மாநில செய்திகள்

தேர்தல் பிரசாரத்தில் இழிவான கருத்து: திண்டுக்கல் லியோனி மீது வழக்குப்பதிவு + "||" + Disgraceful comment in election campaign: Case filed against Dindigul Leoni

தேர்தல் பிரசாரத்தில் இழிவான கருத்து: திண்டுக்கல் லியோனி மீது வழக்குப்பதிவு

தேர்தல் பிரசாரத்தில் இழிவான கருத்து: திண்டுக்கல் லியோனி மீது வழக்குப்பதிவு
தேர்தல் பிரசாரத்தில் இழிவான கருத்து: திண்டுக்கல் லியோனி மீது வழக்குப்பதிவு.
சென்னை, 

அ.தி.மு.க. வழக்கறிஞர்கள் பிரிவு நிர்வாகிகள் அதிசயா மற்றும் ராஜலட்சுமி ஆகியோர் இணைந்து தமிழக தலைமை தேர்தல் ஆணையரிடம் பரபரப்பு புகார் மனு ஒன்றை கொடுத்தனர். அந்த புகாரில், தேர்தல் பிரசாரத்தின் போது, பட்டிமன்ற பேச்சாளர் திண்டுக்கல் ஐ.லியோனி, முன்னாள் அமைச்சர் வளர்மதி பற்றி இழிவாக பேசியுள்ளார் என்றும், முன்னாள் மத்திய மந்திரியும், தி.மு.க. எம்.பி.யுமான தயாநிதி மாறன் மறைந்த முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதா பற்றியும், பிரதமர் நரேந்திர மோடி பற்றியும் இழிவாக பேசியுள்ளார் என்றும், அவர்கள் மீது சட்டபூர்வ நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அந்த புகார் மனு அடிப்படையில் சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் 2 சட்டப்பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளனர். முன்னாள் மத்திய மந்திரியும், தி.மு.க. எம்.பி.யுமான ஆ.ராசா மீது ஏற்கனவே சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் ஒரு வழக்குப்பதிவு செய்துள்ளனர். இந்த நிலையில் நேற்று மேலும் ஒரு வழக்கு அவர் மீது புதிதாக பதிவு செய்யப்பட்டது.

தொடர்புடைய செய்திகள்

1. கடத்தல், நில அபகரிப்பு செய்ததாக முன்னாள் மும்பை போலீஸ் கமிஷனர் பரம்பீர் சிங் மீது மேலும் ஒரு வழக்குப்பதிவு
கடத்தல், நில அபகரிப்பு செய்ததாக பரம்பீர் சிங் மீது மேலும் ஒரு வழக்குப்பதிவு செய்யப்பட்டு உள்ளது.
2. சமூகவலை தளங்களில் பரவிய வீடியோ காட்சி: போக்குவரத்து போலீசாரை தரக்குறைவாக திட்டி சண்டை போட்ட பெண் மீது வழக்குப்பதிவு
சென்னையில் போக்குவரத்து போலீசாரை தரக்குறைவாக திட்டி பெண் ஒருவர் சண்டை போடும் காட்சி நேற்று சமூகவலை தளங்களில் பரவியது. அந்த பெண் மீது வழக்குப்பதிவு செய்துள்ள போலீசார், அவரை கைது செய்யவும் நடவடிக்கை எடுத்து வருகிறார்கள்.
3. தேர்தல் விதிமுறை மீறல்: நடிகை குஷ்பு மீது போலீசார் வழக்குப்பதிவு
தேர்தல் விதிமுறை மீறல்: நடிகை குஷ்பு மீது போலீசார் வழக்குப்பதிவு.
4. மளிகை கடைக்காரரிடம் பண மோசடி புகார்: பெண் போலீஸ் மீது வழக்குப்பதிவு
மளிகை கடைக்காரரிடம் பண மோசடி புகார் தொடர்பாக பெண் போலீஸ் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.