பொதுமக்களிடம் கட்டுப்பாடு இல்லை, ஊரடங்கு நடைமுறையும் அமலில் இல்லை - கொரோனா பரவல் குறித்து உயர்நீதிமன்றம் கவலை + "||" + The public has no control and the curfew is not in place - the High Court is concerned about the spread of the corona
பொதுமக்களிடம் கட்டுப்பாடு இல்லை, ஊரடங்கு நடைமுறையும் அமலில் இல்லை - கொரோனா பரவல் குறித்து உயர்நீதிமன்றம் கவலை
பொதுமக்களிடம் கட்டுப்பாடு இல்லை, ஊரடங்கு நடைமுறையும் அமலில் இல்லை என்று கொரோனா பரவல் குறித்து உயர்நீதிமன்றம் கவலை தெரிவித்துள்ளது.
சென்னை,
தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் மேலும் 3,986 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது.
இதனால் கொரோனா பாதித்தவர்கள் மொத்த எண்ணிக்கை 9,11,110 ஆக உயர்ந்துள்ளது. கொரோனா பரவலை கட்டுப்படுத்த அரசு தீவிர நடவடிக்கை எடுத்த போதிலும் பொதுமக்களின் ஒத்துழைப்பு இல்லாததால் கொரோனா வைரஸ் அளவுக்கு அதிகமாக பரவி வருவதாக கூறப்படுகிறது.
இதன்படி தினந்தோறும் கொரோனா பெருந்தொற்றால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை அதிகரித்து வரும்நிலையில், பொதுமக்களிடம் கட்டுப்பாடு இல்லை, ஊரடங்கு நடைமுறையும் அமலில் இல்லை என்று உயர்நீதிமன்றம் கவலை தெரிவித்துள்ளது.
இதுதொடர்பாக வழக்கு ஒன்றின் விசாரணைக்கு, தலைமை நீதிபதி தலைமையிலான அமர்வில் தமிழக அரசு தலைமை வழக்கறிஞர் காணொளி மூலமாக ஆஜராகி இருந்தார். அப்போது தலைமை நீதிபதி சஞ்சிவ் பானர்ஜி, அரசின் தலைமை வழக்கறிஞர் விஜய் நாரயணனிடம், “தமிழகத்தில் தற்போது கொரோனா பரவல் அதிகரித்து வருகிறது. இதனை மிகத் தீவிர பிரச்சனையாக கருத வேண்டும். ஆனால், எந்த விதமான ஊரடங்கு கட்டுப்பாடுகளும் இல்லை. பொதுமக்களும் முகக் கவசம் அணிவதில்லை. தனி மனித இடைவெளி பின்பற்றுவதில்லை.
மக்களிடம் கட்டுப்பாடு இல்லாதது, கொரோனா பரவலுக்கு அதிக வாய்ப்பாக அமைந்துவிடும். கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் விதமாகவும் நோய் தாக்கத்தை குறைக்கும் வகையிலும் பொதுமக்களுக்கு தேவையான அறிவுரை மற்றும் நோய் தடுப்புக்கு தேவையான மாற்றத்தை பொதுமக்களிடம் ஏற்படுத்தும் வகையில் நடவடிக்கைகளை அரசு எடுக்க வேண்டும்” என்றும் நீதிபதிகள் தெரிவித்தனர்.
கேரள சட்டசபை தேர்தலில் போட்டியிடும் ஆளும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி வேட்பாளர் பட்டியல் நேற்று வெளியிடப்பட்டது. முதல்-மந்திரி பினராயி விஜயன் தர்மடம் தொகுதியில் போட்டியிடுகிறார். நிதி மந்திரி தாமஸ் ஐசக் உள்பட 5 மந்திரிகளுக்கு வாய்ப்பு அளிக்கப்படவில்லை.
கூடுவாஞ்சேரி முதல் கொட்டமேடு வரையிலான 4 வழி சாலை பணி அரைகுறையாக நடைபெறுவதால் பொதுமக்கள் அவதிக்குள்ளாகி உள்ளனர். ஆகவே கலெக்டர் நேரில் ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.