மாநில செய்திகள்

தமிழக அரசு அனைத்து தரப்பு மக்களின் பாதுகாப்பு அரணாக உள்ளது - அமைச்சர் எம்.பி.சம்பத் பிரச்சாரம் + "||" + Tamil Nadu Government gives protection for all sections of the people - Minister MC Sampath Campaign

தமிழக அரசு அனைத்து தரப்பு மக்களின் பாதுகாப்பு அரணாக உள்ளது - அமைச்சர் எம்.பி.சம்பத் பிரச்சாரம்

தமிழக அரசு அனைத்து தரப்பு மக்களின் பாதுகாப்பு அரணாக உள்ளது - அமைச்சர் எம்.பி.சம்பத் பிரச்சாரம்
கடலூர் சட்டமன்ற தொகுதியில் அமைச்சர் எம்.பி.சம்பத் வீதி வீதியாக சென்று தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்டார்.
கடலூர்,

கடலூர் சட்டமன்ற தொகுதியில் அதிமுக வேட்பாளராக தொழில்துறை அமைச்சர் எம்.பி.சம்பத் போட்டியிடுகிறார். இதனையடுத்து தேர்தலுக்கான பிரச்சார பணிகளை மேற்கொண்டு வரும் அவருக்கு, தொண்டர்கள் ஆரத்தி எடுத்தும், மாலை அணிவித்தும் வரவேற்பு அளித்தனர்.

பின்னர் கூட்டணி கட்சியினரும் திறந்த ஜீப்பில் வீதி வீதியாக சென்று எம்.பி.சம்பத் பிரச்சாரம் செய்தார். அப்போது பேசிய அவர், “மக்கள் நலனை காத்திட அதிமுகவிற்கு வாக்களிக்க வேண்டும்” என்று கூறினார். தமிழக அரசு அனைத்து தரப்பு மக்களின் பாதுகாப்பு அரணாக உள்ளது எனக் கூறிய அவர், பெண்களின் நலன் காக்க மாதம் 1,500 ரூபாய், 6 சிலிண்டர்கள், வாஷிங் மெஷின் ஆகியவை இலவசமாக வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.

தொடர்புடைய செய்திகள்

1. அரசு ஊழியர்களின் ஈட்டிய விடுப்பு ஊதியம் ஓராண்டுக்கு நிறுத்தம்
அரசு ஊழியர்களுக்கான ஈட்டிய விடுப்புக்கு வழங்கப்படும் சம்பளத் தொகை ஓராண்டுக்கு நிறுத்திவைக்கப்படுவதாக தமிழக அரசு அறிவித்துள்ளது.
2. தமிழகத்தில் 15 ஐபிஎஸ் அதிகாரிகள் பணி இடமாற்றம்
தமிழகத்தில் 15 ஐபிஎஸ் அதிகாரிகள் பணி இடமாற்றம் செய்து கூடுதல் தலைமை செயலாளர் பிரபாகர் உத்தரவிட்டுள்ளார்.
3. இன்றும், நாளையும் 24 மணிநேர பேருந்து சேவை - தமிழக அரசு அறிவிப்பு
திங்கள் கிழமை முதல் முழு ஊரடங்கு அமல்படுத்தப்படுவதால் இன்றும் நாளையும் 24 மணி நேர பேருந்து இயக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
4. மே 2-ந் தேதி திட்டமிட்டபடி முழுஊரடங்கு; வாக்கு எண்ணிக்கையின் போது தேர்தல் பணியில் ஈடுபடுபவர்களுக்கு விலக்கு; மறுஉத்தரவு வரும் வரை கட்டுப்பாடுகள் நீடிக்கும் என தமிழக அரசு அறிவிப்பு
தேர்தல் ஓட்டு எண்ணிக்கை நடைெபறும் 2-ந் தேதி திட்டமிட்டபடி முழுஊரடங்கு அமலில் இருக்கும் என்றும், தேர்தல் பணியில் ஈடுபடுபவர்களுக்கு ஊரடங்கு கட்டுப்பாடுகளில் இருந்து விலக்கு அளிக்கப்படும் என்றும் தமிழக அரசு அறிவித்துள்ளது.
5. ஒன்றரை கோடி தடுப்பூசி கொள்முதல் செய்ய தமிழக அரசு உத்தரவு
தமிழகத்தில் வரும் மே 1 ஆம் தேதி முதல் 18-வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் தடுப்பூசி போடப்பட உள்ளது.