மாநில செய்திகள்

கோவை குனியமுத்தூர் காவல்நிலையத்தில் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி மீது வழக்குப்பதிவு + "||" + Case filed against Minister SP Velumani at Coimbatore Kuniyamuthur Police Station

கோவை குனியமுத்தூர் காவல்நிலையத்தில் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி மீது வழக்குப்பதிவு

கோவை குனியமுத்தூர் காவல்நிலையத்தில் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி மீது வழக்குப்பதிவு
தேர்தல் நடத்தை விதிகளை மீறியதாக அமைச்சர் எஸ்.பி.வேலுமணி மீது கோவை குனியமுத்தூர் காவல்நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
கோவை,

கோவை மாவட்டம் தொண்டாமுத்தூர் தொகுதிக்கு உட்பட்ட சுகுணாபுரம் அரசுப்பள்ளியில், அமைச்சர் எஸ்.பி.வேலுமணி நேற்று வாக்குப்பதிவு செய்தார். அப்போது அவர் சென்ற காரில் அதிமுக கொடியுடன் வாக்குச்சாவடிக்கு முன்பு சென்று இறங்கியதாக கூறப்படுகிறது.

ஆனால் தேர்தல் விதிமுறைகளின்படி, வாக்குச்சாவடிக்கு இடது மற்றும் வலது புறத்தில் நூறு மீட்டர் தூரம் வரை வாகனங்கள் செல்வதற்கும், கட்சி சின்னங்களை பயன்படுத்துவதற்கும் அனுமதி இல்லை. இதையடுத்து அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தேர்தல் நடத்தை விதிமுறைகளை மீறியதாக அவர் மீது கோவை குனியமுத்தூர் காவல்நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.