மாநில செய்திகள்

நீலாங்கரை வாக்குச்சாவடிக்கு சைக்கிளில் வந்து வாக்களித்தார் நடிகர் விஜய் + "||" + Actor Vijay came to the Neelankarai polling station on a bicycle and cast his vote

நீலாங்கரை வாக்குச்சாவடிக்கு சைக்கிளில் வந்து வாக்களித்தார் நடிகர் விஜய்

நீலாங்கரை வாக்குச்சாவடிக்கு சைக்கிளில் வந்து வாக்களித்தார் நடிகர் விஜய்
சென்னை நீலாங்கரையில் உள்ள வாக்குச்சாவடிக்கு நடிகர் விஜய் சைக்கிளில் வந்து வாக்களித்தார்.
சென்னை,

தமிழ்நாடு, கேரளா, அசாம், மேற்கு வங்காளம் மற்றும் புதுச்சேரியில் இன்று சட்டமன்ற தேர்தல் நடைபெறுகிறது. இதற்கான வாக்குப்பதிவு காலை 7 மணிக்கு தொடங்கியது. தமிழகத்தில் ஒரே கட்டமாக இன்று வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. 

தமிழகத்தின் அனைத்து வாக்குச்சாவடிகளிலும் தற்போது விறுவிறுப்பாக வாக்குப்பதிவு நடைபெற்று வரும் நிலையில், பொதுமக்கள் நீண்ட வரிசைகளில் நின்று ஆர்வத்துடன் வாக்குகளை செலுத்தி வருகின்றனர். மேலும் அரசியல் தலைவர்கள், திரைப்பிரபலங்கள் பலரும் அதிகாலையிலேயே வாக்குச் சாவடிக்கு வந்து வாக்குகளை செலுத்தினர்.

அந்த வகையில் நடிகர் அஜித், சாலினி, நடிகர் ரஜினிகாந்த், நடிகர்கள் சூர்யா, கார்த்தி, சிவகுமார், நடிகர் சிவகார்த்திகேயன் உள்ளிட்ட பல நடிகர்கள் தங்கள் ஜனநாயக கடமையை நிறைவேற்றினர். இந்நிலையில் நடிகர் விஜய் சென்னை நீலாங்கரையில் உள்ள வாக்குச்சாவடிக்கு சைக்கிளில் வந்து வாக்களித்தார். 

நடிகர் விஜய் சைக்கிளில் வரும் தகவல் வெளியானதையடுத்து, அவரை காண்பதற்காக ரசிகர்கள் கூட்டம் கூடியதால் வாக்குச் சாவடியில் சிறிது பரபரப்பு ஏற்பட்டது. அதனை தொடர்ந்து காவலர்கள் உதவியோடு, நடிகர் விஜய் வாக்குச் சாவடிக்குள் சென்று தனது வாக்கை பதிவு செய்தார்.

தொடர்புடைய செய்திகள்

1. மறைந்த நடிகர் விவேக்கின் குடும்பத்தினரை நேரில் சந்தித்து ஆறுதல் கூறிய நடிகர் விஜய்
நடிகர் விவேக்கின் குடும்பத்தினரை நடிகர் விஜய் நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார்.
2. விஜயுடன் நடித்த தனது முதல் படம் அனுபவம் குறித்து - நடிகை பிரியங்கா சோப்ரா
நடிகை பிரியங்கா சோப்ரா தனது அனுபவ புத்தகத்தில் தான் நடிகர் விஜயுடன் தனது முதல் படம் அனுபவம் குறித்து எழுதி உள்ளார்.
3. பன்முக தன்மை நடிகர் விஜய் சேதுபதியை பாராட்டிய சிரஞ்சீவி
விஜய் சேதுபதி கதாநாயகனாக மட்டுமின்றி இமேஜ் பார்க்காமல் வில்லன், திருநங்கை, முதியவர் வேடங்களிலும் நடித்துள்ளார்.