வன்னியா்களுக்கான 10.5 சதவீத உள் ஒதுக்கீடு தற்காலிகமானதா?, நிரந்தரமானதா? - ப.சிதம்பரம் கேள்வி


வன்னியா்களுக்கான 10.5 சதவீத உள் ஒதுக்கீடு தற்காலிகமானதா?, நிரந்தரமானதா? - ப.சிதம்பரம் கேள்வி
x
தினத்தந்தி 31 March 2021 5:32 AM GMT (Updated: 31 March 2021 5:32 AM GMT)

வன்னியா்களுக்கான 10.5 சதவீத உள் ஒதுக்கீடு தற்காலிகமானதா?, நிரந்தரமானதா? என்று முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் கேள்வி எழுப்பியுள்ளார்.

சென்னை

முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம்  தனது  டுவிட்டர்  பதிவில் கூறியிருப்பதாவது: -

வன்னியர்களுக்கான 10.5 சதவிகிதம் உள் ஒதுக்கீடு தற்காலிகமானது என்று துணை முதல்அமைச்சர் கூறுகிறார். அவருக்குத் தென் மாவட்டங்களின் கவலை.

இல்லையில்லை, 10.5 சதவிகிதம் நிரந்தரமானது என்று சட்ட அமைச்சர் கூறுகிறார். அவருடைய கவலை அவருக்கு.

முதலமைச்சர் என்ன சொல்லப்போகிறார்?  எல்லாவற்றுக்கும் மேலாக ஒதுக்கீடு என்ற கொள்கையில் நம்பிக்கை இல்லாத பாஜக என்ன சொல்லப் போகிறது? என்று சிதம்பரம் கேள்வி எழுப்பியுள்ளார்.



Next Story