மாநில செய்திகள்

பிரதமர் மோடி வருகையை முன்னிட்டு கன்னியாகுமரியில் வரவேற்பு ஏற்பாடுகள் தீவிரம் + "||" + Preparations are in full swing in Kanyakumari ahead of Prime Minister Modi's visit

பிரதமர் மோடி வருகையை முன்னிட்டு கன்னியாகுமரியில் வரவேற்பு ஏற்பாடுகள் தீவிரம்

பிரதமர் மோடி வருகையை முன்னிட்டு கன்னியாகுமரியில் வரவேற்பு ஏற்பாடுகள் தீவிரம்
பிரதமர் மோடி நாளை மறுநாள் குமரிக்கு வருவதையொட்டி அகஸ்தீஸ்வரம் கல்லூரி வளாகத்தில் மேடை அமைக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.
கன்னியாகுமரி,

கன்னியாகுமரி நாடாளுமன்ற தொகுதியில் பா.ஜனதா சார்பில் போட்டியிடும் பொன்.ராதாகிருஷ்ணன் மற்றும் குமரி மாவட்டத்தில் உள்ள 6 சட்டமன்ற தொகுதிகளில் போட்டியிடும் கூட்டணி கட்சிகளின் வேட்பாளர்களை ஆதரித்து பிரசாரம் செய்ய பிரதமர் மோடி நாளை மறுநாள் (வெள்ளிக்கிழமை) கன்னியாகுமரிக்கு வருகிறார்.

இதற்காக அகஸ்தீஸ்வரம் விவேகானந்தா கல்லூரி வளாகத்தில் பிரமாண்டமான முறையில் மேடை மற்றும் பொதுமக்கள் அமர்வதற்கான பந்தல் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது.

இந்த பணிகளை தஞ்சாவூரை சேர்ந்த ஒரு தனியார் நிறுவனம் செய்து வருகிறது. மேடையின் முன்பகுதி சுமார் 200 மீட்டர் அகலத்திலும், பார்வையாளர்கள் அமரும் பந்தல் நான்கு பிரிவுகளாகவும் அமைக்கப்பட்டு வருகிறது. சுமார் 25 ஆயிரம் பார்வையாளர்கள் அமரும் வகையில் பிரமாண்டமான முறையில் பந்தல் அமைக்கப்படுகிறது. இந்த பணிகள் தீவிரமாக நடக்கிறது. மோடி வருகையையொட்டி அந்த பகுதி முழுவதும் மத்திய பாதுகாப்பு போலீஸ் படை கட்டுப்பாட்டில் உள்ளது.

தொடர்புடைய செய்திகள்

1. கொரோனா பாதிப்பு நிலவரம் பற்றி 4 மாநில முதல்-மந்திரிகளுடன் பிரதமர் மோடி ஆலோசனை
கொரோனா நிலவரம் தொடர்பாக 4 மாநில முதல்-மந்திரிகளுடன் பிரதமர் மோடி இன்றும் ஆலோசனை நடத்தினார்.
2. தமிழக முதல்- அமைச்சர் மு.க ஸ்டாலினுடன் பிரதமர் மோடி பேச்சு
கொரோனா பரவல், தடுப்பு நடவடிக்கை தொடர்பாக தமிழக முதல் - அமைச்சர் மு.க ஸ்டாலினுடன் பிரதமர் மோடி ஆலோசனை நடத்தினார்.
3. தமிழக முதல் அமைச்சராக பதவியேற்ற மு.க ஸ்டாலினுக்கு பிரதமர் மோடி, சோனியா காந்தி வாழ்த்து
தமிழக முதல்வராக பதவியேற்றுக்கொண்ட மு.க ஸ்டாலினுக்கு பிரதமர் மோடி வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.
4. தமிழக முதல் அமைச்சராக பதவியேற்ற மு.க. ஸ்டாலினுக்கு பிரதமர் மோடி வாழ்த்து
தமிழக முதல் அமைச்சராக பதவியேற்று கொண்ட மு.க. ஸ்டாலினுக்கு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்து உள்ளார்.
5. நாடு முழுவதும் ஊரடங்கு...? மத்திய அமைச்சர்களுடன், பிரதமர் மோடி, இன்று ஆலோசனை
கொரோனா தடுப்பு நடவடிக்கை குறித்து, மத்திய அமைச்சர்களுடன், பிரதமர் மோடி, இன்று ஆலோசனை நடத்தவுள்ளதாக, மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.