‘விவிபேட்’ எந்திரங்களை மோட்டார் சைக்கிளில் கொண்டு சென்ற பணியாளர்கள் மீது கடும் நடவடிக்கை; தலைமை தேர்தல் அதிகாரி தகவல்


‘விவிபேட்’ எந்திரங்களை மோட்டார் சைக்கிளில் கொண்டு சென்ற பணியாளர்கள் மீது கடும் நடவடிக்கை; தலைமை தேர்தல் அதிகாரி தகவல்
x
தினத்தந்தி 6 April 2021 11:56 PM GMT (Updated: 6 April 2021 11:56 PM GMT)

வேளச்சேரியில் ஒரு வாக்குச்சாவடியில் இருந்து 2 ‘விவிபேட்’ எந்திரங்களை சென்னை மாநகராட்சி பணியாளர்கள் மோட்டார் சைக்கிளில் வைத்து கொண்டு சென்றனர்.

அதுபற்றி தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகுவிடம் கேட்டபோது அவர் கூறியதாவது:-

ஆரம்பகட்ட விசாரணையாக மாவட்ட தேர்தல் அதிகாரியிடம் இதுபற்றி போனில் கேட்டறிந்தேன். இந்த தவறை மாவட்ட தேர்தல் அதிகாரியின் 2 கீழ்நிலை பணியாளர்கள் செய்துள்ளனர். இதுகுறித்து விரிவான விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

மாவட்ட தேர்தல் அதிகாரியின் முதல்கட்ட விசாரணையில், அவை வாக்களிக்கப்பட்ட வாக்கு எந்திரங்கள் இல்லை என்று தெரியவந்துள்ளது. இதுகுறித்து, வாக்கு எந்திரம் தொடர்பான தேர்தல் நடத்தை விதிகளின் அடிப்படையில் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.

 


Next Story