அடுத்த 48 மணி நேரத்தில் காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்பு - வானிலை மையம்


கோப்புப்படம்
x
கோப்புப்படம்
தினத்தந்தி 29 March 2021 7:40 AM GMT (Updated: 29 March 2021 7:40 AM GMT)

அடுத்த 48 மணி நேரத்தில் காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்புள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.

சென்னை, 

தென் கிழக்கு வங்கக்கடல் மற்றும் தெற்கு அந்தமான் பகுதிகளில் அடுத்த 48 மணி நேரத்தில் காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்புள்ளதாக வானிலை மையம் தகவல் தெரிவித்துள்ளது.

தென் கிழக்கு வங்க கடல் மற்றும் அதனை ஒட்டியுள்ள தெற்கு அந்தமான் கடல் பகுதியில் ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி ஏற்கனவே உள்ளது. இந்த வளிமண்டல மேலடுக்கு சுழற்சி அடுத்த 48 மணி நேரத்தில் காற்றழுத்த தாழ்வு பகுதியாகவும், அதனை தொடர்ந்து அடுத்த 24 மணி நேரத்தில் ஆழ்ந்த காற்றழுத்த பகுதியாகவும் உருமாற வாய்ப்பு உள்ளதாக வானிமை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 

தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் மணிக்கு 40 - 50 கி.மீ. வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும். இன்றும் நாளையும், தென்மேற்கு வங்கக்கடல், தெற்கு அந்தமான் கடல் பகுதியில் மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என்று கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது. 

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் வறண்ட வானிலையே நிலவும். நெல்லை, தென்காசி, கன்னியாகுமரி மற்றும் மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்களில் லேசான மழை பெய்யக்கூடும். சென்னையில் அதிகபட்ச வெப்பநிலை 35 மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 26 டிகிரி செல்சியஸ் நிலவும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

Next Story