மாநில செய்திகள்

முகம் சிவந்துவிட்டது கொரோனா தடுப்பூசி போட்டதால் பாதிப்பு நடிகர் பார்த்திபன் தகவல் + "||" + Actor Parthiban informed that the face is red due to corona vaccination

முகம் சிவந்துவிட்டது கொரோனா தடுப்பூசி போட்டதால் பாதிப்பு நடிகர் பார்த்திபன் தகவல்

முகம் சிவந்துவிட்டது கொரோனா தடுப்பூசி போட்டதால் பாதிப்பு நடிகர் பார்த்திபன் தகவல்
முகம் சிவந்துவிட்டது கொரோனா தடுப்பூசி போட்டதால் பாதிப்பு நடிகர் பார்த்திபன் தகவல்.
சென்னை, 

கொரோனா இரண்டாவது அலை நாடு முழுவதும் வேகமாக பரவி வருகிறது. இதனால் சில மாநிலங்கள் இரவு நேர ஊரடங்கை அமல்படுத்தி உள்ளன. இன்னொருபுறம் கொரோனாவில் இருந்து மக்களை பாதுகாக்க தடுப்பூசி போடும் பணிகளும் நடக்கின்றன. அரசியல் தலைவர்கள், நடிகர்-நடிகைகள் உள்ளிட்ட பிரபலங்களும் பொதுமக்களும் தடுப்பூசி போட்டு வருகிறார்கள்.

இந்த நிலையில் அனைவரும் தவறாது ஓட்டு போட வேண்டும் என்று விழிப்புணர்வு ஏற்படுத்தி வந்த நடிகர் பார்த்திபன் ஓட்டு போடவரவில்லை. கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்ட தனக்கு அலர்ஜி ஏற்பட்டதால் ஓட்டுபோட முடியவில்லை என்று தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து டுவிட்டரில் பார்த்திபன் வெளியிட்டுள்ள பதிவில், ‘‘‘வணக்கமும் நன்றியும். ஜனநாயக கடமையை சீராக செய்த சிறப்பானவர்களுக்கு. வருத்தமும் இயலாமையும் இரண்டாம் தவணை கொரோனா தடுப்பூசி எடுத்துக்கொண்ட எனக்கு திடீரென ஒவ்வாமையில் கண், காது, முகம் சிவந்து விட்டது. டாக்டருக்கு போட்டோ அனுப்பியே மருத்துவம் செய்து கொண்டேன். தடுப்பூசி அவசியம் எடுத்துக்கொள்ள வேண்டும். மிக சிலருக்கு மட்டுமே இது போன்ற பிரச்சினை. அதுவும் எனக்கு ஏற்கனவே அலர்ஜி பிரச்சினைகள் இருந்ததால் மட்டுமே இப்படி ஆனது’’ என்று கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

1. சட்டமன்ற தேர்தல் 11 ஆவணங்களில் ஒன்றை காட்டி வாக்களிக்கலாம் கலெக்டர் தகவல்
சட்டமன்ற தேர்தலையொட்டி 11 ஆவணங்களில் ஒன்றை காட்டி வாக்களிக்கலாம் என்று கலெக்டர் பொன்னையா தெரிவித்துள்ளார்.
2. காஞ்சீபுரம் மாவட்டத்தில் 80 வயதுக்கு மேற்பட்டோரிடம் இருந்து 1,593 தபால் வாக்குகள் பெறப்பட்டுள்ளது கலெக்டர் தகவல்
காஞ்சீபுரம் மாவட்டத்தில் 80 வயதிற்கு மேற்பட்டோரிடம் இருந்து 1,593 தபால் வாக்குகளும், மாற்றுத்திறனாளி வாக்காளர்களிடம் இருந்து 363 தபால் வாக்குகளும் பெறப்பட்டு பாதுகாப்பு அறையில் வைக்கப்பட்டுள்ளதாக மாவட்ட தேர்தல் அதிகாரியும், மாவட்ட கலெக்டருமான மகேஸ்வரி ரவிக்குமார் தெரிவித்துள்ளார்.
3. முதியோர், மாற்றுத்திறனாளிகள் 791 பேர் தபால் ஓட்டு போடவில்லை மாவட்ட தேர்தல் அதிகாரி தகவல்
சென்னையில் தபால் வாக்குக்கு விண்ணப்பித்த முதியோர், மாற்றுத்திறனாளிகளில் 791 பேர் ஓட்டு போடவில்லை என்றும், அவர்களுக்கு இனி மறுவாய்ப்பு கிடையாது என்றும் மாவட்ட தேர்தல் அதிகாரி தெரிவித்துள்ளார்.
4. டெல்லியில் விவசாயிகள் போராட்டம்: பாராளுமன்றத்தை நோக்கிய பேரணியில் தமிழக விவசாயிகள் பங்கேற்பு பி.ஆர்.பாண்டியன் தகவல்
விவசாய திருத்த சட்டங்களை திரும்ப பெற வலியுறுத்தி டெல்லியில் விவசாயிகள் போராட்டம் நடத்தி வருகின்றனர். அதன் ஒரு பகுதியாக விவசாயிகள் நடத்த உள்ள பாராளுமன்ற முற்றுகை பேரணியில் தமிழக விவசாயிகள் பங்கேற்போம் என்று பி.ஆர்.பாண்டியன் தெரிவித்து உள்ளார்.
5. தமிழக சட்டமன்ற தேர்தலில் போட்டியிடுபவர்களில் 652 பேர் கோடீஸ்வரர்கள்; 106 பேர் எழுத படிக்க தெரியாதவர்கள் ஆய்வில் தகவல்
தமிழக சட்டமன்ற தேர்தலில் போட்டியிடுபவர்களில் 652 பேர் கோடீஸ்வரர்கள் என்றும், 106 பேர் எழுத படிக்க தெரியாதவர்கள் என்றும் ஜனநாயக சீர்திருத்த சங்கம் நடத்திய ஆய்வு அறிக்கையில் தெரியவந்துள்ளது.