மாநில செய்திகள்

வாக்களிக்க வந்த அஜித், விஜய் இடையே இருந்த ஒற்றுமை + "||" + The similarity between Ajith and Vijay who came to vote

வாக்களிக்க வந்த அஜித், விஜய் இடையே இருந்த ஒற்றுமை

வாக்களிக்க வந்த அஜித், விஜய் இடையே இருந்த ஒற்றுமை
சட்டமன்ற தேர்தலில் நேற்று பொதுமக்கள் மட்டுமல்லாது, சினிமா பிரபலங்களும் ஆர்வத்துடன் வந்து வாக்களித்தனர்.
நடிகர் விஜய் சென்னை நீலாங்கரை கபாலீஸ்வரர் நகரில் உள்ள வாக்குச்சாவடிக்கு சைக்கிளில் வந்து வாக்களித்தார். அதேபோல், நடிகர் அஜித்குமார் சென்னை திருவான்மியூரில் உள்ள வாக்குச்சாவடியில் 
மனைவியுடன் வந்து ஓட்டு போட்டார். வாக்களிக்க வந்த நடிகர்கள் அஜித்குமார், விஜய் இடையே ஒரு ஒற்றுமை இருந்ததை காண முடிந்தது. அதாவது, அஜித்குமார் அணிந்திருந்த முககவசம் கருப்பு நிறத்திலும், அதில் உள்ள கயிறு சிவப்பு நிறத்திலும் இருந்தது. இதேபோல், விஜய் ஓட்டிவந்த சைக்கிள் கருப்பு - சிவப்பு நிறத்தில் இருந்தது. இருவருக்கும் இடையே இருந்த ஒற்றுமை இதுதான்.

இதைவைத்து, அவர்கள் இருவரும் தி.மு.க.வுக்கு ஆதரவாக வாக்களித்து இருப்பார்களோ? என்ற சந்தேகம் எல்லோருக்கும் வர வாய்ப்பு இருந்தாலும், யாருக்கு வாக்களித்தோம் என்பது அவர்கள் இருவருக்குமே தெரிந்த பரம ரகசியம்.

தொடர்புடைய செய்திகள்

1. டெல்டா வைரஸ் ஆபத்து: இஸ்ரேலில் மீண்டும் பொது இடங்களில் முககவசம் கட்டாயம்
இஸ்ரேலில் டெல்டா வைரஸ் காரணமாக, மீண்டும், பொது இடங்களில் முககவசம் அணிவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
2. விஜய்யின் 65வது படத்திற்கு பீஸ்ட் என பெயரிடப்பட்டுள்ளது-பர்ஸ்ட் லுக் புகைப்படமும் வெளியீடு
நாளை தனது 47-வது பிறந்த நாளைக் கொண்டாடுகிறார் விஜய். இதையொட்டி விஜய் 65 படத்தின் முதல் பார்வை போஸ்டர் இன்று வெளியிடப்பட்டுள்ளது.
3. 5 வயதுக்கு குறைவான குழந்தைகளுக்கு முககவசம் அணிவிக்க கூடாது - மத்திய அரசு
5 வயது மற்றும் அதற்கு கீழ் உள்ள குழந்தைகள் முக கவசம் அணிய வேண்டிய அவசியமில்லை என பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.
4. டெல்லியில் வாக்குச்சாவடிகளில் தடுப்பூசி போடப்படும் - முதல்-மந்திரி அரவிந்த் கெஜ்ரிவால் அறிவிப்பு
டெல்லியில் வாக்குச்சாவடிகளில் தடுப்பூசி போடப்படும் என்று அம்மாநில முதல்-மந்திரி அரவிந்த் கெஜ்ரிவால் அறிவித்துள்ளார்.
5. பலன் தருமா...? சன்னியாசியின் வேப்பிலை -துளசி கூடிய இயற்கை முககவசம்- வீடியோ
உத்தரப்பிரதேசத்தில் சன்னியாசி ஒருவர் வேப்பிலையால் முககவசம் அணிந்துள்ள வீடியோ இணையத்தில் பகிரப்பட்டு வருகிறது.