உத்தமபாளையத்தில் தேவர் சிலை அவமதிப்பு பார்வர்டு பிளாக் கட்சியினர் சாலை மறியல்.
தேனி,
தேனி மாவட்டம் உத்தமபாளையம் பைபாஸ் பஸ் நிறுத்தம் பகுதியில் தேவர் சிலை உள்ளது. இந்த சிலையை நேற்று மாலை மர்மநபர் ஒருவர் அவமதிப்பு செய்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்து தகவல் அறிந்த அகில இந்திய பார்வர்டு பிளாக் கட்சியினர், தேவர் சிலை முன்பு சாலை மறியலில் ஈடுபட்டனர். தகவல் அறிந்து வந்த போலீசார் மறியலில் ஈடுபட்டவர்களிடம், தேவர் சிலையை அவமதிப்பு செய்த மர்மநபர் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதி அளித்தனர். இதையடுத்து பார்வர்டு பிளாக் கட்சியினர் மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர்.
ஆத்தூர் தொகுதியில் நடந்த தேர்தல் பிரசாரத்தின்போது அ.தி.மு.க., தி.மு.க.வினர் இடையே மோதல் ஏற்பட்டது. பா.ம.க. நிர்வாகியை கத்தியால் குத்தியதாக கூறப்பட்டதால் அடுத்தடுத்து சாலை மறியல் நடந்தது.
மத்திய அரசின் வேளாண் சட்டங்களை எதிர்த்து பஞ்சாப் மாநிலம் அமிர்தசரஸ் அருகே டெல்லி வழித்தடத்தில் தேவிதாஸ்பூர் என்ற இடத்தில் விவசாயிகள் சிலர் ரெயில் மறியல் போராட்டம் நடத்தி வந்தனர். 169 நாட்களாக நீடித்த இந்த போராட்டத்தை விவசாயிகள் நேற்று வாபஸ் பெற்றனர்.
கிருஷ்ணகிரியில் டயரில் பெட்ரோல் ஊற்றி மர்ம நபர்கள் பெரியார் சிலைக்கு தீ வைத்து சென்றனர். இதை கண்டித்து பொதுமக்கள், அரசியல் கட்சியினர் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
உதவி தொகையை உயர்த்தி வழங்கக்கோரி மாற்றுத்திறனாளிகள் மயிலாடுதுறையில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதில் 15 பெண்கள் உள்பட 55 பேரை போலீசார் கைது செய்தனர்.