் தீர்மானம் பொறுந்தாது என்று மனுதாரர்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டிருந்தது. அதே சமயம், கூடுதல் கல்வி தகுதியை நிர்ணயிக்க எல்லாவிதமான அதிகாரமும் தங்களுக்கு உள்ளதாக அண்ணா பல்கலைக்கழகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

ஆனால், அண்ணா பல்கலைக்கழக தரப்பு வாதத்தை ஏற்கமறுத்த சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி பார்த்திபன், அண்ணா பல்கலைகழக சிண்டிகேட் நிறைவேற்றியுள்ள தீர்மானமான இந்த கூடுதல் தகுதியை முன் தேதியிட்டு அமல்படுத்த முடியாது என்று உத்தரவிட்டுள்ளார். மேலும், தீர்மானம் நிறைவேற்றப்படுவதற்கு முன்பு நடைபெற்ற பதவி உயர்வுக்கான தேர்வு நடைமுறைகளில் கலந்துகொண்டவர்கள்களுக்கு அப்போது எந்த நடைமுறையை பின்பற்றி பதவி உயர்வு வழங்கி 4 வாரங்களுக்குள் உத்தரவு பிறப்பிக்க வேண்டும் என்று அண்ணா பல்கலைக்கழகத்திற்கு உயர்நீதிமன்ற நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

1. தேர்தல் கமிஷன் குறித்து சென்னை ஐகோர்ட்டு தெரிவித்த கருத்துகளை நீக்க சுப்ரீம் கோர்ட்டு மறுப்பு
தேர்தல் கமிஷன் குறித்து சென்னை ஐகோர்ட்டு தெரிவித்த கருத்துகளை நீக்க சுப்ரீம் கோர்ட்டு மறுத்துவிட்டது.
2. ஐகோர்ட்டு நீதிபதிகளின் கருத்துகளை செய்தியாக்குவதற்கு தடைவிதிக்க முடியாது; சுப்ரீம் கோர்ட்டு கருத்து
ஐகோர்ட்டுகளில் நீதிபதிகள் தெரிவிக்கும் கருத்துகளை செய்தியாக்குவதற்கு தடைவிதிக்க முடியாது என சுப்ரீம் கோர்ட்டு தெரிவித்துள்ளது.
3. தேர்தல் வெற்றி கொண்டாட்டங்களில் ஈடுபடக்கூடாது; அரசியல் கட்சி தலைவர்கள் முன்னுதாரணமாக திகழ வேண்டும்; ஐகோர்ட்டு கருத்து
தமிழகத்தில் வாக்கு எண்ணிக்கைக்காக தேர்தல் ஆணையம் எடுத்துள்ள நடவடிக்கைகள் திருப்தி அளிப்பதாகவும், தேர்தல் வெற்றி கொண்டாட்டங்களில் ஈடுபடக்கூடாது, இந்த விதிமுறைகளை கடைப்பிடிப்பதில் அரசியல் கட்சி தலைவர்கள் முன்னுதாரணமாக திகழ வேண்டும் எனவும் ஐகோர்ட்டு கருத்து தெரிவித்துள்ளது.
4. தமிழகத்துக்கு தேவையான தடுப்பூசிகள், மருந்துகளை மத்திய அரசு ஓரிரு நாட்களில் வழங்கும்; ஐகோர்ட்டு நம்பிக்கை
தமிழகத்திற்கு தேவையான தடுப்பூசிகள் மற்றும் மருந்துகளை ஓரிரு நாட்களில் மத்திய அரசு வழங்கும் என்று நம்புவதாக சென்னை ஐகோர்ட்டு நீதிபதிகள் கூறியுள்ளனர்.
5. கொரோனா ஊரடங்கால் பாதிக்கப்பட்டுள்ள தனியார் நிறுவன ஊழியர்களுக்கு பொருளாதார ஊக்குவிப்பு திட்டம்; மத்திய, மாநில அரசுகள் பரிசீலிக்க ஐகோர்ட்டு உத்தரவு
கொரோனா ஊரடங்கால் பாதிக்கப்பட்டுள்ள தனியார் நிறுவன ஊழியர்களுக்காக பொருளாதார ஊக்குவிப்பு திட்டத்தை உருவாக்க வேண்டும் என்ற கோரிக்கையை மத்திய, மாநில அரசுகள் பரிசீலிக்கவேண்டும் என்று சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.