சென்னையில் கடந்த ஆண்டு செப்டம்பர் முதல் நேற்று வரை 93.68 லட்சம் பேர் மெட்ரோ ரெயிலில் பயணம்


சென்னையில் கடந்த ஆண்டு செப்டம்பர் முதல் நேற்று வரை 93.68 லட்சம் பேர் மெட்ரோ ரெயிலில் பயணம்
x
தினத்தந்தி 1 April 2021 11:25 AM GMT (Updated: 1 April 2021 11:25 AM GMT)

சென்னையில் கடந்த ஆண்டு செப்டம்பர் முதல் நேற்று வரை 93.68 லட்சம் பேர் மெட்ரோ ரெயிலில் பயணம் செய்துள்ளனர் என்று சென்னை மெட்ரோ ரெயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

சென்னை,
 
இது குறித்து சென்னை மெட்ரோ ரெயில் நிர்வாகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

சென்னை மெட்ரோ ரெயில் சேவைகள் கடந்த செப்டம்பர் மாதம் 7-ஆம் தேதி முதல் மீண்டும் துவங்கியது. இதைத்தொடர்ந்து, 07.09.2020 முதல் 31.03 .2021 வரை மொத்தம் 93,68,304 பயணிகள் மெட்ரோ ரெயில்களில் பயணம் செய்துள்ளனர். 

* 07.09. 2020 முதல் 31. 12.2020 வரை மொத்தம் 31,52,446 பயணிகள் மெட்ரோ ரெயில்களில் பயணம் செய்துள்ளனர். 

* 01.01.2021 முதல் 31.01.2021 வரை மொத்தம் 13,43,695 பயணிகள் மெட்ரோ ரெயில்களில் பயணம் செய்துள்ளனர்.

* 01.02.2021 முதல் 28.02.2021 வரை மொத்தம் 20,54,653 பயணிகள் மெட்ரோ ரெயில்களில் பயணம் செய்துள்ளனர். 

* 01.03.2021 முதல் 31.03.2021 வரை மொத்தம் 28,17,510 பயணிகள் மெட்ரோ ரெயில்களில் பயணம் செய்துள்ளனர். 

* 08.03 2021 அன்று மட்டும் 1,01,163 பயணிகள் மெட்ரோ ரெயில்களில் பயணம் செய்துள்ளனர்.

சமீபத்தில் தொடங்கப்பட்ட கியூஆர் குறியீடு  பயணச்சீட்டு முறையைப் பயன்படுத்தி செப்டம்பர், 2020 முதல் மார்ச் 2021 வரை மொத்தம் 2,12,941 பயணிகள் மெட்ரோ இரயில்களில் பயணம் செய்துள்ளனர் மேலும், பயண அட்டை பயணச்சீட்டு முறையைப் பயன்படுத்தி 47,81,943 பயணிகள் பயணம் செய்துள்ளனர். 

2021 மார்ச் மாதத்தில் மட்டும் கியூ ஆர் குறியீடு பயணச்சீட்டு முறையைப் பயன்படுத்தி 62,586 பயணிகள் மெட்ரோ ரெயில்களில் பயணம் செய்துள்ளனர். மேலும் பயண அட்டை பயணச்சீட்டு முறையைப் பயன்படுத்தி 13,17,093 பயணிகள் பயணம் செய்துள்ளனர்.

சென்னை மெட்ரோ ரெயில் நிறுவனம் மெட்ரோ ரெயில்களில் பயணிப்பவர்களுக்கு கியூஆர் குறியீடு பயணச்சீட்டில் ஒருவழிப்பயண அட்டை, இருவழிப்பயண அட்டை பலவழி பயன்பாடு அட்டை ஆகியவற்றில் 11.09.2020 முதல் 20% கட்டணத் தள்ளுபடி அளித்து வருகிறது. மெட்ரோ ரெயில் பயண அட்டைகளை பயன்படுத்தி பயணிக்கும் பயணிகளுக்கு 22.02.2021 முதல் 20% கட்டண தள்ளுபடி வழங்கப்படுகிறது. 

சென்னை மெட்ரோ இரயில் நிறுவனம் கொரோனா வைரஸ் தொற்றை தடுப்பதற்காகவும் அனைத்து பயணிகளின் பாதுகாப்பான பயணத்திற்காகவும் மெட்ரோ இரயில் நிலையங்களில் நுழைவதற்கும் மெட்ரோ இரயில்களில் பயணிப்பதற்கும் அனைத்து பயணிகளும் கட்டாயம் முகக்கவசம் அணிந்திருப்பதுடன் தனிமனித இடைவெளியை கடைபிடித்து பயணம் செய்து சென்னை மெட்ரோ கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Next Story