மாநில செய்திகள்

குடும்பத்துடன் வாக்களித்த கமல்ஹாசன் + "||" + Kamal Haasan voted with family

குடும்பத்துடன் வாக்களித்த கமல்ஹாசன்

குடும்பத்துடன் வாக்களித்த கமல்ஹாசன்
தேனாம்பேட்டை எல்டாம்ஸ் சாலையில் உள்ள வாக்கு சாவடியில் கமல்ஹாசன் குடும்பத்துடன் வாக்களித்தார்.
கமல்ஹாசன் வாக்களிப்பு
தமிழக சட்டசபை தேர்தலுக்கான வாக்குப்பதிவு நேற்று காலை 7 மணிக்கு தொடங்கியது. சட்டசபை தேர்தலில் வாக்களிப்பதற்காக மக்கள் நீதி மையத்தின் தலைவரும், நடிகருமான கமல்ஹாசன் மயிலாப்பூர் தொகுதிக்கு உட்பட்ட சென்னை தேனாம்பேட்டை எல்டாம்ஸ் சாலை உள்ள வாக்குச்சாவடிக்கு 7.15 மணிக்கு வந்தார். அவருடன் அவரது மகள்கள் ஸ்ருதிஹாசன், அக்சரா ஹாசன் ஆகியோர் வந்தனர்.

பின்னர் அவர்கள் வாக்கு சாவடிக்கு சென்று தங்களது வாக்குகளை பதிவு செய்தனர். அதனைத் தொடர்ந்து கமல்ஹாசனும் அவரது குடும்பத்தினரும் வெளியே வந்தனர். அப்போது கமல்ஹாசனை ரசிகர்களும், பொதுமக்களும் சூழ்ந்துகொண்டனர்.

வேட்பாளர்
மயிலாப்பூர் தொகுதியில் மக்கள் நீதி மய்ய வேட்பாளர் நடிகை ஸ்ரீபிரியா உள்பட 23 பேர் களத்தில் உள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

1. தேர்தலில் மக்கள் நீதி மய்யம் தோல்வி: தொண்டர்களின் கருத்தை கேட்கும் கமல்ஹாசன் ‘மனதில் உள்ளதை அனுப்புங்கள்’ என அறிக்கை
தமிழக சட்டமன்ற தேர்தலில் மக்கள் நீதி மய்யம் கட்சி தோல்வியை தழுவியது. இதனைத்தொடர்ந்து கட்சி தொண்டர்களிடம் கமல்ஹாசன் கருத்துகளை கேட்க இருக்கிறார். ‘மனதில் உள்ளதை எனக்கு மின்னஞ்சலில் அனுப்புங்கள்’ என கட்சியினருக்கு அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
2. சட்டசபை தேர்தலில் தோல்விக்கான காரணம் என்ன? நிர்வாகிகளுடன், கமல்ஹாசன் ஆலோசனை
சட்டசபை தேர்தலில் தோல்விக்கான காரணம் என்ன? என்பது குறித்து கட்சி நிர்வாகிகளுடன் கமல்ஹாசன் ஆலோசனை நடத்தினார்.
3. கடும் போட்டிக்கு இடையே கமல்ஹாசன் தோல்வி மக்கள் நீதி மய்யம் கூட்டணி ஒரு தொகுதியில் கூட வெற்றி பெறவில்லை
சட்டசபை தேர்தலில் மக்கள் நீதி மய்யம் மற்றும் அதன் கூட்டணி வேட்பாளர்கள் ஒரு தொகுதியில் கூட வெற்றி பெறவில்லை. கமல்ஹாசன் மட்டும் கடுமையான போட்டிக்கு இடையே தோல்வியை தழுவினார்.
4. தேர்தல் முடிவு என்னவாக இருந்தாலும் மக்கள் நல விஷயத்தில் தீவிரமாக செயல்படுவோம் கமல்ஹாசன் பேச்சு
தேர்தல் முடிவு என்னவாக இருந்தாலும் மக்கள் நலம் எனும் விஷயத்தில் மக்கள் நீதி மய்யம் தீவிரமாக செயல்படும் என்று கமல்ஹாசன் பேசினார்.
5. குளச்சல் மீனவர்களின் குடும்பத்துக்கு நிவாரணம் பெற்றுத்தர மத்திய அரசை வலியுறுத்தவேண்டும் முதல்-அமைச்சருக்கு, கமல்ஹாசன் கடிதம்
நடுக்கடலில் கப்பல் மோதி விசைப்படகு கவிழ்ந்த விபத்தில் பாதிக்கப்பட்டுள்ள குளச்சல் மீனவர்களின் குடும்பத்துக்கு உரிய நிவாரணத்தை பெற்றுத்தர மத்திய அரசை வலியுறுத்தவேண்டும் என்று முதல்-அமைச்சருக்கு கமல்ஹாசன் கடிதம் எழுதியுள்ளார்.