மாநில செய்திகள்

தமிழக சட்டசபை தேர்தல்: தோராயமாக 71.79 சதவீத வாக்குப்பதிவு - தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு பேட்டி + "||" + Tamil Nadu Assembly Election: Approximately 71.79 percent turnout - Chief Electoral Officer Satyaprada Sagu

தமிழக சட்டசபை தேர்தல்: தோராயமாக 71.79 சதவீத வாக்குப்பதிவு - தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு பேட்டி

தமிழக சட்டசபை தேர்தல்: தோராயமாக 71.79 சதவீத வாக்குப்பதிவு - தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு பேட்டி
நடந்து முடிந்த தமிழக சட்டசபை தேர்தலில் தோராயமாக 71.79 சதவீத வாக்குகள் பதிவாகி உள்ளதாக தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு தெரிவித்துள்ளார்.
சென்னை, 

தமிழ்நாடு, கேரளா, புதுச்சேரியில் ஒரே கட்டமாக தேர்தல் நடைபெற்றது. மேற்குவங்காளத்தில் 3-வது கட்ட தேர்தலும், அசாமில் 3-வது இறுதிகட்ட தேர்தலும் நடைபெற்றது. 

தமிழ்நாட்டில் 234 தொகுதிகள் உள்ளன. மொத்த வாக்காளர்கள் எண்ணிக்கை 6 கோடியே 28 லட்சம். இதில் ஆண்கள் 3 கோடியே 9 லட்சம் பேர். பெண்கள் 3 கோடியே 19 லட்சம் பேர். இதுதவிர 3-ம் பாலினத்தவர் 7192 பேர் இருந்தனர். காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கியது. வாக்குச்சாவடிகளில் காலை 6 மணிக்கெல்லாம் வாக்களிக்கும் ஆர்வத்தில் வாக்காளர்கள் குவியத்தொடங்கினர்.

கொரோனா பரவல் காரணமாக பல்வேறு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு இருந்தன. அனைத்து வாக்காளர்களும் கண்டிப்பாக முகக்கவசம் அணிந்து வர வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டு இருந்தது. அதன்படி முகக்கவசம் அணிந்து இருக்கிறார்களா என உறுதி செய்த பிறகே உள்ளே அனுமதித்தனர். அவ்வாறு முகக்கவசம் அணியாமல் வந்தவர்களுக்கு வாக்குப்பதிவு மையத்திலேயே முகக்கவசம் வழங்கப்பட்டது.

பின்னர் அவர்களுடைய அடையாள அட்டை சரிபார்க்கப்பட்டு ஓட்டு போட அனுமதிக்கப்பட்டனர். ஓட்டு போட்டு முடிந்ததும் கையுறையை கழற்றி போட தனியாக பெட்டி வைக்கப்பட்டு இருந்தது. ஓட்டுப்பதிவு தொடங்கியதும் சில வாக்குச்சாவடிகளில் ஓட்டு எந்திரங்களில் கோளாறு ஏற்பட்டது. அங்கு சிறிது நேரம் ஓட்டுப்பதிவு நிறுத்திவைக்கப்பட்டு, பின்னர் மாற்று எந்திரங்கள் மூலம் ஓட்டுப்பதிவு தொடர்ந்து நடைபெற்றது. 

மாலை 7 மணி வரை வாக்குப்பதிவு நடைபெற்றது. 6 மணிக்கு மேல் 7 மணி வரை கொரோனா நோயாளிகளுக்காக பிரத்யோகமாக நேரம் ஒதுக்கப்பட்டு இருந்தது. 7 மணியுடன் தமிழக சட்டமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு நிறைவடைந்தது.

ஓட்டுப்பதிவு முடிந்ததும் அனைத்து வாக்குப்பதிவு எந்திரங்களும் கட்சி ஏஜெண்டுகள் முன்னிலையில் சீல் வைக்கப்பட்டது. அதன்பிறகு பலத்த பாதுகாப்புடன் ஓட்டு எண்ணும் மையங்களுக்கு அவை கொண்டு செல்லப்பட்டது. அங்கு அவைகள் அறைகளில் பாதுகாப்பாக வைத்து சீல் வைக்கப்படும். அந்த இடத்தில் 3 அடுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.

இந்நிலையில் நடந்து முடிந்த தமிழக சட்டசபை தேர்தலில் தோராயமாக 71.79 சதவீத வாக்குகள் பதிவாகி உள்ளதாக தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக மேலும் பேசிய அவர், “தமிழகத்தில் அனைத்து வாக்குச் சாவடிகளிலும் 7 மணிக்கு தேர்தல் நிறைவடைந்தது. தேர்தல் நடத்தும் அலுவலர்கள் வாக்குப்பதிவு இயந்திரங்களை சீல் வைத்து மண்டல அலுவலருக்கு ஒப்படைக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது. அதனால், முழுமையான வாகுப்பதிவு சதவீதம் வரவில்லை. தொலைபேசி மூலம் வாங்கிய தகவலின்படி 71.79% வாக்குகள் பதிவாகியுள்ளது. நள்ளிரவு 12 மணி அல்லது 1 மணி அளவில் அதிகாரப்பூர்வ வாக்குப்பதிவு எண்ணிக்கை தெரியவரும். தமிழகத்தில் மறுவாக்குப்பதிவு எங்கும் நடைபெறாது” என்று சத்யபிரதா சாகு தெரிவித்தார்.

தொடர்புடைய செய்திகள்

1. தமிழகம்: புதிதாக தேர்ந்து எடுக்கப்பட்ட எம்.எல்.ஏக்களில் 60 சதவீதம் பேர் மீது கிரிமினல் வழக்குகள்
தமிழ்நாட்டில் புதிதாக தேர்ந்து எடுக்கப்பட்ட எம்.எல்.ஏக்களில் 60 சதப்வீதம் பேர்மீது கிரிமினல் வழக்குகள் இருக்கின்றன என ஜனநாயக சீர்திருத்தக் சங்க அறிக்கை கூறி உள்ளது.
2. முதலமைச்சராக மு.க.ஸ்டாலின் 7-ந்தேதி பதவி ஏற்கிறார் - நாளை தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் கூட்டம்
முதலமைச்சராக மு.க.ஸ்டாலின் 7-ந்தேதி பதவி ஏற்கிறார் ; தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் நாளை நடைபெறுகிறது.
3. திமுக, அதிமுக அடுத்து தமிழகத்தில் 3வது பெரிய கட்சி எது? கட்சிகள் பெற்ற ஓட்டு சதவீதம்
தமிழக சட்டசபை தேர்தலில் எந்ததெந்த கட்சிகள் எவ்வளவு வாக்கு சதவிகிதத்தை பெற்றது என்று தேர்தல் ஆணையம் விவரங்களை வெளியிட்டுள்ளது.
4. தேர்தல்கள் வரும் போகும், நல்ல பணிகள் கண்டிப்பாகத் தொடர வேண்டும் -மு.க.ஸ்டாலினுக்கு குஷ்பு வாழ்த்து
தேர்தல்கள் வரும் போகும், நல்ல பணிகள் கண்டிப்பாகத் தொடரப்பட வேண்டும் என மு.க.ஸ்டாலினுக்கு குஷ்பு வாழ்த்து தெரிவித்து உள்ளார்.
5. தமிழக சட்டசபை தேர்தல்: இரவு 8 மணி: தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ள அதிகாரபூர்வ முழுவிவரம்
தமிழக சட்டசபை தேர்தலில் இரவு 8 மணி: தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ள அதிகாரபூர்வ முழுவிவரம் வருமாறு