கொரோனா பரவல் அதிகரிப்பு பொதுமக்கள் முக கவசம் அணிவது இல்லை ஐகோர்ட்டு வேதனை


கொரோனா பரவல் அதிகரிப்பு பொதுமக்கள் முக கவசம் அணிவது இல்லை ஐகோர்ட்டு வேதனை
x
தினத்தந்தி 7 April 2021 11:03 PM GMT (Updated: 7 April 2021 11:03 PM GMT)

கொரோனா பரவல் அதிகரிப்பு பொதுமக்கள் முக கவசம் அணிவது இல்லை ஐகோர்ட்டு வேதனை.

சென்னை, 

தமிழகத்தில் கொரோனா பரவல் தற்போது அதிகரித்து வருகிறது. இந்நிலையில் ஒரு வழக்கு விசாரணைக்கு தலைமை நீதிபதி சஞ்சீவ் பானர்ஜி, நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி ஆகியோர் கொண்ட முதல் அமர்வில் அட்வகேட் ஜெனரல் விஜய் நாராயண் ஆஜராகி இருந்தார்.

அவரிடம், ‘தமிழகத்தில் தற்போது கொரோனா பரவல் அதிகரித்து வருகிறது. இதனை மிக தீவிர பிரச்சினையாக கருத வேண்டும். ஆனால், எந்தவிதமான கட்டுப்பாடுகளும் இல்லை. பொதுமக்களும் முக கவசம் அணிவதில்லை. தனிமனித இடைவெளியைப் பின்பற்றுவதில்லை’ என நீதிபதிகள் வேதனை தெரிவித்தனர்.

‘கொரோனா பரவலை கட்டுப்படுத்தும்விதமாகவும், நோய் தாக்கத்தை குறைக்கும் வகையிலும் பொதுமக்களுக்கு தேவையான அறிவுரைகளை அரசு வழங்க வேண்டும். நோய்தடுப்புக்கு தேவையான மாற்றத்தை ஏற்படுத்தும் வகையில் நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்’ என்றும் நீதிபதிகள் கருத்து கூறினர்.

Next Story