தமிழகத்தில் மீண்டும் ஊரடங்கு என பரவும் வதந்தியை நம்ப வேண்டாம் - தமிழக சுகாதாரத்துறை செயலர்


தமிழகத்தில் மீண்டும் ஊரடங்கு என பரவும் வதந்தியை நம்ப வேண்டாம் - தமிழக சுகாதாரத்துறை செயலர்
x
தினத்தந்தி 5 April 2021 5:49 AM GMT (Updated: 5 April 2021 5:49 AM GMT)

தமிழகத்தில் மீண்டும் முழு ஊரடங்கை அமல்படுத்தும் திட்டம் இல்லை. தமிழகத்தில் மீண்டும் ஊரடங்கு என பரவும் வதந்தியை நம்ப வேண்டாம் என தமிழக சுகாதாரத்துறை செயலர் ராதாகிருஷ்ணன் கூறினார்.

சென்னை

தமிழக சுகாதாரத்துறை செயலர் ராதாகிருஷ்ணன் சென்னையில் நிருபர்களுக்கு  பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது: -

தமிழ்நாட்டில் கொரோனா பரவல் படிப்படியாக அதிகரித்து வருகிறது.7ந்தேதிக்கு பிறகு கொரோனா தடுப்பு பணிகள் முழு வீச்சில் தொடங்கும்.

தமிழகத்தில் மீண்டும் முழு ஊரடங்கை அமல்படுத்தும் திட்டம் இல்லை. தமிழகத்தில் மீண்டும் ஊரடங்கு என பரவும் வதந்தியை நம்ப வேண்டாம்.

அத்தியாவசியமற்ற விஷயங்களுக்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்படும்.

தமிழகத்தில் காய்ச்சல் பரிசோதனை முகாம்கள் அதிகரிப்க்கப்படும்ஜ். வீடு வீடாக சென்று காய்ச்சல் பரிசோதனை மேற்கொள்ள ஏற்பாடு  செய்யப்படும்.

முக க‌வசம்  அணிந்துதான் வாக்குச்சாவடிக்கு செல்ல வேண்டும் . பொதுமக்கள் அனைவரும் கட்டாயம் முக க‌வசம் அணிந்துதான் வாக்களிக்க வேண்டும் என கூறினார்.

Next Story